1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் ( Liberation Tigers of Tamil Ealam-LTTE ) இயக்கம் 1980களில் ஏனைய இயக்கங்களை பிரதான அரங்கில் இருந்து முடக்கியதன் மூலம் தனிப்பெரும் இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. அத்துடன் 1990களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் முட்டுமே என்கின்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தியத்துடன் மிதவாத தமிழ் அரசியலையும் முடக்கத்தொடங்கினர். வெறுமனே போராட்ட இயக்கம் என்கின்ற வடிவத்தில் இருந்து மாறி அரசியல் இயக்கமாகவும் தம்மை வெளிக்காட்ட முயன்றனர். புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலானது ஒரு கட்டத்தில் இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு என்னும் இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசியலையே தீர்மாணிக்கின்ற சக்தியாக உருப்பெற்றதுடன் இந்த நாட்டின் இருபது மில்லியன் மக்களின் தலைவிதியை தீர்மாணிக்கின்ற ஒரு சக்தியாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாகவும் வழிவகுத்தது.இலங்கை அரசியல், பொருளாதார, சமூக அமைப்பை மட்டுமல்லாமல் அரசு படைகளுடனான் போரின் போக்கு, போர்நிறுத்தம், அரசுடனான சமாதான பேச்சுக்கள் என்பவற்றைக்கூட அவரே தீர்மாணித்த்திருந்தார்.
(“பின்னப்பட்ட சதிவலை (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)