பற்குணம் புத்தளத்தின் பின்பு மன்னாருக்கு மாற்றலாகி வந்தார்.மன்னார் மக்கள் வித்தியாசமானவர்கள் .வவுனியா போன்று சாதிரீதியான முரண்பாடுகள் எழவில்லை.மேலும் அங்கே மூதூர் ்மஹ்ரூப் மாவட்ட அமைச்சராக இருந்தார்.அவர் பதவிக்கு வருமுன்பே அறிமுகமானவர்.அவர் பற்குணத்தின் வரவை விரும்பி இருந்தார்.அதிகாரத்தில் இருந்தும் தொல்லை கொடுக்கவில்லை. இதன் காரணமாமாக ஐ.தே.க அமைப்பாளர் ரகீம் தலையிடும் தவிர்க்கப்பட்டது .
Month: November 2016
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் அவர்கள் நாடுதிரும்பும் அகதிகள் விடயத்தில் அக்கறையாக உள்ளார். அதே போல் கிழக்கு மகாண சபையும் அக்கறை கொள்ள வேண்டும். வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்கள் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களுக்கு தமிழகத்தில் இருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாக, அவர்கள் தாயகம் திரும்பியதும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அனுப்பிய கடிதம் 2.11.16 தேனீ வலைதளத்தில் பிரசுரமாகி இருந்தது. அவரது இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
(“இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
வட மாகாண சபையில் சுண்டைக்காய் கால் பணம்! சுமை கூலி?
வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாமா விஜயம் பட, பாலையாவின் பாடல் என் நினைவில் வர காரணமானார், மாண்புமிகு வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன். முதல்வர் தலைமையில் அவர் அரங்கேற்றிய, மர நடுகை மாத தொடக்க விழா அரங்கேற்றத்தை தான் குறிப்பிடுகிறேன். மரம் வளப்போம் மழை பெறுவோம், பழம் பறிப்போம் பயன் பெறுவோம் என்பதில், எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதற்கு விழா எடுத்து, பணம் செலவழிப்பதில் பயன் இல்லை. உடன்பாடும் இல்லை.
(“வட மாகாண சபையில் சுண்டைக்காய் கால் பணம்! சுமை கூலி?” தொடர்ந்து வாசிக்க…)
நகரமயமாதல் நூற்றாண்டு: நகரங்கள் எத்திசை செல்கின்றன?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கிராமங்களில் தான் அழகியலும் வாழ்வியலும் இரண்டையும் ஒருங்கே இணைக்கும் மனிதமும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். நகரங்கள் மெதுமெதுவாக நரகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கிராமங்களிலும் ஊர்களிலும் இருந்து மக்கள் நகரங்களைத் தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மாநகரங்கள் ஒருவித களிப்பூட்டும் கவர்ச்சியுடையவையாகக் காட்சியளிக்கின்றன. இவையனைத்தும் நகரங்களைப் புதிய திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அத்திசை எதுவென்பது தான் இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
(“நகரமயமாதல் நூற்றாண்டு: நகரங்கள் எத்திசை செல்கின்றன?” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம் ஏனோ?
(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)
இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து, முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு 26 ஆண்டுகள், சில நாட்களுக்கு முன்னர் பூர்த்தியடைந்தன. வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் பூர்த்தியாகும் போது இருப்பதைப் போன்று, அந்த வாரத்தில் அதுபற்றிய பேச்சுகளும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன. இம்முறையும், கலந்துரையாடலொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வழக்கமாகவும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்ற போதிலும், இம்முறை இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதம பேச்சாளராக இருந்தார். அக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.சுமந்திரனும், அங்கு உரையாற்றினார்.
(“முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம் ஏனோ?” தொடர்ந்து வாசிக்க…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டமை
“யாழ்ப்பாணமும் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளும் ஒரு நீண்ட போரிலிருந்து இப்போது தான் மீண்டு வருகின்றன. இந்தப் போரின் போது இந்தப் பிராந்தியத்திலே வாழ்ந்த மக்கள் சொல்லொணாத் துயரங்களையும், இழப்புக்களையும் அனுபவித்திருந்தார்கள். தமது வாழ்க்கை, ஆட்சி, அரசியல், எதேச்சாதிகாரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஆயுதத்தினதும் வன்முறையினதும் ஒடுக்கும் அரசியல் என்பன பற்றி மீள் மதிப்பீடு செய்வதற்கான ஒரு சிறு வெளியினைத் தானும் போருக்குப் பிந்தைய காலம் இந்த மக்களுக்குக் கொடுத்திருந்தது. 2015ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் ஜனநாயக வெளியின் பரப்பு ஒப்பீட்டளவிலே மேலும் அதிகரித்தது. சில உரையாடல்களையும், விவாதங்களையும், எதிர்ப்பு முன்னெடுப்புக்களையும் இந்தச் சூழலிலே மக்கள் மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.
(“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டமை” தொடர்ந்து வாசிக்க…)
NLFT விஸ்வானந்ததேவன் :
(நல்லையா தயாபரன்)
பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986 திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு, முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான்நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன்.
மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள்.
அன்று கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விஜிதரன் பல்கலைக்கழக மாணவன் இல்லையா?
இக் காணாமலாக்கலுக்கு காரணமான அரசியல் எது?
கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விஜிதரனை விடுதலை செய்யும்படி எழுந்த மக்கள் குரல்வளையை திருகி எழுந்த குரல்களை அச்சுறுத்தி அடக்கிய அரசியல் எது?
விஜிதரனை விடுதலை செய்யும்படி சாகும்வரை உண்ணாவிரதமிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு மரணதண்டனை தான் பரிசு என பட்டியல் வைத்து அந்த பட்டியலில் இருந்த பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனை பின்தொடர்ந்து நடுத்தெருவில் நாயைப்போல சுட்டுக்கொன்றவர்கள் அரசியல் எது?
(“மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள்.” தொடர்ந்து வாசிக்க…)
‘மாணவர் படுகொலை விசாரணையை ஒரு வாரத்துள் முடிக்குக’ – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
யாழ்ப்பாணப் பல்கலைக் கழககத்தில் கல்வி பயின்றுவந்த மாணவர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவுறுத்தி, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்தார்.
இலங்கையை அமெரிக்காவிடம் விற்ற முயலும் ரணில் அரசும் எதிர்கட்சிகளும்
ஜேஆர் காலத்திற்கு பின்பு இலங்கையில் தனக்கு வேண்டி ஒரு ஆளை அமெரிக்கா, இதன் நேச நேட்டோ அமைப்பு நாடுகளினால் இலங்கையில் தலமைப் பொறுப்பில் ஏற்படுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. இதன் வெளிப்பாடுதான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒருவரை முன்னிலைப்படுத்தி இதற்கு கீழ் ரணில் விக்கரமசிங்காவை உருவாக்க ரணிலின்(ஐ.தே. கட்சியின்) 19 வது தோல்விக்கு பின்னரான ஒரு வெற்றியை எற்படுத்திய சூட்சமத்தின் பின்புலம் ஆகும். இதற்கு கொழும்பில் பாவித்த அலுவலகம் சாந்தி சச்சிசானந்தத்தின் அலுவலகம். இயல்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சீன சார்பு இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கிற்கும் இந்திய ஆதரவு நிலைப்பாட்டையும் உடைய வெளிநாட்டுக் கொள்கையை உடையது.
(“இலங்கையை அமெரிக்காவிடம் விற்ற முயலும் ரணில் அரசும் எதிர்கட்சிகளும்” தொடர்ந்து வாசிக்க…)