விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வினையொட்டிய துண்டுப்பிரசுரத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் பாரிஸ் கார் டு( Gare du Nord )நோர்ட் புகையிரத நிலையத்தின் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் தமிழர் வர்த்தக நிலையங்கள் கொண்ட லாச்சப்பல் வெளிச்செல்லும் நுழைவாயிலில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் விநியோகித்துக் கொண்டிருந்த அங்கு வந்த மற்றொரு சாரார் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மாவீரர் நாள் நிகழ்வினையொட்டிய துண்டுப் பிரசுரத்தை அதே நுழைவாயிலில் விநியோகிக்க முற்பட்டனர். இந்த வேளையில்; இரு சாராருக்கும் இடையேயான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இறுதியில் வாள்வவெட்டு சம்பவமாக முடிவடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் முதற் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
Month: November 2016
கார்த்திகை மாத நினைவு…?.
காவோலைகள் பற்றவைத்த தீயில் தம்மை ஆகுருதியாக்கிய, குருத்தோலைகள் எரிந்த எம் இன வரலாற்றின் கறுப்பு அத்தியாயம், ‘ஈழ விடுதலை போராட்டம்’. எந்தவித தயாரிப்புகளும் இன்றி, எவரின் ஆதரவும் இன்றி வெறுமனே வெற்றுக் கோசங்களும், வீராப்பு பேச்சுகளும் மட்டும் எம் இனத்துக்கு விடுதலையை பெற்றுத்தந்துவிடும் என்பதுபோல செயற்பட்ட, மூத்தோர் மூட்டிய தீயால் கருகிப்போன இளையவர் நினைவு கூரல் மாதம் கார்த்திகை மாதம்.
Rothschild & Russian Revolution
Karl Marx’s effort to derive the market price of goods from their value, the labor that went into them, was a vestige of the 19th-century economic theories of David Ricardo and John Stuart Mill. By the time Marx died, economists had already given up trying to relate price to value and were beginning to understand that value was a chimera. With the growing dominance of technology, it had become impossible to locate value in the time required to produce goods, as Marx, following Ricardo and Mill, had tried to do. Machines can make products incredibly fast; but these products aren’t worth any less than if workers had spent days toiling at them, as Marx’s theory suggests. Marx’s essential idea, influenced by Ricardo, was that capitalism would become less and less profitable and that its downward spiral toward the abyss of deflation—lower prices, lower profits—would be followed by worldwide revolution. Instead, capitalism has become vastly more profitable.
கால வெள்ளம் சுழித்து சென்று விட்டது. நினைவுகள் அழிவதில்லை தோழர் நாபா 65 வது பிறந்த நாள்
எந்த அறங்கள்- தார்மீக விழுமியங்கள் பிரதானமாக மானிட விடியலுக்குத் தேவையோ -அவசியமோ அதில் தோழர் நாபா உறுதியாகவும் தெளிவாகவும் நின்றிருந்தார். சமூகத்தின் எந்த பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டவர்களோ- சுரண்டப்படுபவர்களோ- ஒடுக்கப்படுபவர்களோ அவர்களுடன் அவர் தன்னை அடையாளப்படுத்தினார். எந்தப்பிரிவினர் ஒடுக்கப்படுபவர்களுக்காக போராடினார்களோ குரல் கொடுத்தார்களோ அவர்களுடன் அவர் தோழமை கொண்டார்.
தோழர் நாபாவும்……! தோழர் விஷ்வாவும்…..!!
(தோழர் நாபாவின் பிறந்த தினம் இன்று அவரின் ஞாபகங்களை மீட்டெடுத்து தோழர் விஸ்வானந்ததேவனின் புத்தக வெளியீட்டில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் முக்கியஸ்தர் தோழர் ஜேம்ஸ் புத்தக மதிப்பீட்டுரை)
விஷ்வா என்ற இடதுசாரிப் தமிழீழப் போராளி
(தோழர் ஜேம்ஸ்)
வடமராட்சிக் கல்லுவம், கண்டிப் பெரதெனியா என்று தனது இடதுசாரி சிந்தனை ஊற்றையும்…. செயற்பாட்டையும் தன்னகத்தே கொண்டு உருவான சமூகப் போராளியின் நினைவு கூறலை…சிலர் கூடித் தேர் இழுக்காமல்…. பலர் கூடித் தேர் இழுத்தால் அசையாத் தேரும் நகரும் என்பதை கற்றுணர்ந்து இங்கு 25 பேர் கூடி உருவாக்கிய தேர் இது… வரலாற்றுத் தேர் இது… புத்தக வடிவில் வந்துள்ளது. தோழர் விசுவானந்துதேவனின் நினைவு நூலாக பரிணமித்திருக்கின்றது. இந்தத் தேரை இழுக்க வடத்தை பிடிக்கும் எமக்குள் சாதி.. மதம்… இனம்…. மோழி… என்ற வேறுபாடுகள் இல்லை. நாம் அனைவரும் மனித குலத்தின் உறுப்பினர்கள் மனித நேயத்தையும், சம தர்ம சகவாழ்வையும் உறுதிப்படுத்த ஏதோ ஒருவகையில் இணைந்தவர்கள்…. பிணைந்தவர்கள்….. இந்த வடத்தில் கரம் பதித்தவர்கள் தமக்குள் பிரிவினை பார்பதில்லை, மாறாக ஐக்கியத்தை வலியுறுத்துபவர்கள். இந்த வடத்தில் கரம் பதிக்க 26 வது ஆளாக நானும் விரும்பினேன். வடம்பிடிக்க மறுக்கும் ஆதிக்க மனப்பான்மையற்ற இவர்களிடத்தும் எனது கரங்களில் மையிட்டு சில கிறுக்கல்கள் செய்ய நானும் விரும்பினேன். ஆனாலும் வாய்ப்புக்கள் தற்செயலாகத் தவறிவிட்டது. சிறிது வருத்தம்தான். ஆனாலும் மதிப்புரை வழங்க வாய்ப்பு வழங்கியமைக்கு வணங்கி வாழ்த்தி நிற்கின்றேன்.
(“தோழர் நாபாவும்……! தோழர் விஷ்வாவும்…..!!” தொடர்ந்து வாசிக்க…)
அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்
அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
(“அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்” தொடர்ந்து வாசிக்க…)
வீடு திரும்புகின்றார் ஜெயலலிதா?
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று சனிக்கிழமை (19) மாலை 5 மணிக்குப் பின்னர், தனி அறைக்கு மாற்றப்படுன்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், முதல்வருக்கு ஊட்டச்சத்துத் தேவைப்படுவதால் உயர் ஊட்டச்சத்துகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வப்போது தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படு வருவதாகவும், அவர், விரும்பும் போது வீடு திரும்பலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கவுண்ட்டவுண்’ ஆரம்பம் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
உண்மையின் வலிமை பலபேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் உண்மையை நம்புவதைவிட பலபேர் பொய்யை நம்புகின்றனர். ஒருவிடயம் பொய் என்று தெரிந்தாலும் அதனை உண்மைபோலப் பேசி, மற்றவர்களை ஏமாற்றி விடலாம் எனச் சிலர் நம்புகின்றனர். எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும், அவனால் எவ்வளவுதான் கெட்டித்தனமாகச் சொல்லப்பட்டாலும், பொய் தனது சுயரூபத்தை விரைவில் வெளிப்படுத்திவிடும்.
(“‘கவுண்ட்டவுண்’ ஆரம்பம் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்” தொடர்ந்து வாசிக்க…)
கிழக்கில் தற்போது நிகழும் மறைக்கமுடியாத சமூக அவலங்கள்….
(அஜந்தா ஞானமுத்து)
கடந்த பலவருடங்களாக போரின் பின்பும் முன்பும் கிழக்குமாகாணம் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் இனரீதியாகவும் காணிஅத்துமீறல்கள் கல்வி பின்னடைவு மற்றும் கலாசார சீரழிவுகளினால் மிகவும் பாதிக்கப்பட்டு எமது இனம் சின்னா பின்னப் பட்டுப்போயுள்ளதை நாம் அறிவோம். போரில் வென்று அரசாங்கம் ஒட்டுமொத்த பிரசைகளும் சமமாகவும் சமதர்மநீதியின் கீழ் நல்லாட்சி அரசில் சகலஉரிமைகளும் இலங்கை மக்களுக்கு வாழ வழிகிடைக்கும் என்னும் உத்தரவாதத்துடன் பத்தாண்டுகள் கடந்து விட்டன.
(“கிழக்கில் தற்போது நிகழும் மறைக்கமுடியாத சமூக அவலங்கள்….” தொடர்ந்து வாசிக்க…)
தென்கொரியா: கிளர்ந்தனர் மக்கள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அன்றாட நிகழ்வல்ல. அதிலும் மிகுந்த பணிவையும் அமைதியையும் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வீதியில் இறங்குவதென்பது ஒரு வலிய செய்தியை எப்போதுமே சொல்லும். மிகவும் வளர்ச்சியடைந்த சமூகங்கள் எனச் சொல்லப்படும் சமூகங்களிலிருந்து மக்கள் போராட்டங்கள் எழும்போது, அந்த நாடுகள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்ட விம்பங்கள் உடைந்து நொருங்குவது இயல்பு. இதனால்தான், அவ்வாறான நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது, அவை ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு மறைக்கப்படும் போராட்டங்கள் கவனத்தை வேண்டுவருன. ஏனெனில், அது அதிகார வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குகிறது.