ஐ.நாவின் கேள்வியால் ஆட்டங்கண்டது அரசாங்கம்

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் உள்ள சித்திரவதைக் கூடங்களை, இலங்கை அரசாங்கம் விசாரித்ததா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக, சித்திரவதைக்கெதிரான செயற்குழுவின் 59ஆவது மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த அமர்வில், அச்செயற்குழுவின் தலைவர் ஜென்ஸ் மொட்விக், உப தலைவர் பெலிஸ் காயெர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை முன்வைத்ததோடு, கேள்விகளையும் முன்வைத்தனர்.

(“ஐ.நாவின் கேள்வியால் ஆட்டங்கண்டது அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 76 )

பற்குணம் முல்லைத்தீவு வந்தபின் நடேசபிள்ளையின் நிர்வாகத்துக்கு தடையாக இருந்த வர்த்தகரையே குறிவைத்தார்.அந்த வர்த்தகர் அரச அதிபரான ஞானச்சந்திரனுடன் நெருக்கமான நட்பில் உள்ளவர்.எனவே கொஞ்சம் நிதானமாகவே செயற்பட வேண்டியிருந்தத நடேசபிள்ளையை எந்தப்பாணியில் மிரட்டி அவரின் நிர்வாகத்துக்கு இடையூறு பண்ணினானோ அதே பாணியில் அவனுக்கு பதிலடி கொடுக்க விரும்பினார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 76 )” தொடர்ந்து வாசிக்க…)

நாபா எனும் மனிதம் பிறந்த தினம் நவம்பர் 19!

ஒருவன் தனக்காக மட்டும் வாழ்ந்தால் சுயநலம். தன் உறவுகளுக்காக வாழ்ந்தால் பாசம். தன் இனத்துக்காக என வாழ்ந்தால் தியாகம். என்வரையில் நான் கடந்துவந்த பாதையில் சந்தித்த மனிதர்களில் பலர், நான் உட்பட சுயநலம் மற்றும் பாசத்துக்குத்தான் முன்னுரிமை கொடுத்தோம். ஆனால் தன் சுயநலம் விட்டு, பாசத்தை துறந்து, இனத்துக்காக வாழ்ந்து, உயிர் கொடை ஈய்ந்தவர் நாபா. அந்த மனிதநேயன் பிறந்த தினம் நவம்பர் 19.

(“நாபா எனும் மனிதம் பிறந்த தினம் நவம்பர் 19!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதை

“போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன். போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்.” (பக்கம் 7)

(“தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதை” தொடர்ந்து வாசிக்க…)

கேள்விகளை எழுப்பியுள்ள ட்ரம்ப்பின் புதிய நியமனம்

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அவரது முதற்கட்ட நியமனங்களை மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகைக்கான இரண்டு பிரதான நியமனங்களே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவரது நியமனம், கேள்விகளை எழுப்பியுள்ளது.

(“கேள்விகளை எழுப்பியுள்ள ட்ரம்ப்பின் புதிய நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்கள் பற்றிய இன்னொரு பார்வைக்கான தேவையை உணர்த்துகின்றன.

(“அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

தவராசாவை நீக்க டக்ளஸ் முடிவு!

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து திரு தவராசா நீக்கப்பட்டு திரு தவநாதன் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, ஈ பி டி பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சோசலிச முன்னணி (UPFA) செயலாளருக்கு கடிதமூலம் வைத்துள்ளார். அதற்கான காரணமாக இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவரே எதிர்கட்சி தலைவர் பதவி வகித்ததால் இனிவரும் காலம் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிக்கு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

(“தவராசாவை நீக்க டக்ளஸ் முடிவு!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க ஜனநாயகம் இருண்ட யுகத்தைநோக்கி

(சுகு-ஸ்ரீதரன்)

அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்மின் வெற்றி இனவாதம் -நிறவாதம் -பெண்களை இழிவுசெய்தல் -கீழ்மைப்படுத்துதல் அதிகார அகங்காரம் -புவி வெப்பமாதல் தொடர்பான அலட்சியம்-இராணுவவாதம் -ஏகாதிபத்தியவாதம் எல்லாம் கலந்து வெள்ளை குறுந்தேசியவாதத்தின் கதம்பமாகவே அமைந்திருக்கிறது.

(“அமெரிக்க ஜனநாயகம் இருண்ட யுகத்தைநோக்கி” தொடர்ந்து வாசிக்க…)

காலைக்கதிர் உறவா? எமக்குள் மேலும் பிரிவா?

நண்பர்களின் ஆசியுடன் வடக்கில் வீசப்போகிறது புதிய தினசரி. நட்புக்கு அழகு எந்த நிலையிலும் நண்பனை கைவிடாமை, துணைநிற்றல். அதேவேளை நண்பன் செய்யும் தவறுகளை நேர்மையாக விமர்சித்தல், உரிமையுடன் கண்டித்தல் என்பதுவும் நட்பின் கடமையே. கடந்த காலத்து நிகழ்வுகளை நினைவில்கொள்ளும் எவரும் ஆசியுரை வழங்கி, கல்லூரி நண்பர் செயலை ஏற்புடையது என ஏற்கமாட்டார். பாடசாலை கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்தவர், நெருக்கடியான காலகட்டத்தில் கூட பத்திரிகை நடத்தியவர் என, அவர்தம் சிறப்பை சிலாகிக்கும் அதே வேளை, கூட இருந்தவர் குழிபறிப்பால் வீழ்த்தப்பட்டார் வித்தியாதரன் என்று கூறுவது சற்று நெருடலான விடயம்.

(“காலைக்கதிர் உறவா? எமக்குள் மேலும் பிரிவா?” தொடர்ந்து வாசிக்க…)

அம்பானியின் மூடிக்கிடந்த பெட்ரோல் பங்க்குகள் திடீர் என்று திறக்க காரணம் என்ன?

இதுதான் பெட்ரோல் நிலையத்தை ஏன் தேர்வு செய்தார்? கோடிக்கணக்கான லிட்டர்கள் விற்றாதக சொல்லி 500.1000 நோட்டுகள் மாற்றப்படும். அம்பானி போன்ற முதலாளிகளுக்காதான் இந்த ஏற்பாடு. கருப்பு பணம்லாம் ஒன்றும் ஒழியாது, வெளியேயும் வராது. மாறாக கருப்பு பணம் வெள்ளை பணமாக மாறும். இதனால்தான் முதலாளிகள், பணமுதலைகள் வரவேற்கின்றன. 1000, 500ஐ மாற்ற முடியாமல் நம்மை போன்ற நடுத்தர வர்க்கமும், ஏழைகளும்தான்.

(“அம்பானியின் மூடிக்கிடந்த பெட்ரோல் பங்க்குகள் திடீர் என்று திறக்க காரணம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)