அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?

கடந்த வெள்ளிக் கிழமை Time FM வானொலியில் ‘வெட்ட வெளிச்சம்’ கலந்துரையாடலில் வழமை போல் நானும் கலந்து கொண்டேன். தலைப்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள் இவர்ளின் வெற்றியில் எமக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது எனது ஆதரவு பசுமைக்கட்சிக்கு என்றும் ஆனால் கிலாரி அல்லது ரம்ஸ் இருவரில் ஒருவரே வெல்லக் கூடிய வாய்புக்கள் இருப்பதினால் எனது வெற்றிக்கான எதிர்வு கூறல் கிலாரி கிளிங்ரன் பக்கமே நின்றது. மற்ற மூவரும் ரம்ஸ் பக்கமே நின்றனர் கூடவே ரம்ஸ் இன் வெற்றி கிலாரியின் வெற்றியை விட நன்மை பயக்குமாக அமையும் என்றும் வாதிட்டனர்.

(“அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?” தொடர்ந்து வாசிக்க…)

கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏழு கட்சிகள் தீர்மானம்

வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்குவோருக்கு எதிராகவும், அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ். குடாநாட்டைப் பதற்றசூழலில் தொடர்ந்து வைக்க முயலும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலை விரிவாக ஆராய, ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்து, ரெலோ நடத்திய இரண்டு மணிநேரச் சந்திப்பின் பின்னர், இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

(“கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏழு கட்சிகள் தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)

E.P.D.P. ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை – டக்ளஸ் தேவானந்தா…!

ஈழமக்கள் ஜனநாயக கட்சி உட்பட புலிகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தமிழ் அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையிலேயே அவர்களது தற்பாதுகாப்பிற்காக கடந்த கால அரசுகள் ஆயுதங்களை வழங்கியிருந்தன. அவ்வாயுதங்கள் 2002 ஆம் அண்டு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் போர்நிறுத்த கண்காணிப்பு குழு முன்னிலையில் அரசிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டன. நாம் ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

(“E.P.D.P. ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை – டக்ளஸ் தேவானந்தா…!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை! தேசியவாதிகள் எங்கே?

இந்திய மேலாதிக்க அதிகாரத்தினதும், அமெரிக்க ஏகாதிபத்திய அணியினதும் அடிமை நாடாக முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கையில், மக்கள் மத்தியில் கலாசார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே நுகர்வுக் கலாசார வெறி போருக்குப் பின்னான சூழலில் மக்களை ஆக்கிரமித்துக்கொள்ள, இந்திய அரசு தனது கலாச்சார ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

(“யாழ்ப்பாணத்தில் கோலிப் பண்டிகை! தேசியவாதிகள் எங்கே?” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடு….?

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடுகள் உண்டு என்பதை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களது கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் ஜனநாயக ரீதியிலான கருத்து முரண்பாடே அதுவெனவும் அவர் தெரிவித்தார்.

(“வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடு….?” தொடர்ந்து வாசிக்க…)

எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வையும் முன் நின்று ந‌ட‌த்திய‌வ‌ர் ஆவா குழு உறுப்பினர்

தீவிர‌ புலி ஆத‌ர‌வு அர‌சிய‌ல் பேசும் த‌மிழ் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணிக்கும், இராணுவ‌ புல‌னாய்வுத் துறைக்கும் தொட‌ர்பிருக்க‌லாம் என‌ நீண்ட‌ கால‌மாக‌ ச‌ந்தேக‌ம் இருந்த‌து. த‌ற்போது அது ஆதார‌பூர்வ‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. யாழ்ப்பாண‌த்தில் ஆவா குழுவை சேர்ந்த‌ அறுவ‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கொழும்பில் இருந்து சென்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத த‌டுப்புப் பொலிஸ் விசேட‌ பிரிவின‌ரின் விசார‌ணைக‌ளின் பின்ன‌ரே கைது ந‌ட‌வ‌டிக்கை இட‌ம்பெற்ற‌து. கைது செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒருவர் இராணுவ‌த்தை சேர்ந்த‌வ‌ர். இன்னொருவ‌ர் சைக்கிள் க‌ட்சி என்று அழைக்க‌ப் ப‌டும் க‌ஜேந்திர‌குமார் த‌லைமையிலான‌ த‌மிழ்த் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணியின் செய‌ற்பாட்டாள‌ர். இவ‌ர் எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வையும் முன் நின்று ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

(“எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வையும் முன் நின்று ந‌ட‌த்திய‌வ‌ர் ஆவா குழு உறுப்பினர்” தொடர்ந்து வாசிக்க…)

ஆவா என்ற ரவுடிக்கும்பலை பின்னின்று இயக்குவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியா.???

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் காடையர்களான ஆவா என்ற சமூகவிரோத கும்பலின் தலைவன் என்று சொல்லப்படும் அலெக்ஸ் என்பவரை இலங்கை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் கட்சியில் முக்கிய தலைவனாக இருந்துள்ளான் அத்தோடு அக்கட்சியின் உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளான். இருந்த போதிலும் இக்கட்சியின் தலைவரான பூலோக அரசியல் நிபுணரும் மகிந்தவின் சிந்தனையாளருமான திரு.கஜேந்திரகுமார் இதை மறுத்துள்ளார்.

(“ஆவா என்ற ரவுடிக்கும்பலை பின்னின்று இயக்குவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியா.???” தொடர்ந்து வாசிக்க…)

ஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக – தேங்காய் சிவாஜிலிங்கம்

(விஜயகுமாரன்)
உலக வரலாற்றில் முதன் முதலாக அணுகுண்டு வீசி மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அமெரிக்க அரச பயங்கரவாதிகள். ஜப்பான் நாட்டு மக்களின் மீது அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களைக் அமெரிக்க கொலைகாரர்கள் கொன்றார்கள். முதலில் 06.08.1945 அன்று கிரோசிமா நகரின் மீதும் மூன்று நாட்களின் பின்பு நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசினார்கள்.

(“ஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக – தேங்காய் சிவாஜிலிங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 73 )

மன்னாரில் பற்குணத்தின் அலுவலகத்தில் ஒரு இளைஞர் வேலை செய்தார்.மிக சுறுசுறுப்பானவர்.இதன் காரணமாக பற்குணம் கொஞ்சம் அவர்மீது அக்கறை கொண்டிருந்தார்.ஆனால் அவர் கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர்.எனக்கும் அவர் நல்ல அறிமுகம்.நான் மன்னார் செல்லும்போது அவருடனேயே உணவருந்த செல்வேன்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 73 )” தொடர்ந்து வாசிக்க…)