யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராட்டம்” தளர்வை நோக்கிச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிசாரினால் கொல்லப்பட்ட மாணவர்கள் கஜன், சுலக்ஸன் ஆகியோரின் மரணத்துக்கு நீதியான தீர்வு கிட்டும்வரை பல்கலைக்கழக இயக்கத்தை தவிர்ப்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பு பகிரங்க வெளியில் வந்தபோது பல்கலைக்கழக நிர்வாகமோ, மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோ மாற்று அபிப்பிராயங்களையும் மறுப்புகளையும் தெரிவித்திருக்கவில்லை. ஆகவே, “நீதி கிடைக்கும்வரை இயங்கா மறுப்பு நடவடிக்கை“ அநேகமாக வெற்றியடையும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி, பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமையவில்லை.
(“யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்” தொடர்ந்து வாசிக்க…)