‘வார்தா’ புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 450 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து, மின் விநி யோகத்தை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப் படையில் நடந்து வருகின்றன.
Month: December 2016
ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம்
(கே.சஞ்சயன்)
இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது.
மலையக மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு என்பவை, மலையகத் தமிழரின் இருப்பையே இந்நாட்டில் அசைத்து விட்டன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஐதேக மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென நண்பர் அனுர கூறியிருப்பது நியாயமானதுதான்” தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
(“மலையக மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்
ஐக்கிய நாடுகளின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டரெஸ், நேற்று (12) பதவியேற்றுக் கொண்டார். பூகோளரீதியாக நெருக்கடியையும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்ததான நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
(“ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்” தொடர்ந்து வாசிக்க…)
முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது
இரத்தம் ஒரே நிறமல்ல //யார் சொன்னது அப்படி.. உலகெங்கும் வெடிக்கும் கலவரங்களிலும், யுத்தங்களிலும் வடியும் இரத்தம் எல்லாமே ஒரே நிறம்தான் அவற்றின் கொடுமையும் ஒரே நிறம்தான்.
.முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போதும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் வடிந்த இரத்தவெள்ளங்களில் மக்கள் தம்மை மறந்து கடந்து போகத்தான் செய்தார்கள் ..அந்தக் கொடூரமான நினைவுகளைப் பலரும் எழுதினார்கள் ….சொன்னார்கள்…இங்கே வரும் கவிதை வரிகளில் அச்சொட்டாக அந்த வலியை உணர்கின்றேன்……..
(“முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது” தொடர்ந்து வாசிக்க…)
ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது.
பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் 13-12-2016 08:59 PM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல், பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில் இரவுணவு ஒன்றில் இவ்வாரம் சந்திக்கவுள்ளனர்.
(“பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் 13-12-2016 08:59 PM” தொடர்ந்து வாசிக்க…)
தேர்தலில் ரஷ்யாவின் பங்கு: மேலும் சிக்கலடைகிறது ட்ரம்ப்பின் நிலைமை
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது என்ற அறிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் களம், மேலும் சிக்கலடைந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவான முடிவைப் பெறுவதற்காகவே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக, ரஷ்யாவின் அரசாங்கத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் செயற்பட்டனர் என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள், முடிவுக்கு வந்திருந்தன.
(“தேர்தலில் ரஷ்யாவின் பங்கு: மேலும் சிக்கலடைகிறது ட்ரம்ப்பின் நிலைமை” தொடர்ந்து வாசிக்க…)
மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்
85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார். மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் “துரோகத்தால்” சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார்.
(“மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்” தொடர்ந்து வாசிக்க…)
வடகிழக்கு மாநிலங்கள் – அனைவருக்கும் வளமளிக்கும் திரிபுரா
(வீ.பா.கணேசன்)
இந்திய வரைபடத்தில் கிழக்கு மூலையில் ஒரு சிறிய மாநிலமான திரிபுரா இந்தியாவின் மூன்று சிறிய மாநிலங்களில் ஒன்று. இந்திய விடுதலைக்கு முன்புவரை வடகிழக்குப் பகுதியில் இருந்த இரண்டு சமஸ்தான அரசவைகளில் ஒன்றாக அது இருந்தது. மாணிக்யா என்ற அரச பரம்பரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியை ஆட்சி செய்தது. ஒரு காலத்தில் வங்காளத்தின் சுந்தரவனக் காடுகள், இன்றைய மியான்மரின் சிட்டகாங் காட்டுப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்த இந்த நாடு காலப்போக்கில் சுருங்கிப் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கப்பம் செலுத்தும் பகுதியாக மாறியது.
(“வடகிழக்கு மாநிலங்கள் – அனைவருக்கும் வளமளிக்கும் திரிபுரா” தொடர்ந்து வாசிக்க…)