ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது.
Month: December 2016
‘பிளாஸ்டிக் கூடை’ சட்டம் நடைமுறைக்கு வருகிறது
மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை, பொருளாதார மத்திய நிலையத்துக்கு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மாத்திரம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது. இந்நிலையில், மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், இம்முறையை பின்பற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, விவசாயிகளிடம் கோரியுள்ளது.
அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள்…: ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழி ஆகிய சசிகலா..!
(இரா.சரவணன்)
ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த நாளில் அப்போலோவில் கரைந்த கடைசி நிமிடங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. அந்த இறுக்கமான தருணத்தில் அப்போலோவில் இருந்த கட்சிப் பிரமுகர்கள், சசிகலா தரப்பினர், அதிகாரிகள், கார்டன் உதவியாளர்கள் எனப் பலரிடமும் பேசியதில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இதோ:
இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!
தமிழ் நாட்டின் இரண்டு ஆளுமை உள்ளவர்களின் அடுத்தடுத்த மறைவு பலரை, நடுக்கடலில் துருவ நட்சத்திரம் கொண்டு திசையறிபவர்கள், அது மறைந்தால் படும் இன்னல் போன்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டது. தமிழகத்தின் முதல்வர், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவி, அம்மா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஜெ. ஜெயலலிதா அம்மையார் மறைவும், துக்ளக் ஆசிரியர், பன்முக தன்மைகொண்ட அரசியல் விமர்சகர், பிரதமர் நரேந்திர மோடியால் ராஜகுரு என அழைக்கப்பட்ட சோ ராமசாமி அவர்களின் மறைவும் ஈடுசெய்ய முடியாதவை.
(“இரண்டு துருவ நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மறைந்தன!” தொடர்ந்து வாசிக்க…)
ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த மூவருக்கு இரட்டை மரணதண்டனை
யாழ்ப்பாணம் – நாரந்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 3 எதிரிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
(“ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த மூவருக்கு இரட்டை மரணதண்டனை” தொடர்ந்து வாசிக்க…)
‘புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது’
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று ஜே.வி.பியின் எம்.பியான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருகின்ற, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றிகொண்டிருக்கின்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(“‘புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது’” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம் A.F.C (பகுதி 83 )
கொழும்பில் இருந்து திரும்பிய அரச அதிபர் பஞ்சலிங்கம் பற்குணத்தை அழைத்தார்.பற்குணத்தை கண்ட அவர் இருப்பிலுள்ள சகல உணவுகளையும் மக்களுக்கு விநியோகிக்குமாறு பணித்தார்.அதற்கு பற்குணம் போதிய அளவு உணவுகள் இருப்பில் இல்லை என்றார்.அதற்கு ஏற்கனவே இருப்பில் உள்ள உணவுகளை விநியோகிக்க சொன்னார்.அதற்கு அவை பழுதடைந்த உணவுகள் என பதிலளித்தார்.சனத்துக்கு உணவுகள் இல்லை நீர் பழுதடைந்தவை என்கிறீர் .ஆனால் அதைப்பற்றி கவலையில்லை எல்லா உணவுகளையும் விநியோகிக்கும்படி உதஃதரவிட்டார்.
பிரபல பத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமி காலமானார்
பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) இன்று (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோ, சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.
(“பிரபல பத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமி காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)
அம்முவிலிருந்து ஆயிரத்தில் ஒருவன்(ஒருத்தி) வரை
ரங்கசாமி ஐயங்காருக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். பிழைப்புக்காக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்குச் சென்றவர் , அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு , ஏகப்பட்ட மன உளைச்சலோடு இருந்தவருக்கு நாற்பது வயதில் ஒரு நல்ல செய்தி வந்தது. அது , பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் கிடைத்த குமாஸ்தா வேலை. இதுதான் அந்தக் குடும்பத்துக்கே ஒரு திருப்புமுனை. வேதா , அம்புஜா , பத்மா மூன்று பெண்களும் சரி , மூத்த பையன் ஸ்ரீநிவாசனும் சரி , அப்பா பேச்சைத் தட்டாத பிள்ளைகள். படித்து முடித்ததும் எச்.ஏ.எல். ஃபேக்டரியில் ஸ்ரீநிவாசன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அந்தக் குடும்பத்துக்கு ஓரளவு வசதி வர ஆரம்பித்தது.
(“அம்முவிலிருந்து ஆயிரத்தில் ஒருவன்(ஒருத்தி) வரை” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ்நாடு முதல் அமைச்சரின் மரணம் எமக்கும் வலிக்கின்றது
வாழ்வதற்கான போராட்டதில் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் வெற்றியடையவில்லை. பல மனிதர்களின் மனங்களில் சோகங்களை உருவாக்கி விட்டு அவர் எம்மைவிட்டு பிரிந்து சென்றார் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த சோகங்களில் சூத்திரம் இணையத்தளமும் இணைந்து கொள்கின்றது