மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள்,

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம்(ம.மா) மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள்…..
Via battinews

(“மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள்,” தொடர்ந்து வாசிக்க…)

இன்னுமொரு_முள்ளிவாய்க்கால்

மூச்சுவிட முடியாமல்
ஒரு தேசம் திணறுகின்றது
காற்றெல்லாம் கந்தக வாசனை
வெட்டப்பட வேள்வியாடுகளாய்
மனிதம் சிதறிக்கிடக்கின்றதே
இன்னுமொரு முள்ளிவாய்க்கால்
இங்கேதான் அரங்கேற்றப்படுகிறது…!

(“இன்னுமொரு_முள்ளிவாய்க்கால்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் தொண்டன் கக்கன்

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

(“மக்கள் தொண்டன் கக்கன்” தொடர்ந்து வாசிக்க…)

அலெப்போவில் அமெரிக்க படைகள்

அலெப்போவில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக செயற்பட்டு வந்துள்ளனர். இதை எனக்கு ஏற்கனவே ஒருவர் உறுதிப் படுத்தி இருந்தார். அமெரிக்காவில் வாழும் வெள்ளையின அமெரிக்கப் பெண் ஒருவருடன் இணையத்தில் அரட்டை அடித்த நேரம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க இராணுவ வீரரான அவரது கணவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டதாக கூறினார். அந்த இடமும் அலெப்போ தான். அப்போது இந்தத் தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், சிரியாவின் உள்ளே தனது படைகள் இருப்பதாக, அமெரிக்க அரசு எந்தக் காலத்திலும் ஒத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசு இப்படி எத்தனை இரகசியங்களை தனது மக்களுக்கு மறைத்திருக்கும்?

(Kalai Marx)

எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்

நான் தெரிவிக்கும் கருத்தை விமர்சிக்கும் தகுதி கட்சியின் தலைமையைத் தவிர, வேறு யாருக்கும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நேற்று நடைபெற்ற ஒரு சமூக சேவை சங்கத்தின் மண்டல மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

(“எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 87 )

ரயில் போக்குவரத்து சீர்குலைந்ததைத் தொடர்ந்து கப்பல் மூலமான உணவு விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியது.எனவே உணவுத் திணைக்களம் யாழ்ப்பாணத்துக்கான உணவுகளை கொழும்பிலேயே வைத்து கூட்டுறவு திணைக்களத்துக்கு வழங்கியது.உணவு பற்றாக்குறைகள் காரணமாக பல தனியார் நிறுவனங்களும்,தனி வாகன உரிமையாளர்களும் உணவு கொண்டுவருதற்காக கூட்டுறவு திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 87 )” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.விபத்தில் 10 பேர் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ​நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 4 பெண்களும் 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும்,

(“யாழ்.விபத்தில் 10 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர்?

ஒருவரின் கருத்தை விமர்சிக்கவோ அல்லது அவரின் பதிவை மறுதலிக்கவோ இதனை எழுதவில்லை. நிலைமைகளை அலசி ஆராய்ந்து, நிதர்சனம் இது தான் என விளக்கம் தரும் எனது எண்ணமே இப்பதிவு. ஜெயலலிதா தனக்கு பின்னர் யார் அ தி மு க தலைமை என உருவாக்காதது போலவே, சம்மந்தர் அவர்களும் தனக்கு பின் த தே கூ வின் தலைமை யார் என தெரிவு செய்யாதது, அவரும் ஜெயலிதா போலவே தன்னை மட்டும் முன்னிலை படுத்தியே அரசியல் செய்வதாக, அந்தப் பதிவில் குறை கூறப்பட்டது. அவரின் கூற்று சரி பிழை என்பதற்கு அப்பால் ஒரு விடயம் உண்டு.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர்?” தொடர்ந்து வாசிக்க…)

இனிமே எல்லாம் இப்படித்தானா….?

நான்கு முறை ஜெ வின் உடல் அருகே வந்து நின்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சசிகலா சட்டையே செய்யவில்லை. பிரதமர் மோடி வந்தபோது முதலமைச்சர் பன்னீர்செல்வம் குலுங்கி அழுதார். ‘your sister has died. but your brother is alive. I’m your brother’ என சசிகலாவின் தலையில் கைவைத்து மோடி சொல்ல, ‘Ok sir’ என்று மட்டும் சொன்னார். பிற மாநில முதலமைச்சர்கள் வந்தபோதும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெ வின் உடலைக் கீழே இறக்கியபோது கதறி அழுவார், மயங்கி விழுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருக்க, சலனமே இல்லாமல் நின்றார் சசிகலா.

(“இனிமே எல்லாம் இப்படித்தானா….?” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் – சுப்பிரமணியன் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார்.

(“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் – சுப்பிரமணியன் சுவாமி” தொடர்ந்து வாசிக்க…)