1986 மே மாதம் ரெலோ மீதான புலிகளின் தாக்குதலின் பின்பு ஏனைய அமைப்புகளும் படிப்படியாக தடை செய்யப்பட்டன.அதன் பின்பு புலிகள் தனி அதிகாரம் செலுத்தினர் .ஆனால் இவர்களுடைய நட்பு அமைப்பான ஈரோஸ் செயற்பட்டு வந்தது.பாலகுமார் பற்குணத்திடம் பல்கலைக் கழகத்தில் படித்த காரணத்தால் ஈரோஸ் அமைப்புடன் சுமுகமான உறவு இருந்தது. ஈரோஸ் பரராச்சிங்கம் மிக நெருக்கமாக பழகினார்.
Month: December 2016
தீண்டாமையும் யாழ்மையவாத மனித உரிமையும்.
இந்த இருண்ட நாட்களில் தான் ஈபிஆர்எல்எப் பின் தோழர்கள் ஆண்களும் பெண்களுமாக கூட்டம் கூட்டமாக உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள். பலர் வதைமுகம்களில் கொல்லப்பட்டார்கள்.பேரினவாத பாசிசத்தால் அல்ல. யாழ்மையவாத தமிழ் பாசிசத்தால். கடந்த 30 வருடங்களில் இத்தகைய படுகொலைகளில் காணமல் போக்கடிக்கபட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் மனித உரிமை பேசும் மாய்மாலக்காரர்கள் பலர் இது பற்றி மூச்சுவிடுவதில்லை.
இதனை கள்ள மௌனத்துடன் கடந்து போகிறார்கள்.
தமிழ் சமூகத்திற்கு மனித உரிமை ஜனநாயகம் பற்றி பேசுவதற்கான யோக்கியம் பற்றிய கேள்வி எழுகிறது. இந்த அழிவுகளுக்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுகளுக்கும் இயக்கவியல் தொடர்பிருக்கிறது. வரலாற்று பிரக்ஞையுடன் நியாய உணர்வுடன் நெஞ்சில் ஈரத்துடன் சிந்தித்தால் இந்த சமூகத்திற்கு என்ன நேர்ந்தது என்று புரியும். படுகொலை செய்யப்பட்டவர்கள் 1980களின் முற்பகுதியில் தமது வீடுவாசல்களை துறந்துஉற்றசுற்றத்தை துறந்து ஒரு சமூக உந்துதலில் போராடவந்தவர்கள்.
தமிழ் சமூகத்தில் ஆயரிம் ஆயிரம் ஆண்டுகள்
நிலவும் தீண்டாமை வக்கிரத்தின் நவீன வடிவமே இது.
இந்த தீண்டாமை வக்கிரம் இன்றளவில் நீடித்து நிலவுகிறது. இது தமிழ் மனங்களில் நிர்மூலம் செய்யப்படாதவரை எந்த விமோசனமும் கிடையாது.
ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா?
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் ‘வெற்றிடத்தை’ உருவாக்கி விடுமா என்ற அச்சம் திராவிட இயக்கங்களின் பால் அக்கறை கொண்ட தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
(“ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா?” தொடர்ந்து வாசிக்க…)
யாழில் 6 பேருக்கு எச்.ஐ.வி தொற்று
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார். ‘இவர்களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ். மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2016 ஆம் ஆண்டு, 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது’ என அவர் மேலும் கூறினார்.
A2 வீதி மூடப்பட்டது
ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிரிஜ்ஜவெல சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே, அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அலெப்போவில் மீண்டும் மோதல்
சிரியாவின் அலெப்போவில், எதிரணியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான இணக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் பயங்கர மோதல்கள் நேற்று (13) அங்கு ஆரம்பித்துள்ளன. இதனால், குளிருடன் பசியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?
(ஆர்.முத்துக்குமார்)
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் என்பதுதான் இன்றைய பேசுபொருள். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். நேரடியாகப் பார்த்தால், வெறும் கட்சிப் பதவிபோலத் தோற்றம் அளித்தாலும், ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் மறைமுகமாக தமிழகத்தின் கடைக்கோடி நிர்வாகம் வரை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர். எப்படி?
(“தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவராக சசிகலா இருப்பார், எப்படி?” தொடர்ந்து வாசிக்க…)
பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு அளித்ததாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இறுதி யுத்தம் நிகழ்ந்த போது இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராக இருந்தவர் சிவசங்கர் மேனன். இவர் அண்மையில் Choices: Inside the Making of India’s Foreign Policy” என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.
மார்கழி 13
நேற்றைய இரவுகள்
இப்படித்தான் விடிந்தன…
காற்றுப் புகமுடியாத
இடங்களில் எல்லாம்
தோற்றுப் போனவர்கள்
கண்ணி வைத்து
காவல் இருந்தனர்……
ஆம்….. மார்கழி 13
அதுவும் ஓர் .கர்நாள்…….
சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்
சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.
(“சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்” தொடர்ந்து வாசிக்க…)