எனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தலைமை தாங்கி வருவதாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க குற்றஞ்சாட்டினார். தனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் அடிப்படைவாதத்தை இனவாதமாக்கி வருகின்றனர். இனவாத செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதியொருவர் தலைமை தாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

(“எனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும்

அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

(“வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும்” தொடர்ந்து வாசிக்க…)

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!!

1.ஆதவன்
2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
3.அம்பி ( செயற்பாடு தெரியாது)
4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்கள
ை பராமரித்தவர்)
16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34.இசைபிரியா ( ஊடக பிரிவு)
35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

வட மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த சனியன்று தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்குவங்கி அரசியலுக்குள் நுளைக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கைப் பேரினவாத அரசின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகச் செயற்பட்ட விக்னேஸ்வரனின் திடீர் தேசியவாதத்தின் பின்புலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்தியங்களின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ள இலங்கை அரசியலில் ‘தமிழ்த்’ தேசியவாதத்தை விக்னேஸ்வரன் கையகப்படுத்தியுள்ளதன் பின்புலத்தில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் பங்கையும் அவதானிக்க முடிகிறது.

(“வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி” தொடர்ந்து வாசிக்க…)

2017: காத்திருக்கும் கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல் எளிதல்ல நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்….

(“2017: காத்திருக்கும் கதைகள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனை வைத்து பணம் சேர்க்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பு

இந்த ஒளிப்பதிவில் முதல்வருக்கு பக்கத்தில் நிற்கும் நபர் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய நிர்வாகி “கமல்”. இவர் தான் இந்த பணம் சேகரிக்கும் திட்டத்தின் முக்கிய புள்ளி. இவரிடம் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்கள் இருக்கின்றது. கனடாவில் “கனடா உலகத்தமிழர் அமைப்பினால்(WTM) ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில், வட மாகாண முதல்வர் சீ வி விக்கினேஸ்வரனின் உதவி செய்யும் அறக்கட்டளை நிதிக்காக சேகரிக்கப்பட்ட நிதியை எப்படி கொடுக்கப் போகின்றார்கள்.

(“வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனை வைத்து பணம் சேர்க்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கடாபியின் மறுபக்கம்

லிபியாவின் கடாபியை உலகம் ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் அவரது மறு பக்கம் சுவாரஸ்யமானது. அதனையும் பார்ப்போம் வாருங்கள்.

(“கடாபியின் மறுபக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘கஞ்சா ரொட்டியை கடவுளுக்கு படைத்தோம்’

துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275 கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஆஜர் செய்தபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

(“‘கஞ்சா ரொட்டியை கடவுளுக்கு படைத்தோம்’” தொடர்ந்து வாசிக்க…)

மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை – ஜனாதிபதி

அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

(“மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை – ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில்: வெகுஜன அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கருத்தரங்கு

ஆட்சி மாற்றம் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நேற்றைய (08.01.2017) தினம் 2017 இன் அரசியல் சாத்தியங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று யாழ் வைஎம்சிஏ மண்டபத்தில் நடைபெற்றது. சமூக – அரசியல் செயற்பாட்டாளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், வெகுஜன அமைப்புக்களை சார்ந்தவர்கள், சமூக அக்கறையுள்ள தனி நபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

(“யாழ்ப்பாணத்தில்: வெகுஜன அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கருத்தரங்கு” தொடர்ந்து வாசிக்க…)