வட மாகாண சபை முதல் அமைச்சரின் கனடா விஜயமும்…..! இதன் அதிர்வலைகளும்…..!!

(பேட்டியை முழுமையாக காணெளியில் காண….)

வடக்கு மகாண முதல் அமைச்சர் நிதி திரட்டும் நோக்கோடு இரட்டை நகரம் என்பதை முன்னிலைப்படுத்தி கனடாவிற்கு வருகை தந்திருக்கின்றார் என்று பலராலும் கருதப்படும் நிலையில் புலிகளின் பல்வேறு பிரிவின் ஒரு பிரிவினர் மாத்திரம் இதற்கான ஒழுங்குகளை செய்திருப்பதாக அறிய முடிகின்றது. அபிவிருத்திக்கு இலங்கை அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முறைப்படி முழுமையாக செலவு செய்யாமலும் செலவு செய்தவற்றில்  நிதி மோசடியையும் உடைய அமைச்சர் அவையின் தலைவர் வட மாகாண முதல் அமைச்சர். கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் நிதி திரட்டலில் ஈடுபட்டிருக்கும் முதல் அமைச்சின் முயற்சிக்கு அவ்வவ் நாடுகளில் முன்னாள் உட்டியல் குலுக்கக்காரர் சிலர் உதவ புறப்பட்டிருப்பதும் மக்களால் எச்சரிகையாக பார்க்கப்படுகின்றது.

(“வட மாகாண சபை முதல் அமைச்சரின் கனடா விஜயமும்…..! இதன் அதிர்வலைகளும்…..!!” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் முதல்வர் விக்கி..!!! – கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்..!!!

காலை நக்கி பாவமன்னிப்பு கேட்க பின்கதவு தட்டும் அமைப்புகள்!!

கனடாவுக்கு போகவிடாமல் பெரும்பாடுபட்டு பெட்டிசம் அடித்த அமைப்புகளில் ஒன்றான தமிழ் காங்கிரசு அமைப்பினர் தர்ப்போது – முதலவர் விக்கியை கூப்பிட்ட குழுவினரிடம் பின்கதவால் கௌரவ பிச்சை எடுக்கினமாம் என தெரியவருகிறது. சம்பந்தருடைய அரசியல் காலக் கடத்தலை விக்கி எதிர்க்கிறார் அதனால் நாங்கள் விக்கியை தூக்கி பிடிக்கமாட்டோம் எங்களுக்கு சம்பந்தன் சுமந்திரன் தான் ஏக கடவுளர் என துதி பாடின ஆக்கள் – இப்ப எல்லா தடைகளையும் தாண்டி விக்கி கனடா சென்றுவிடடார் என்றவுடன் – தங்களது விருந்துபசார நிகழ்வுக்கும் அவரை ஒருக்கா சாப்பிட விடுங்கோ – எங்கட கௌரவத்தையும் காப்பாத்துங்கோ என்கிற பாணியிலே – தமிழ் காங்கிரசார் பின்கதவு பிச்சை எடுக்கினம்மாம்.

(“கனடாவில் முதல்வர் விக்கி..!!! – கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்..!!!” தொடர்ந்து வாசிக்க…)

நீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா

(விஜயகுமாரன் )

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பில் உயிரியல் தொழிநுட்ப பிாிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவனான மகேந்திரன் தார்த்திக்கரன் என்பவர் முதலாம் இடத்தைப் பெற்று உள்ளார். கூலித் தொழிலாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கிளிநொச்சியில் உருததி்ரபுரம் எள்ளுக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் இடைத்தரக் கல்வி பெறுவதற்காக செல்லும் போது இவரது ஆரம்பப் பாடசாலை தலைமை ஆசிரியர் “நீ உருப்படவே மாட்டாய்” என்று திட்டித் தான் இவரை அனுப்பி வைத்தாராம்.

(“நீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வரின் சிறப்பு உத்தியோகத்தர் கனடாவில் – முதல்வர் பேரிலான மோசடிகளைத் தவிர்ப்பாரா?

(ஜனவரி 3ம் திகதி கனடா மிரர் என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தற்போதைய நிலைக்கும் பொருந்துவதினால் பிரசுரிக்கின்றோம்)

வடக்கு மாகாண முதல்வர் திரு.சிவி. விக்னேஸ்வரன் அவர்களின் முதன்மையதிகாரியாகப் பணியாற்றும் நிர்மலன் கார்த்திகேசு கனடாவிற்கு வருகை தந்துள்ளார். ஐக்கிய நாடுகளவையின் அபிவிருத்தித் திட்டத்திற்காக 250 மில்லியன் டொலர்களை ஐக்கியநாடுகளைவை வடமாகாணத்தில் செலவளிக்க முன்வந்தது.

(“வடக்கு முதல்வரின் சிறப்பு உத்தியோகத்தர் கனடாவில் – முதல்வர் பேரிலான மோசடிகளைத் தவிர்ப்பாரா?” தொடர்ந்து வாசிக்க…)

புத்த பெருமான் உடைப்பு.

திருகோணமலையில் 4 இடங்களில் புத்த பெருமானின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார வேலைகளை செய்தவர்கள், இனங்களுக்கிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கி நல்லாட்சியை கவிழ்ப்பதாக இருக்கலாம். அவர்களின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்த இனமாக இருந்தாலும் , வணங்கும் தெய்வங்கள் மீது கை வைப்பது மனித உரிமை மீறும் செயல். இந்த மனித உரிமை மீறும் செயலை செய்தவர்களை நாம் மிக கடுமையாக கண்டிக்கிறோம்.

(SDPT Trinco)

‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’

“அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஹம்பாந்தோட்டையினை அபிவிருத்தி செய்யப்படக்கூடாது என்று எண்ணினால், அதற்கான பணத்தை எனக்குத் தாருங்கள், நான், பொலன்னறுவையை அபிவிருத்தி செய்துகாட்டுகின்றேன்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டார்.

(“‘பொலன்னறுவைக்கு தாருங்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்த கணக்கு

(ஜெம்சித் (ஏ) றகுமான்)

யகபாலனய எனும் கூட்டாற்சியை கலைக்க வேண்டும் என்ற மகிந்தவின் கணக்கு சாத்தியமாகுமா?எனும் கேள்வி அரசியல் ஆய்வாளர்களை சிந்திக்க தூண்டி இருக்கிறது.ஐ.தே.கட்சிக்கும்,சுதந்திர கட்சிக்கும் இடையே கருத்து முறண்பாடு எனும் கறையான் அரிக்க ஆரம்பித்திருக்கிறது.சுதந்திர கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குகின்ற போது முழுமையான ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தங்கள் வசம் இழுத்து கொள்ள வேண்டும் என எத்தனித்து கொள்வதை போல் உள்ளது.2020 ஐ நோக்கிய கூட்டாற்சி பயணம் என கர்ஜித்து கொண்டிருந்த முக்கிய அமைச்சு பதவிகள் வகிக்கும் பலர் சுதந்திர கட்சி ஆட்சியமைக்கும் காலம் வெகுதூரம் இல்லை என கூறுகின்றனர்.

(“மகிந்த கணக்கு” தொடர்ந்து வாசிக்க…)

சோசலிசம்

மனிதர்களாகிய நாம் இயற்கையில் அமைந்த பொருள்களை மாற்றியமைப்பதன் மூலம் மனித வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து கொள்கின்றோம்.இவ் உற்பத்திக்கும், அதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கும் நாங்கள் உழைத்து வழங்கும் பங்களிப்பே நாம் செய்யும் “தொழில்” எனப்படுகிறது. இந்த உற்பத்தி நடவடிக்கைக்கான செலவீனத்திற்கு (மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்களின் தேய்மானம், எமது உழைப்பிற்கான கூலி) மேலதிகமாக ஈட்டப்படும் வருமானம் இலாபம் ஆகும்.

(“சோசலிசம்” தொடர்ந்து வாசிக்க…)

உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்…

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.இந்தப் பரீட்சையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 550 பேர் தோற்றியுள்ளனர். இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ..

(“உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்…” தொடர்ந்து வாசிக்க…)

அம்மணமாய்தான் நிற்க்கின்றோம்

நாங்கள் அம்மணமாய்தான் நிற்கின்றோம்

ஆடையணிந்தால் அழகாகிடுமாம்

தெருவெங்கும் சாலையெங்கும்

மூக்கை பிடித்து மூச்சடக்கி போகும் மனிதர்களே

அந்த நாற்றத்தில் நாள்தோறும்

விழுந்து சாகின்றோம்

(தொடர்ந்து வாசிக்க…)