மீனவர்களின் சந்தையை நாம் கட்டித் தருவோம்! தமிழர் அறம் காப்போம்!

(ம.செந்தமிழன்)

மீனவர்கள் நமக்காக வந்தார்கள், நம்மோடு நின்றார்கள். தமிழர் என்ற உணர்வில் நம்மோடு கலந்தார்கள். நெய்தல் நிலத்து மாந்தர் முல்லை நிலத்து உரிமைக்காகப் போராடினர். இது நம் மரபின் தொடர்ச்சிதான். நாடெங்கிலும் இருந்து படையெடுத்து வந்த நீங்கள் அனைவரும் உழவர்களும் அல்ல, ஆயரும் அல்ல. நீங்களும் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடுதான் வந்தீர்கள். சில மலையாளிகள்,
வடகிழக்கு இந்திய மாந்தர் நம்மோடு இணைந்திருந்தார்கள். மனிதர் என்ற இணைப்பு அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வீதியில் நின்றார்கள். இனம் அவர்களைப் பிணைத்தது. இசுலாமியர், கிறித்தவர், இந்து என்ற மாறுபாடின்றி அனைவரும் நம்மைத் தமிழினத்தின் அடையாளத்துடன் பொருத்திக்கொண்டோம். நிச்சயமாக, போராடிய அனைவரும் மாடு வளர்க்கவும் இல்லை, வளர்க்கப்போவதுமில்லை.

(“மீனவர்களின் சந்தையை நாம் கட்டித் தருவோம்! தமிழர் அறம் காப்போம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் நாடு பொலிஸ்

தமிழ் நாடு பொலிஸ் நடாத்திய அராஜகங்கள் இப்பொது ஒரு விவாதமாக பேசப்படுகிறது.தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை எல்லோரும் கண்டிக்கிறார்கள்.கருணாநிதியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நக்கலைட் ஒழிப்பு என்னும் பெயரில் தமிழக பொலிசார் நடத்திய அராஜகங்கள் கொஞ்சமல்ல.இதில் பொலிஸ் கமிஷனர் வால்டர் தேவாரம் புகழ் பெற்றிருந்தார்.எத்தனை அப்பாவி ஹரிஜன இளைஞர்கள் நக்சலைட் முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.இதையும் யாரும் கண்டிக்க துணியவில்லை. ஊட்டியில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ் தீவிரவாதிகள் என்னும் பட்டம் கட்டி பொலிசார் தாக்கினார்கள்.இது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம்.இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை .

(“தமிழ் நாடு பொலிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

கிளர்ந்தெழுந்த இளைய தலைமுறை

ஜல்லிக்கட்டுப் போராட்டம் பல்வேறு சமூக பொருளாதாரபிரச்சனைகள் தொடர்பாக சலிப்பூட்டும் அனுபவங்களால் ஏற்பட்ட இளஞ்சமுதாயத்தின் அறச் சீற்றத்தின் குறியீடு. குறிப்பாக காப்பிரேட் உலகம் சாமானியர்களை புறத்தொதுக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடு.
சல்லிகட்டு விவாகாரதில் அது அணைகடந்த வெள்ளம் போல உடைப்பெடுத்திருக்கிறது. உலகம் முழுவதும்; இந்த இளையதலைமுறை வெஞ்சினம் வெவ்வேறு வடிவங்களில் இந்த நவதாராளவாத உலகில் காணப்படுகிறது
இப்போராட்டத்தின் பலாபலன்கள் தவறான சக்திகளால் அறுவடைசெய்யப்படாமல் இருக்கவேண்டும்.  அநாகரிகமான வன்முறையற்ற வழியில் காந்திய அறவழியில் இந்த வெகுஜனப் போராட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்திய சுதந்திர இயக்கத்தில் பெரியாரின் சமூகசீர்திருத்த இயக்கத்தில் இது வேர்கொள்கிறது.
நிறுவன மயப்பட்ட ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களே இந்த மகத்தான எழுச்சிக்கு பாரிய பங்களித்திருக்கின்றன

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி…. ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி மாணவர், இளைஞர் இயக்கம் ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயக்கம் இளம் பெண்கள், தாய்மார்களின் ஆதரவை மட்டுமல்ல ; பொதுவெளியில் பங்களிப்பையும் பெற்றது. சீரியல் பார்த்து வீணாக போய்க்கொண்டிருந்த தாய்மார்களும் சீரியஸ் மேட்டருக்கு போராடுவார்கள் என்பதை நிரூபித்தது. போஸ்டர் ஒட்டி அடுத்தவன் வீட்டு சுவரை அழுக்காவில்லை. நன்கொடை எனும் பெயரில் கல்லா கட்டவில்லை. எழுச்சி, வீழ்ச்சி என தலைவர்களை அடையாளப்படுத்தவில்லை.

(“தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி…. ஜல்லிக்கட்டு போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசியல்வாதிகளே… போராட்டத்தைப் படியுங்கள்!

தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

(“தமிழக அரசியல்வாதிகளே… போராட்டத்தைப் படியுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

‘Made in India’

எமது பண்பாடுகள், பாரம்பரியங்கள், கலை, கலாச்சாரங்கள் என்பன பாதுகாக்கப்படுவதுடன் அவற்றை நாம் நம் அன்றாட வாழ்வில் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என எண்ணுபவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் வெறுமனே அழிந்து போகும் நம் இன அடையாளங்களை தூக்கி நிறுத்துவதற்காக அல்ல. அவற்றுக்குப் பின்னால் உள்ள உயிர்ப்புத் தன்மையும், இயற்கையுடன் சேர்ந்த வாழ்க்கை முறையும், மனித நல் வாழ்விற்கான வழிகாட்டிகளும் நிறையவே அங்கு காணப்படுகிறது.

(“‘Made in India’” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து போராடும் தமிழக மக்கள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் / இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இதன் வீச்சு உலக நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் இடமெங்கும் பரவியது. லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஓரணியாகத் திரண்டதால் ஆங்காங்கு ஆதரவாக பெற்றோர், பொதுமக்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்தது. ஒருகட்டத்தில் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள், பென்கள், குழந்தைகள் வந்ததாலும் இந்த அறவழிப் போராட்டம் இரவு – பகல் என ஒரு வாரம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது உலகின் பார்வையையே போராட்டத்தின் பக்கம் திருப்பியது.

(“ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து போராடும் தமிழக மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சோஷலிஸத்திற்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி!

வருடம் முடிந்து விட்டது. புது வருடம் பிறந்திருக்கின்றது. புது வருடத்தை புதிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குமாறு சிலர் சொல்கிறார்கள். ஆனால், இவ்வருடம் எமது வாழ்நிலை கடந்த வரவு செலவு அறிக்கையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் எவ்வளவுதான் வணக்க வழிபாடுகளை செய்தாலும், நாள் நட்சத்திரங்களைப் பார்த்தாலும் எமது வாழ்நிலையைத் தீர்மானிப்பது எமது நாட்டின் மிகச்சிறு குழுவினரான அதிகாரபலம், பணபலம் படைத்த வர்க்கமாகும். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கொண்டே எமதும் எமது பிள்ளைகளினதும் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது முதலாளித்துவ வர்க்கம் எம்மிடமிருந்து பறித்துக் கொள்பவற்றின் காரணமாகத்தான் எந்நாளும் ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது.

(“சோஷலிஸத்திற்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

என் மனவலையிலிருந்து…..மெரினாவில் போராட்டகாரர்கள் பொலிஸ் இனால் சுற்றிவளைப்பு

(சாகரன்)

இது எதிர்பாரக்கப்பட்ட விடயம். தடைக்கு பின்னால் இருக்கும் சுதேசியத்தை அழிக்கும் செயற்பாட்டு வெளிக்கரங்களுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு இந்தப் போராட்டத்திற்கு ஒரு வளர்ச்சி நிலைக்கு பின்னர் ஆப்பு அடிக்க புறப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்நிலைமையை சமாளிக்க தொடர்ந்தும் போராடி இறுதி இலக்கை அடைய நிச்சயம் இதற்கு ஒரு ஸ்தாபன வடிவம் தேவை. தமிழ் உணர்வு தமிழ் வீரம் தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்பதற்கு அப்பால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் காளைகளை இல்லாமல் செய்து சுதேசிய காலநடை இனங்களை இல்லாமல் செய்யும் காப்ரேட் கம்பனிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கம் செயற்படப்போவது இல்லை இதில் உறுதியான மக்கள் போராட்டமே தமிழ்நாட்டை…. இந்தியாவை மீட்சிக்குள் உள்ளாக்கும்.

(“என் மனவலையிலிருந்து…..மெரினாவில் போராட்டகாரர்கள் பொலிஸ் இனால் சுற்றிவளைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்

காணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்று வரும் இப்போராட்டம், வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளுடன் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. காணாமல் போனோரின் உறவினர்கள், கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டதன் பின்னர், ஊர்வலமாக வவுனியா பிரதான தபாலகத்துக்கு முன்பாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.