ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை: ஆதரிக்கிறேன்; மகிழ்ச்சி.

திரள்வதற்குப் பல காரணங்கள் தேவை இல்லை. ஒன்றேயொன்று போதும். அந்த ஒன்று அரசியல் கொள்கையென்றால், அதை ஏற்காத கட்சிகள் பங்கேற்காது. பொருளாதாரக் காரணமென்றால், அதனால் பலன் கிடைக்காது என நினைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நழுவிவிடுவார்க்ள். சமுதாயப்பிளவுகளில் ஒன்று காரணமாக இருந்தால்,அதற்கு வெளியிலிருக்கும் கூட்டம் விரோதமாகச் செயல்படும்.

(“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை: ஆதரிக்கிறேன்; மகிழ்ச்சி.” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை நண்பர் Sala Marx உடன் அளவளாவியதில் கிடைத்த தகவல்களில் இருந்து சில புள்ளிகள்:

1. சல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் மோட்டார் சைக்கிளிலில் பயணம் மேற்கொண்ட திரு. மகேஸ்வரி அவர்கள் அலங்காநல்லூருக்கு சென்று சேர்ந்தது போராட்டத்திற்கான உந்துவிசையாக அமைந்திருக்கிறது.

(“மதுரை நண்பர் Sala Marx உடன் அளவளாவியதில் கிடைத்த தகவல்களில் இருந்து சில புள்ளிகள்:” தொடர்ந்து வாசிக்க…)

முன் அழைப்பும் பின் இழுப்பும்

அலங்காநல்லூர் என்ற ஊரின் பெயரைத் திரும்பத் திரும்ப ஊடகங்களின் ஒலியாகக் கேட்கும்போது, “தலையாலங்கானம்” என்ற சங்ககால இடம்பெயர் இதுதானோ என்று மனம் நினைக்கத்தொடங்கிவிட்டது. தனது இளம் வயதில் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிரிகளை வென்ற வரலாற்றை விரிவாக, அவனைப்பாடிய புறநானூற்றுப் புலவர்களின் பாடல்கள் காட்டுகின்றன. அவனது முன்னோன் ஒருவரின் பெயருக்கு முன்னால் “ ஆரியப்படை கடந்தவன்” என்ற முன்னொட்டு இருப்பதும் நினைவிலிருந்து தப்பவில்லை.

(“முன் அழைப்பும் பின் இழுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள், மாணவர்கள்: பிரதமரை சந்திக்க முதல்வர் ஓபிஎஸ் டெல்லி விரைந்தார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தன்னெழுச் சியாக திரண்ட இளைஞர்கள், மாண வர்களால் பல மாவட்டங்கள் ஸ்தம் பித்தன. லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

(“தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள், மாணவர்கள்: பிரதமரை சந்திக்க முதல்வர் ஓபிஎஸ் டெல்லி விரைந்தார்” தொடர்ந்து வாசிக்க…)

எல்லை மீள்நிர்ணயம்: சிறுபான்மைக் கட்சிகள் சிவப்பு எச்சரிக்கை

“எம்முடன் கலந்தாலோசிக்காமல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான வர்த்தமானியை அச்சடிக்க வேண்டாம்” என சிறுபான்மைக் கட்சிகள் கோரியுள்ளன. “எல்லை மீள்நிர்ணய அறிக்கையை அவதானிக்கின்ற போது, அதிலுள்ள விடயங்கள், சிறுபான்மை இனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. “ஆகையால் எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, எம்முடன் கலந்துரையாட வேண்டும்” என்றும் அக்கட்சிகள் கோரியுள்ளன.

(“எல்லை மீள்நிர்ணயம்: சிறுபான்மைக் கட்சிகள் சிவப்பு எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் மையம் கொண்ட எழுகதமிழ் புயல் கிழக்கு நோக்கி நகர்கிறது!?

காலநிலை அவதான நிலையத்தில் வேலைசெய்பவன் போலாகிவிட்டது எனது நிலை. அங்கு மையம் கொண்ட புயல் கிளம்பி, இங்கு சுழன்று இடையில் கரையை கடக்கும் என்பது போலவே, ஈழத்தமிழர் அரசியல் நிலவரமும் ஆகிவிட்டது. இடியுடன் மழை வரலாம், சில இடங்களில் மேக மூட்டம் மட்டும் காணப்படும். ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறுவது போலவே எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு, ஒருநாடு இருதேசம், கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை என மக்களை போட்டுக், குழப்பு குழப்பு என்று குழப்பி, எதுவுமே கைகூடா வேளையில் வடக்கில் அரங்கேற்றிய எழுகதமிழ் பேரணியை, கிழக்கிற்கு நகர்த்தும் செயலும் ஓரளவு மக்களின் ஆதரவை பெறலாம், மாபெரும் வெற்றி என சில பத்திரிக்கைகள் சங்கூதலாம் (“வடக்கில் மையம் கொண்ட எழுகதமிழ் புயல் கிழக்கு நோக்கி நகர்கிறது!?” தொடர்ந்து வாசிக்க…)

சசிகலா என்பது போலி; நடராஜனே உண்மையான முகம்: ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

சசிகலா என்பது போலி, நட ராஜனே உண்மையான முகம் என ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி குற்றம்சாட்டி யுள்ளார். கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, ‘‘தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப ஆதிக்கத்தில் இருந்தது. இப்போது இன்னொரு கட்சியும் குடும்பத்தின் பிடியில் போய்க் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க பலரும் பயப்படுகின்றனர். ஆனால், இதைப் பார்த்துக் கொண்டு ‘துக்ளக்’ சும்மா இருக்காது’’ என்றார்.

(“சசிகலா என்பது போலி; நடராஜனே உண்மையான முகம்: ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா

ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா, இன்றைக்கும் பூர்கினாபாசோ நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். “மார்க்சியம் தோற்று விட்டது, கம்யூனிசம் காலாவதியாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைகளின் கவனத்திற்கு:

(“ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா” தொடர்ந்து வாசிக்க…)

எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்

திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

(“எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!” தொடர்ந்து வாசிக்க…)

ஏறுதழுவல் போராட்டம் இரு அழைப்புகள்!

(ம.செந்தமிழன்)

நண்பர்களே,
சென்னை களத்தை நோக்கி நானும் கிளம்பிக்கொண்டுள்ளேன். ஏற்கெனவே செம்மைக் குடும்பத்தவர் சில பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரு செயல்பாடுகள், இப்போதைய உடனடித் தேவைகள்.

(“ஏறுதழுவல் போராட்டம் இரு அழைப்புகள்!” தொடர்ந்து வாசிக்க…)