முதன்முதலில் ஜல்லிக்கட்டை நேரில் காணச் சென்றபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட நீதிமன்றத்துக்குப் போன முதல் அனுபவத்துக்கு இணையானது அது. ஊரே கூடி நிற்க, யாரையும் நெருங்க விடாத ஒரு காளையையும், அதன் முன் குதித்து, தன் பார்வையாலேயே அதை மிரட்டி, தனியொருவனாக அடக்கி, மண்டியிடவைக்கும் இளைஞரையும் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒரு ஊர் கூட்டம் அல்ல; பத்து ஊர்க் கூட்டம் கூடி நின்றது. வெவ்வேறு சீருடைகளில் அணிஅணியாக வீரர்கள் நின்றனர். எல்லோர் கவனமும் வாடிவாசல் நோக்கி இருந்தது. ஏகப்பட்ட முஸ்தீபுகளுக்குப் பின், வாடிவாசல் திறக்கப்பட்டபோது காளை சீறி வந்தது. வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். பலர் காளை திரும்பிப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடி ஒதுங்கினார்கள். சிலர் பதுங்கினார்கள். சிலர் மட்டும் விடாது துரத்தினார்கள். காளையின் திமிலைப் பிடித்தவாறே இறுதி வரை ஓடியவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். “சரிண்ணே.. ஜல்லிக்கட்டு எப்போ ஆரம்பிக்கும்?” என்று அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு அண்ணனிடம் கேட்டபோது அவர் என் தலையில் தட்டினார். “சினிமா பார்த்து எல்லாமே நிஜம்னு நம்புறவனாடா நீ!”
Month: January 2017
வேட்டிதான் அழகான உடை….!
நாங்கள் மட்டும் அல்ல இவர்களும் மாற்றுக் கலாச்சார உடைகளை அணிகின்றனர்
சம்பந்தனின் சிவதாண்டவமும் காலில் விழுந்துகிடக்கும் முயலகன் விக்கியும்.
சம்பந்தன் (அறம் மறத்தைவிட) மதிநுட்பம்மிக்க பக்கா அரசியல்வாதி.
புலிகள் காலத்தில் அரசியலில் நிலைக்க சமரசம் போனவர் புலியழிய யதார்த்தத்தையும் அறத்தையும் அறிந்து தனிநாட்டு கோரிக்கையை மிகச்சரியாக நிராகரித்தார். சம்பந்தரை குறைத்து மதிப்பிட்ட சங்கரி கொடுத்தவிலை சங்கரியின் அரசியல்வாழ்வு. சுமந்திரன் சம்பந்தர் பொறுக்கி எடுத்த துரும்புசீட்டு(Trump card). சம்பந்தர் போட்ட
wild card விக்கி. அது வேலை செய்யாமல் துரோகம் செய்தபோது பல மாதங்களுக்கு முன்னரே சுமந்திரன் ஆலோசனைப்படி விக்கியை கட்சியைவிட்டு கலைச்சு வேறொருவரை முதலமைச்சராக்கியிருக்கலாம். ஆனால் தீமையையும் நன்மையாக்குவதுதானே அரசியல் சாணக்கியம். விக்கியை விலக்குவதைவிட முயலகனை சிவன் உயிரோடு காலில் வைத்திருந்தமாதிரி வைப்பது பயன்.
(“சம்பந்தனின் சிவதாண்டவமும் காலில் விழுந்துகிடக்கும் முயலகன் விக்கியும்.” தொடர்ந்து வாசிக்க…)
மத நல்லிணக்கத்துடன் பொங்கல் விழா
வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பொங்கல் தினத்தன்று (14.01.2017) இன மத நல்லுறவுக்கான பொங்கல் விழா கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு . இளங்கோவன் , மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
வல்வைக்கு பட்டம் விடச்சென்ற டெனீஸஸ்வரன் பட்டமும் விட்டார் ரீலும் விட்டார் :
(த ஜெயபாலன்)
இந்த மாகாண சபைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் உள்ளது என்றும் இந்த மாகாண சபையைச் சரிவர நடத்தினால் தமிழ் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த மாகாணசபையை சரிவரச் செயற்படுத்த தவறினால் தமிழ் மக்களின் வாழ்நிலை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின் தள்ளப்படும் என்றும் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு தெரிவித்தார். ஜேர்மன், டோட்முன் நகரில் யூலை 12இல் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுக் கூட்டத்திற்கு வந்திருந்த டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்து இருந்தார். அப்போது வடமாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி பத்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் பா டெனீஸ்வரன் அக்கருத்தைத் தெரிவித்து இருந்தார்.
(“வல்வைக்கு பட்டம் விடச்சென்ற டெனீஸஸ்வரன் பட்டமும் விட்டார் ரீலும் விட்டார் :” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!..
வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை கோரிக்கையாக, சமஸ்டி அரசியல் அமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பே முன்னிலை பெறுகிறது. இதில் சமஸ்டிக்கு முறைமைக்கு சிங்கள பெரும்பான்மை சம்மதிக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் பெரும்பான்மை இணங்கவில்லை. இதுவே என்று எல்லோர் வாயிலும் அகப்பட்ட அவல்.
(“முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!..” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!
ஆதாரம்: தைப் பொங்கல்!
வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.
இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன.
பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.
பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் “அவ்வல்” ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.
தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.
(Kalai Marx)
மீண்டும் புலிகள்… முட்டாளா நீங்கள்?
(சமஸ்)
நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரி கிடையாது. அதேசமயம் நண்பன் என்றும் கூற மாட்டேன். ஒரு மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர் இனமே அகதியானதற்கு நானும் ஒரு மௌன சாட்சி. இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும் தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. நாம் அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.
இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப் பட்ட உண்மை இது
– ஜேர்மனி முற்றாக தோற்கடிக்கப் படுவதற்கு முன்னரே, 1943 ம் ஆண்டு சோவியத் யூனியனில் நாஸிகளின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்கள் நடந்துள்ளன.
– போர்க்குற்ற நீதிமன்ற அமர்வுகள் ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் நடந்துள்ளன. பாதிக்கப் பட்ட யூதர்கள் வழங்கிய சாட்சியங்கள் யாவும் பதிவு செய்யப் பட்டன. குற்றம் நிரூபிக்கப் பட்ட, நூற்றுக்கணக்கான நாஸி கிரிமினல்கள் பகிரங்கமாக தூக்கிலிடப் பட்டனர்.
(“இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப் பட்ட உண்மை இது” தொடர்ந்து வாசிக்க…)