சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்

தமிழர்களின் தனித்துவ திருநாள் பொங்கல் அதிலும் தை இரண்டாம் நாள் நடை பெறும் மாட்டுப் பொங்கல் எங்கள் பிரதேசத்தில் பட்டிப் பொங்கல் எனவே அழைக்கப் படும். அன்றைய நாட்களில் ஒவொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்டளவுக்கு மாடுகள் இருந்தன மேய்ச்சல் நிலம் அதிகம் உள்ள எங்கள் ஊரில் வீட்டுக் காலையில் அடைக்கப் படும் மாடுகள் காலையில் திறந்து விட அவை மேய்ச்சல் நிலத்துக்கு போய் மாலையில் தானாகவே திரும்பி வரும்.

(“சேனையூர், கட்டைபறிச்சான் பிரதேசங்களில் பட்டிப் பொங்கலும் மஞ்சு விரட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஊரில் உழாத மாடு

யூதரான Henry Kissinger இஸ்ரேலுக்கு விஜயம் செய்த போது அவருக்கு கோட் சூட் தைக்க யூதர்கள் நல்லதொரு துணியொன்றை பரிசளித்தார்களாம். சந்தோசத்துடன் அதை வாங்கிய கிஸ்சின்ஜர் அமேரிக்கா திரும்பியதும் அதை தைக்க டெய்லரிடம் போனால் துணி பத்தாது என்றுவிட்டார். பிறகு கிஸ்சின்ஜர் தனது பிறந்த நாடான ஜெர்மனுக்கு அதை கொண்டு போனால் அங்கும் கோட்டுக்கும் சூட்டுக்கும் உது போதாது என்றுவிட்டார்கள்.

(“ஊரில் உழாத மாடு” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 6)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

எமதுவாகனதொடரணிபுலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து சேர நன்றாக இருண்டுவிட்டது. வழமைபோல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்காகநானும் காத்துநின்றேன். எனக்குமுன்னால் நின்றகிறிஸ்தவபாதிரியார் தனதுமுறைவரபதிவுசெய்பவரிடம் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு அவனின் கேள்விகட்குபதிலளிக்க ஆரம்பித்தார். ‘உங்கள் பிரயாணத்தின் நோக்கம்”“தேவபணி” என்றார் அந்தப்பாதிரியார்.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 6)” தொடர்ந்து வாசிக்க…)

சமூக ஊடக அரசியல்: உடையும் மோடியின் குட்டு

(மீனா)

பா.ஜ.கவின் டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா. ஊடகவியலாளர் சுவாதி சதுர்வேதியின் “I am a troll” புத்தகம் பி.ஜே.பியுடைய டிஜிட்டல் படையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி மோடியின் குட்டை உடைத்திருக்கிறது. இந்நூலில் முக்கிய சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பவர், பி.ஜே.பி.யில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு அவர்களின் சமூக ஊடக மையமான NDOC (National Digital Operations Centre)இல் பணியாற்றிய சாத்வி கோஸ்லா. அவருடைய நேர்காணலொன்று கேரவன் இதழில் வெளிவந்திருக்கிறது. தான் அமைப்பில் இணைந்தது பற்றியும் அவர்களோடு முரண்பட்டு வெளியேற நேர்ந்ததைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

(“சமூக ஊடக அரசியல்: உடையும் மோடியின் குட்டு” தொடர்ந்து வாசிக்க…)

3 இலட்சம் டொலருடன் வரும் வெளிநாட்டவருக்கு தற்காலிக விசா

3 இலட்சம் அமெரிக்க டொலருக்கு அதிகமாக இலங்கையில் முதலிட தயாராக இருக்கும் வௌிநாட்டு பிரஜைக்கு, இந்த நாட்டில் 5 வருடங்களுக்கு தங்கியிருப்பதற்கான விசா வழங்கப்படும்” என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

(“3 இலட்சம் டொலருடன் வரும் வெளிநாட்டவருக்கு தற்காலிக விசா” தொடர்ந்து வாசிக்க…)

40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

(“40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்” தொடர்ந்து வாசிக்க…)

மனிதம் இன்னும் வாழ்கிறது! நிரூபித்தனர் தமிழர்கள் உள்ளிட்ட குவைத் வாழ் மக்கள்!! குவிந்தன குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!!!

உள்நாட்டு போரின் பிடியில் சிக்கியுள்ள சிரியாவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். சிரியாவின் பெரிய நகரம் அலெப்பா. இங்குதான் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. அங்குள்ள மருத்துவமனை தாக்கப்பட்டு மருத்துவக் கருவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டன. ஆனால், போரில் காயமடையும் மக்கள் அந்த மருத்துவமனையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இந்த அபலை மக்களின் துயரங்களுக்கு அங்குள்ள இந்த மருத்துவமனையும் சில மருத்துவர்களும்தான் ஆறுதல். காயம்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய கட்டில் இல்லாத காரணத்தால் அவர்களை தரையில் படுக்க வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

(“மனிதம் இன்னும் வாழ்கிறது! நிரூபித்தனர் தமிழர்கள் உள்ளிட்ட குவைத் வாழ் மக்கள்!! குவிந்தன குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

நடிகையுடன் மோதுகிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அங்கிகரிப்பதற்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில், நடிகை மெரைல் ஸ்ட்ரீப் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அவருக்கெதிரான கருத்துகளை, ஐ.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மெரைல், அந்த மேடையைப் பயன்படுத்தி, ஊடகவியலாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அங்கவீனமாவர்களுக்கும் ஆதரவான கருத்தை வெளிப்படுத்தினார்.

(“நடிகையுடன் மோதுகிறார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டுமக்கள் விரும்புவதை அரசாங்கங்கள் செய்வது மிகக்குறைவு. அதேபோல அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்கள் ஆதரவை வேண்டி நிற்பதில்லை. ஆனால் மக்கள் விரும்பாத, ஆதரவு தராத செயல்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கள் செய்கின்றன. இது ஒருவகை முரண்நகை.

(“செல்லாக் காசாக்கல்: அமெரிக்கா தீர்மானித்த இந்தியா” தொடர்ந்து வாசிக்க…)