திருமதி நவநாயகமலர் கதிரவேலு

மலர்வு : 4 ஏப்ரல் 1944 — உதிர்வு : 2 பெப்ரவரி 2017
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவநாயகமலர் கதிரவேலு அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“திருமதி நவநாயகமலர் கதிரவேலு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.

இயக்கங்கள் கட்சிகளை வைத்துக் கொண்டு சுய நல அலுவல்களை பாரத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் குள்ளநரிக் கூட்டம் ஒன்று தன்னை தமிழர் தலைமை என்கின்றது நாம் ஏமாறுவதா??
தமிழ் தலைமைகளின் கேவலங்கள் : 2017 சுதந்திர தினம்.
உங்களுக்கு ஒரு பகிஸ்கரிப்பு தேவைப்படுகின்றதோ !! முதலில’ அரசின் சொகுசு வாகனங்களை பகிஸ்கரி
தேசியக் கூட்டமைப்பு 2016ல் அரசியல் தீர்வு என்ற பேய்க்காட்டல்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாகனத்துக்கு கோட்டாவுக்கு கை நீட்டல்
தமது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பண ஆசை
தமது உறவினர்க்கும் பிள்ளைகளுக்டகும் பதவிக்கு ரனில் என்ன கோத்தா என்ன கை நீட்டுகின்றார்கள்

(“தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.” தொடர்ந்து வாசிக்க…)

எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!

(எஸ். ஹமீத்)
ஆங்கிலேயர் கருணை கூர்ந்து
அன்றொருநாள் சுதந்திரம் ஈந்து
ஆண்டுகள் அறுபத்தொன்பதும்
ஆகிற்று; ஆனாலும்…
ஓய்ந்ததுவோ வன் கொடுமை?
ஓங்கியதோ நம் நிலைமை?

(“எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளை மாளிகையை விட்டு மகனுடன் வெளியேறிய ட்ரம்பின் மனைவி! மீண்டும் திரும்புவாரா?

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்த பின் இரண்டே நாட்கள் மட்டுமே வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ட்ரம்பின் மனைவியும் அமெரிக்க முதற் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப் அதன் பின் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். இவரது வெளியேற்றத்துக்குக் காரணமெனப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

(“வெள்ளை மாளிகையை விட்டு மகனுடன் வெளியேறிய ட்ரம்பின் மனைவி! மீண்டும் திரும்புவாரா?” தொடர்ந்து வாசிக்க…)

நாடு எங்கே செல்கிறது?

இலங்கையில் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார்?, அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற சந்தேகம் பலதரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைக் கூறுவார்கள்.

(“நாடு எங்கே செல்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

(எஸ். ஹமீத்.)
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!”
இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

(“இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்

ஜனநாயக வழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருப்பதால் பலருடைய வேலைகளையும் அது பாதிக்கிறது. பலரால் தொடர்ந்தும் அதில் இயங்க முடியவில்லை. குறைந்த பட்சம் அக்கறையாயும் இருக்க முடியவில்லை.

(“கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

(பா.செயப்பிரகாசம்)

(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு விவகாரம் இளம் சந்ததியைக் கொதிக்கச் செய்து மெரீனாவுக்கும் அழைத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது தீர்வைத் தேடி. தமிழின் சிறப்பான எழுத்தாளரும், இந்து மொழித் திணிப்பின் தலைமைப் போராளியாகவுமிருந்த பா. செயப்பிரகாசம் இந்த விவகாரம் மீது “காக்கைச் சிறகினிலே” எனும் காத்திரமான இதழில் மாசி மாதம் எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)

(“வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்” தொடர்ந்து வாசிக்க…)

சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..

காவல்துறை அடக்குமுறைக்கு எதிரா நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் பேசியத இப்ப தான் பாத்தேன்.. பயங்கரமா ஹிப் ஹாப் தமிழா ஆதியவும் லாரன்ஸயும் மேடைல திட்டுறாரு.. கேட்டா ஆதி இஸ்லாமியர்கள தப்பா பேசிட்டாராம்.. அட எங்க எதுல தப்பா பேசுனார்னு கேட்டா எந்த டம்ளர்ஸ் கிட்டயும் பதில் இல்ல… கருணாஸ் அரசியலுக்கு வரும்போது வரவேத்த வாயி இன்னைக்கி லாரன்ஸ் வரேன்னு சொன்னா எதுக்குதுனா நீ எவ்ளோ பெரிய சாதி வெறியனா இருப்ப.

(“சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..

(இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஆனாலும் இன்று கிழக்கில் தமிழர் முஸ்லீங்கள் இடையேயான விரிசல்கள் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்றது இது தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சகோதர உணர்வுகளும் உறவுகளும் ஏற்படுதப்படவேண்டும் என்பதற்காக இதனை பதிவு செய்கின்றோம் – ஆர்)

முப்பது வருட போர் முடிவடைந்து இத்துடன் சுமார் பத்து ஆண்டுகள் கழிந்த இவ்வேளையில் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மற்றைய இனத்தவர்கள் மிகவும் மும்மூரமாக ஈடுபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  அங்கு தமிழர்களுக்கு எதிராக மிகவும் நூதனமான வேலைத்திட்டங்கள், மறைமுகமாகமாகவும், மற்றவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

(“கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..” தொடர்ந்து வாசிக்க…)