“ஆதலினால் காதல் செய்வீர்”

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!!

“ஆதலினால் காதல் செய்வீர்”

இந்த பிரபஞ்சத்தில் இனிய மனித வாழ்வு என்பது மிக அபூர்வமான அதிசயமான வரம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு அன்பும் காதலும் மிக அவசியம். ஒருவருக்கு ஒருவர் என ஆரத் தழுவி வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது மிகவும் இனிமையான சுகமான ஆனந்தமான அனுபவமாகும்.

(““ஆதலினால் காதல் செய்வீர்”” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசியல் சீரழிவிற்கு ஜெ. தான்காரணம்

ஒருவர் காலமாகி விட்டால் அவர் குறித்த விமர்சனங்கள் கூடாது என்கிற ஒரு பொதுமை தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அதிமுக என்கிற கட்சியை மட்டுமன்றி தமிழக அரசியல் சூழலையும், மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கிச் சென்றிருக்கிறார்.
முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட 5 ஆண்டு காலத்திற்குள் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார்.

(“தமிழக அரசியல் சீரழிவிற்கு ஜெ. தான்காரணம்” தொடர்ந்து வாசிக்க…)

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”·
என்று பத்து நாட்களுக்கும் மேலாக வீதியிலேயே படுத்தெழும்பிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும்வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்“ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அத்தனைபேரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது வீதி.

(““சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”” தொடர்ந்து வாசிக்க…)

துரத்தும் அபாயம் விழிபடைவோமா…?

யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கலைபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களிலும் சிங்கள மாணவர்கள் அதிகம் என்பதும் எதிர்காலத்தில் யாழ். பல்கலைக்கழக அனைத்து விடயங்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் இதனை தவிர்க்கவே முடியாது. இதற்காக இனவாதமும் பேசமுடியாது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் தமிழ் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வீதத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது super merit, merit என்ற அடிப்படையில் சித்தியடைய வேண்டும். இது பெரும் பின்னடைவில் நிற்கும் எங்கள் மாணவர் சமூகம் முன்னோக்கி செல்ல இப்போது வாய்ப்பே இல்லை.

(“துரத்தும் அபாயம் விழிபடைவோமா…?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவு

பேரா. சாம் தியாகலிங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவரும் போஸ்ரன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியரும் சர்வதேசரீதியில் அதிகளவு கணிக்கப்பட்ட ஆய்வுகள் செய்த நேர்மையான academic. இவர்தான் இம்முறை யாழ் பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் பதவிக்கு வெளியிலிருந்து விண்ணப்பித்தவர். இவரது விண்ணப்பத்தை உள்ளேயிருந்து தகுதிகுறைவான விண்ணப்பதாரிகள் பதவியிலிருப்பதால் நிராகரிக்க முயல்கின்றனர். குறிப்பாக பீடத்தலைவர்களாக இருக்கும் கணவனும் மனைவியுமான துஷ்யந்தினி, மிகுந்தன் குணசிங்கம் தம்பதியர் அதிக ஈடுபாடு இவர் விண்ணப்ப நிராகரிப்பில் காட்டுகின்றனர்.

(“யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவு” தொடர்ந்து வாசிக்க…)

ஓபிஎஸ் அணியில் 11 எம்.பி.க்கள்: அதிமுகவை உடைத்து அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக அரசு முடிவு?

அதிமுகவை உடைத்து மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.பி.க்கள் இணைந்துள்ளது இதை உறுதிப்படுத்துவதுபோல அமைந்துள்ளது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக கடந்த 5-ம் தேதி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 அல்லது 9-ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கடந்த 7-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தன்னை மிரட்டி ராஜி னாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறப் போவதாகவும் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“ஓபிஎஸ் அணியில் 11 எம்.பி.க்கள்: அதிமுகவை உடைத்து அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக அரசு முடிவு?” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஸ் கேட்பது புதிய மொந்தையில் பழைய கள்ளையே!

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் மேடையில், சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்மொழிந்த விடயம், வடக்கு மாகாண முதல்வர் திரு விக்னேஸ்வரன் தலைமையில், ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே. இது ஒன்றும் அவர் இப்போது எடுத்த முடிவல்ல. என்று அவர் தேர்தலில் தோல்வியடைந்தும், எதிர்பார்த்த தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கவில்லையோ! அன்று முதல் அவரின் சிந்தனையில் உதித்த விடயம் தான், முதல்வரின் தலைமையில் அரசியல் செய்வது. அன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முதல்வர் தலைமை தாங்க வேண்டும் என்றார்.

(“சுரேஸ் கேட்பது புதிய மொந்தையில் பழைய கள்ளையே!” தொடர்ந்து வாசிக்க…)

சசிகலா ஏன் முதல்வராக வேண்டும்..?

3 நிமிடங்களை ஒதுக்கி இந்த பதிவை முழுவதும் படித்து பாருங்கள்..!
உணர்ச்சி வயப்பட்டு அரசியல் முடிவுகளை எடுத்தே பழகிவிட்டவர்கள் நாம்.. சற்றே உங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு, அறிவுசார் தளத்தில் நின்று கீழே உள்ளவற்றை முழுமையாக வாசியுங்கள்.
ஒரே நாளில் புரட்சியாளராக உங்கள் கண்களுக்கு மாறியிருப்பவர் திரு.பன்னீர் செல்வம் அவர்கள். ஏன், எதற்கு, என்ன காரணம் என்றே தெரியாமல் மிகப்பெரிய வில்லியாக தெரிவார் சசிகலா.

(“சசிகலா ஏன் முதல்வராக வேண்டும்..?” தொடர்ந்து வாசிக்க…)

‘கேப்பாபுலவு உறவுகளுடன் கைகோர்ப்போம்’

“கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு இன, மத பேதங்களை மறந்து ஆதரவளித்து, அந்த மக்களுக்குரிய காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சகலரும் முன்வரவேண்டும்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். “நல்லாட்சி அரசாங்கம், மௌனம் கலைந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, நேற்று (12) இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, கருத்துரைகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘கேப்பாபுலவு உறவுகளுடன் கைகோர்ப்போம்’” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பு எழுக தமிழ் கஜேந்திரகுமார் குழுவின் சுயநலப்பயணம் – அனந்தி சசிதரன் விசனம்

மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் கஜேந்திரகுமாரும் சித்தார்த்தனும், விக்கினேஸ்வரனும் சுரேஸ்பிரேமச்சந்திரனும் தம்மை மேடையில் எற விடமல் தடுத்தனர் பெண்களுக்கு கதவடைப்பு நிகழ்ந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பிலோ அல்லது மகளிர் தொடர்பிலோ ஒரு பெண்ணையாவது பேச அனுமதிக்கவில்லை. 60வீதம் பெண்களுள்ள நாட்டில் ஒருபெண்ணுக்கு பேசவோ மேடையில் சரிசமமாக அமர வாய்ப்பில்லையென்றால் எதிர்காலம் எப்படியிருக்கும்? இவ்வாறு நிகழ்வில் கலந்துகொண்ட த.தே.கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் விசனம் தெரிவித்தார்.

(“மட்டக்களப்பு எழுக தமிழ் கஜேந்திரகுமார் குழுவின் சுயநலப்பயணம் – அனந்தி சசிதரன் விசனம்” தொடர்ந்து வாசிக்க…)