தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நடுவே ஏற்பட்ட பிளவுக்கு, பணப் பிரச்சினைதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ரத்த வாரிசு என்பது தீபக் மற்றும் தீபா ஆகிய அவரின் அண்ணன் பிள்ளைகள்தான். இதில் தீபக் ஆரம்பம் முதலே சசிகலாவுடன் இருந்தார். அவரை தனது தாய் போன்றவர் என புகழுரைத்து வந்தார். ஜெயலலிதாவின் சொத்துக்களை பகிர்வதில் தீபக் திருப்தியடைந்திருந்ததே இந்த நெருக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டது.
Month: March 2017
இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 116 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாட்டின் 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முன்னை நாள் பெண் போராளிகளால் வெற்றிகரமாக கிளிநொச்சியில் நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம்:
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்று அமைந்திருந்த மாடிக் கட்டடம் ஒன்றில் முழுக்க முழுக்க தமிழ்ப் பெண்களால் நிறுவப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய சந்ததிக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பொசிபிள் கிறீன் (Possible Green Ltd) என்ற அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் இன்று இலங்கை முழுவதும் மட்டுமன்றி உலகம் முழுவதும் தனது உற்பத்திகளை விற்பனை செய்கின்றது. ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் மட்டுமன்றி சில ஆபிரிக்க நாடுகளிலும் தனது விற்பனையை ஆரம்பித்துள்ள இந்த நிறுவனத்தின் இயக்குனர், முன்னை நாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியான திருமதி.கோகிலவாணி. 20 இற்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குனராக சுரபி என்ற முன்னை நாள் போராளியும், உற்பத்தி முகாமையளராக கிருசாந்தி என்ற இளம் பெண்ணும் பணியாற்றுகின்றனர்.
நெதர்லாந்து தேர்தல்
இடதுசாரி பசுமைக் கட்சி மாபெரும் வெற்றி ஈட்டியுள்ளது. தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் அதுவே பெரிய கட்சி. அதே நேரம், வலதுசாரி அரசியல் நடத்திய போலி இடதுசாரி தொழிற்கட்சி (PvdA) படுதோல்வி அடைந்துள்ளது. இவ்வளவு காலமும் பெரிய ஆளும் கட்சிகளில் ஒன்றாக இருந்தது. வெறும் 9 ஆசனங்களை மட்டும் எடுத்துள்ளது. இது ஒரு வரலாற்றுத் தோல்வி ஆகும். புதிய இடதுசாரிக் கட்சியான Groen Links (பசுமை இடது), கடந்த தேர்தலை விட 10 ஆசனங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது. அது1992 ம் ஆண்டு உருவான நவீன இடதுசாரிக் கட்சி ஆகும். பழைய கம்யூனிஸ்ட் கட்சி (CPN), மற்றும் இரண்டு முற்போக்கு கட்சிகள் சேர்ந்து உருவாக்கின.
வடகொரியா: ஒரு கொலையின் கதை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கதைகள் பலவிதம். சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக வேறுபடுகிறது. சமூகத்தில் கதைகள் ஒரு வலுவான செய்தி காவும் ஊடகமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது. குறிப்பாக ஊடகங்கள் பல செய்திகளைக் கதைகளின் வடிவில் தருவதன் ஊடு, அச்செய்தி சார்ந்து ஓர் உணர்வு நிலையை உருவாக்குகின்றன.
இரோம் ஷர்மிளா மன்னிப்பாராக…
கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ந்தேதி மணிப்பூரில் உள்ள மலோம் என்ற சிறிய நகரத்தின் மோசமான காலை வேளை. 28 வயது பெண் கவிஞர் ஒருவர் அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். தட…தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார்.
ஜனநாயகம் வாழ வாழ்த்திடுவோம்
தோழர் விஸ்வலிங்கம் சிவலிஙக்த்திற்கு (16.03.17)அகவை 70வது இன்றைய மனிதகுலத்தின் தேவைக்கு அப்பால் தனிபட்ட சுயநலத்திற்காக ஜனநாயகம் என்ற சொல்லை பயன்படுத்துகின்ற இக்கால கட்டத்தில் ஜனநாயகத்திற்காக வாழ்கின்ற தோழர் சிவிலிங்கத்திந்கு எங்கள் பிறந்த தின வாழ்த்துக்கள்.
உத்தரப் பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா?
தமிழ்நாடும் உத்தரப் பிரதேசமும் வெவ்வேறான அரசியல், கலாசாரக் கட்டமைப்புகளைக் கொண்டவை என்ற போதிலும் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டிற்குச் சில செய்திகள் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பா.ஜ.க. முக்கால் பங்கு இடங்களை (312) வென்றிருக்கிறது. அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட சிறிய கட்சிகளின் வெற்றியையும் கணக்கில் கொண்டால், பா.ஜ.க. கூட்டணி பெற்றுள்ள இடங்கள் 325.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மின்னணுப் பணப்பரிமாற்றத்திற்கு ஊக்கம் என்ற அன்றாட வாழ்க்கையைச் சிரமமாக்கிய நடவடிக்கைகளுக்குப் பிறகும் இத்தகைய வெற்றியை பா.ஜ.க. பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
(“உத்தரப் பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா?” தொடர்ந்து வாசிக்க…)
மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை
(இந்தக் கட்டுரை எமக்கும் பொருந்துகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான ஈழத்தின் தமிழ் பகுதிகளுக்கும்) எனவே இதனை பிரசுரம் செய்கின்றோம் – ஆர்)
(அ.சாதிக் பாட்சா)
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.
(“மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை” தொடர்ந்து வாசிக்க…)
சந்திரன் அருகே கிடைத்துவிட்டாள் ‘சந்திராயன் – 1’
(ம.சுசித்ரா)
இந்தியாவின் முதல் நிலவு செயற்கைக்கோளான ‘சந்திராயன்-1’ஐ கண்டறிந்துவிட்டதாக நாஸா கடந்த வாரம் அறிவித்தது. எப்படித் தொலைந்தது நமது சந்திராயன் -1?
எங்கே போனது?
22 அக்டோபர் 2008-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திராயன் -1. நிலவின் தரைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக சுமார் ரூ. 525 கோடி செலவில் இது ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவையும் அடைந்து பல புதிய தகவல்களையும் கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிவந்தது. 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவந்தது. இரண்டாடுகள்வரை இதன் இயங்குதிறன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டுக்குள் 2009 ஆகஸ்ட் 29 அன்று சந்திராயனின் தொடர்பு அறுந்துபோனது.
(“சந்திரன் அருகே கிடைத்துவிட்டாள் ‘சந்திராயன் – 1’” தொடர்ந்து வாசிக்க…)