கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 29-05-2017 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் சமூகமளிக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் அங்கஜன் இராமநாதன் இருவரின் தலைமையிலேயே இன்றையக் கூட்டம் நடைப்பெற்றது.
Month: May 2017
மட்டக்களப்பிலிருந்து காலிவரை
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர்.
மே 18 (பகுதி 12)
(அருண் நடேசன்)
ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.
மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்
மூதூர் மல்லிகை தீவு பெருவெளி எனும் இடத்தில் ஞாயிற்று கிழமை அறநெறி வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு திருமலை தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாம் நேரில் சென்று உண்மை நிலவரத்தை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். பெற்றோர் கூறியதாவது… முக நூலில் வேறு சில சம்பவத்தின் புகைப்படங்களை போட்டும், பிள்ளைகள் இறந்ததாகவும் செய்தியை பரப்பி வருகின்றனர். இது தமக்கு மிகவும் மன உளைச்சல்களை உருவாக்குகிறது என்றும் கூறினார்”.
(“மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)
பெரு வலியான பெருவெளி(மல்லிகைத் தீவு) சம்பவம்
பெருவெளி என்னும் கொட்டியாரத்து தமிழ் கிராமத்தில் 28.05.2017 ஞாயிற்று கிழமை இளம் சிறுமிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் மனதுக்கு பெரு வலியையும் துயரத்தையும் சுமந்து நிற்கிறது. இன நல்லுறவும் ஒருங்கிணைவும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதில் நாம் அக்கறையுடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் .நான் நேற்று சம்பவத்தின் உண்மை நிலை பற்றி திருச்செல்வத்துடனும் மற்றும் பலருடனும் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மூலம் உண்மை நிலவரம் தெரிய வந்தது .
(“பெரு வலியான பெருவெளி(மல்லிகைத் தீவு) சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)
பல்கலைக்கழகமும் சமூகமும்
பல்கலைக் கழகங்களே ஒரு சமுகத்தின் முற்போக்கு சிந்தனைகளின் திறவுகோல் உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் பல்கலைக்கழகங்கள் வழியேதான் முன்மொழியப் பட்டன
அறிவுச் சிந்தனை வெளியில் புதிய சிந்தனை மரபுகளை உருவாக்கியவர்கள் வரிசையில் பல்கலைக் கழக அறிவு ஜீவிகளே முன்னிலை வகிக்கின்றனர். ஆனால் இன்று நம் பல்கலைக் கழகங்கள் சுதந்திரமான சிந்தனைக் களங்களாக உள்ளனவா.
கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 201
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்துமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பலரின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 104 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
மே 18 (பகுதி 11)
(அருண் நடேசன்)
இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
சாதிக்கொரு மயானம்
யாழ்ப்பாணம், புத்தூர் கிராமத்தில் நடந்த “சாதிக்கொரு மயானம்” பிரச்சினையில் தலையிட்ட சிங்களப் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. ஆனால், இது தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் யாரும் பொங்கி எழவில்லை. “சிங்களவனே வெளியேறு!” என்று போராட்டம் நடத்தவில்லை. அதற்கு மாறாக, தமிழ் செய்தி ஊடகங்களில் பொலிஸ் அத்துமீறலை நியாயப் படுத்தும் வகையில் செய்தி வெளியிடப் பட்டன. அங்கு இயங்கும் மார்க்சிய லெனினிசக் கட்சி, மக்களை ஒன்றுதிரட்டி போராட வைத்ததை பாராட்டாமல், “மக்களை வன்முறைக்கு தூண்டி விட்டார்கள்” என்று குற்றம் சாட்டின.
(“சாதிக்கொரு மயானம்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம்.
சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து TRO உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது.