போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் சுதந்திரமானவை. ஒருபுறம் இக்கூற்று உண்மையாக இருக்கிறபோதும், மறுபுறம் இக்கூற்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல என்பதை நாமறிவோம். பல நாடுகள் சுதந்திர நாடுகள் போல் தோற்றங் காட்டினாலும் அவை அதன் இயங்குநிலையில் அவ்வாறல்ல. குறிப்பாக கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் பல நீண்டகாலத்துக்கு கொலனித்துவ ஆதிக்கவாதிகளின் நலன்களுக்குப் பங்கமில்லாமல் நடந்து கொண்டன. ஆனால் அது என்றென்றைக்கும் ஆனதல்ல என்பதைப் பலநாடுகளில் உருப்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் காட்டி நின்றன.

(“போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி” தொடர்ந்து வாசிக்க…)

நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!

அச்சு அசலாக அந்த இளைஞர் உலகப் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி போலவே இருக்கிறார். அவர் ஈரானைச் சேர்ந்தவர். அவரது பெயர் ரிசா பர்தேஷ். சமயங்களில் ரிசா பர்தேஷ் பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்ஸியின் உதைப்பந்தாட்டத்திற்கான மேலங்கியைப் போன்ற 10 இலக்கம் கொண்ட சட்டையை அணிந்து கொண்டே வெளியில் செல்கிறார். அப்போதெல்லாம் அவருக்கும் மெஸ்ஸிக்குமிடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாமலிருப்பதால், ஈரானியத் தெருக்களில் அவரைக் காண மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. இது பொலிஸாருக்கு மிகுந்த தொல்லையையும் கொடுக்கிறது. அதனால் அவரைச் சமயங்களில் போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கே கொண்டு போகிறார்களாம் ஈரானியப் போலீசார்.

(“நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!” தொடர்ந்து வாசிக்க…)

கணவன் கழுத்தைக் குதறிய சிங்கம்… காப்பாற்ற மனைவி செய்த சிம்பிள் வேலை!

பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பக்கமாகவிருக்கும் டவுள்ளேன்ஸ் (Doullens ) என்ற பகுதியில் மிருகங்களையும் வைத்து நடாத்தப்படும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வழமை போல, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.சர்க்கஸின் ஒரு பகுதியாக சிங்கத்தை வைத்து சர்க்கஸ் காட்டும் சாகச நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அவ்வேளை, அந்த நிகழ்ச்சிக்கான பயிற்சியாளர் லோபெரோட் ( Loberot) என்பவரும் சிங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூடவே இருந்தார்.

(“கணவன் கழுத்தைக் குதறிய சிங்கம்… காப்பாற்ற மனைவி செய்த சிம்பிள் வேலை!” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது.

(“புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய பிரதமரே வருக வருக

இலங்கையில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு இன்று (11) மாலை வருகைதரவிருக்கிறார். விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மாலை 6 மணிக்கு வந்தடையும் அவரை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்பர். அத்துடன், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளதுடன், படையணி மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்படும்.

(“இந்திய பிரதமரே வருக வருக” தொடர்ந்து வாசிக்க…)

பாராளுமன்றத்தில் பாலூட்டிய தாய் எம்.பி!

 

அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் இடது சாரி பசுமைக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கு கிழமை முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம் தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை கொடுப்பதில் லாரிசாவுக்கு சிறிதும் விருப்பமில்லை.

(“பாராளுமன்றத்தில் பாலூட்டிய தாய் எம்.பி!” தொடர்ந்து வாசிக்க…)

காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….

(சாகரன்)

உயிர் பலிகள் புலிகளால்
.
ரெலோவிற்கு எதிரான ஆயுத கொலைகளை புலிகள் ஆரம்பித்தவுடன் யாழ்ப்பாணத்தில் புலிகள் கிட்டுவின்;; தலமையில் யாழ்ப்பாண வீதி எங்கும் இரவு பகலாக ரோந்தும் காவலும் செய்தனர.; எல்லாப் பொதுமக்களும் விசாரணைக்குள்பட்டனர் சோதனைக்கள்பட்டனர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் கடல் மார்க்கமாக போராளிகள் தப்பி ஓடுவதற்கான பாதைகளை அடைத்து காவலும் செய்தனர்.

(“காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி

(தோழர் க. பத்மநாபா)

1986 இல் எழுதியது

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரும் தூணாக விளங்கிவந்த தோழர் சிறி எம்மிடையே இன்று இல்லாமல் போனது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். அதனிலும் மேலாக சிறி எப்படி இறந்தார் என்பது உலக நாகரீகத்தின் முன்னால் தமிழினமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாக அமைந்தது தான் என்னை மிகவும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்குகின்றது.

(“ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி” தொடர்ந்து வாசிக்க…)

வரலாறு எம்மை விடுதலை செய்யும்

வரலாறு விடுதலை செய்யும் என்ற பிடல் காஸ்ரோவின் வாக்கு இற்கு அமைய இன்று ஈழவிடுதலைக்காக போராடி தம்மை அர்பணித்த ரெலோ போராளிகளை மக்கள் தம்முடன் இணைத்துள்ளனர். வரலாறு இந்தப் போராளிகளை விடுதலை செய்து விட்டது. இந்த கொடும் செயலுக்கு மூல காரணமான புலிகளை வரலாறு என்றும் விடுதலை செய்யப் போவது இல்லை அது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து மண்டியிட்டபோதும். இதனை வரலாறு எழுதிவிட்டும் சென்றிருக்கின்றது.

(“வரலாறு எம்மை விடுதலை செய்யும்” தொடர்ந்து வாசிக்க…)