புலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் எனக் குறிப்பிடும் சுகன் „முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.’ என்கின்றார்.
(“யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்” தொடர்ந்து வாசிக்க…)