(மொஹமட் பாதுஷா)
நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.
Month: May 2017
‘நிரந்தர வழி வரும்வரை நிவாரணம் வழங்குக’
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு, நிர்க்கதிக்கு உள்ளான மக்களுக்கு நிரந்தரமான வருமான வழி கிடைக்கும் வரையிலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளு -மாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
(“‘நிரந்தர வழி வரும்வரை நிவாரணம் வழங்குக’” தொடர்ந்து வாசிக்க…)
ஸ்டாலின் அண்ணா எம்மை பிரிந்து ஆண்டு ஒன்று !?.
ஈழவிடுதலை போராட்டம் அவசரகதியில் ஆயுதபோராட்டமாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்ட போது அதுவரை மக்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் போராட்ட பாதை பற்றிய செயல் திட்டத்தில் இருந்த ஈழமாணவர் பொதுமன்றம் அதன் அரசியல் ஸ்தாபனமாக இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டிற்கும் அது ஒரு சவாலான விடயமாக இருந்தது.
(“ஸ்டாலின் அண்ணா எம்மை பிரிந்து ஆண்டு ஒன்று !?.” தொடர்ந்து வாசிக்க…)
Request for Flood Relief Assistance to Sri Lanka
The High Commission of Sri Lanka in Ottawa, Canada wishes to draw the urgent attention of all Sri Lankan expatriate community and well-wishers to the recent disaster in Sri Lanka due to the severe floods and landslides caused by heavy rainfall during the past few days. As a result, around 500,000 people have been affected at the moment. Please visit the Disaster Management Center (DMC) website: http://www.dmc.gov.lk/index_english.htm for regular situation updates.
(“Request for Flood Relief Assistance to Sri Lanka” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே,
தமிழ் நாட்டு உறவுகளே நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவாக இருந்ததால் ,இலங்கை தமிழர்கள் ஒரு அருணாக்கொடி கூட இல்லாமல் இறந்து போனார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் நீங்கள் தொப்புள் கொடி உறவாகஇருந்தால் மட்டும் போதும்.
இலங்கையில் ஈழம் புடுங்கி கொடுக்கிறோம் என்று கூறி மேலும் தமிழர்களை படுகுழியில் தள்ளவேண்டாம், உங்களுக்கு ஈழம் வேண்டுமென்றால் 7 கோடி
தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் ,
சீமானை வைத்து ஈழத்தை பெற்றுக்கொள்ளவும்.
நாலு முடிச்சுக் கயிற்றுக்கு வழியில்லாது போன முள்ளிவாய்க்கால் 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2017 என்பது தமிழர்கள் தமக்குள் நுள்ளுப்படுவதையும்¸ ஒரு விடயத்தை ஒழுங்கமைக்கும் வல்லமை இல்லாதவர்கள் என்பதையும்¸ இழந்த மக்களின் ஆத்திரத்தையும் வெளிக்காட்டிய நிகழ்வாகும். இன்னோர் வகையில் கூறுவதானால் சாவீட்டைக்கூட ஒழுங்காக அனுஷ்டிக்க முடியாத நிலையில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
(“நாலு முடிச்சுக் கயிற்றுக்கு வழியில்லாது போன முள்ளிவாய்க்கால் 2017” தொடர்ந்து வாசிக்க…)
மே 18 (பகுதி 10)
(அருண் நடேசன்)
ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார்.
தென்னிலங்கை வெள்ள அனர்ந்த நிவாரணங்களின் இணைவோம்
(சாகரன்)
தென்னிலங்கை மக்களுக்கான நிவாரணங்களில் இணைவோம் மனிதாபிமானத்துடன் கூடிய சகோதரத்துவத்தை வளர்போம் நாம் நாகரீகமான சமூகத்தின் அங்கம் என்பதை நிறுவி நிற்போம்.
(“தென்னிலங்கை வெள்ள அனர்ந்த நிவாரணங்களின் இணைவோம்” தொடர்ந்து வாசிக்க…)
தனியாக சிறை செல்ல மாட்டேன் விக்னேஸ்வரனையும் அழைத்துச் செல்வேன் – ஞானசார தேரர்
நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்” என்று, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (28) தெரிவித்தார். மேலும், “இம்முறை சிறைக்குச் செல்லும்போது, விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே செல்வேன்” எனவும் தெரிவித்தார். பொது பல சேனாவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(“தனியாக சிறை செல்ல மாட்டேன் விக்னேஸ்வரனையும் அழைத்துச் செல்வேன் – ஞானசார தேரர்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் பெண்ணின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்த சிங்கள அரச அதிபர்! நடந்தது என்ன?
பௌத்த தீவிரவாத அமைப்பாக புதிதாக நாட்டில் முளைத்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்ட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரை நாய் கூண்டில் அடைப்பார்கள் என்று கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிர் கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இவரை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மேடைகளில் முழங்கினார்கள். இப்பேச்சுகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரிதும் எடுபட்டன. இதனால் அத்தேர்தலில் ஆட்சி மாற்றத்தை வேண்டி முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தனர். சில இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைவதற்கும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறுவதற்கும் அவ்வாக்குகளே தீர்மானிக்கும் சக்திகளாக மாறின. (“தமிழ் பெண்ணின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்த சிங்கள அரச அதிபர்! நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)