சர்வதேசம் உதவி

மோசமான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ, ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முன்வந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்தால் சர்வதேசத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமையவே, மேற்படி நாடுகளும் அமைப்புகளும், உதவ முன்வந்துள்ளன.

(“சர்வதேசம் உதவி” தொடர்ந்து வாசிக்க…)

அப்பாத்துரை விநாயகமூர்த்தி இயற்கை எய்தினார்

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம், இயற்கை எய்தினார்.தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டவர் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அங்கேயே தங்கி தனது அரசியல் செயற்பாட்டைத் தொடரந்தவர். தமிழ் கைதிகளை விடுவிப்பதில் எந்த ஊதியமும் பெறாமல் நீதிமன்றங்களில் செயற்பட்டவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு

மே 18 (பகுதி 9)

(அருண் நடேசன்)

புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.

(“மே 18 (பகுதி 9)” தொடர்ந்து வாசிக்க…)

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்: உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி!

இலங்கையில் ஒருத்தன் நிலத்துக்கு கீழ இருந்து தானும் மனைவி , பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருந்தான் , பாகிஸ்தானில் ஒருவன் நிலத்துக்கு மேல 4 மனைவியுடனும் பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருந்தான், இவர்கள் இருவரும் அடுத்தவர்களை போர்க்களங்களில் சாகடித்து தாங்கள் பாதுகாப்பாக இருந்து அறிக்கையை மட்டும் விட்டுக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் சுயநலவாதிகளான இருவருக்கும் எப்படியான மரணம் ஏற்பட்டது என்பதை உலகமே அறிந்தது.

(“பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்: உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி!” தொடர்ந்து வாசிக்க…)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது! தொடர்ச்சி….. (Part 1) 

(சிவகாமி)

புலிகளின்  இருபாலை பெண்கள் முகாமின்  சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால் உணவுப்பொட்டலங்கள்  வானூர்தி மூலம் போடப்பட்டது. இதை அங்கிருந்த பெண் போராளிகள் சிலர் மிகவும் சந்தோசமாக எடுத்துக் கொண்டார்கள். இனி தமிழர்களுக்கு விடிவு வந்து விடப் போகிறது என்ற பார்வையில்.இந்தியாவின் ஆக்கிரமிப்பு அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. அவர்கள் எல்லோருமே ஆயுதப்பயிற்சிக்கு  உட்படுத்தப்பட்டவர்கள் தான்.வேறு எந்த விதமான அரசியல் சித்தாந்தமோ தர்மமோ போதிக்கப்படவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளும் பேச்சுக்களுமிருந்தது. ஆமாம்  சில போராளிகளின் தனிமனித தேடல்களும் தர்ம சிந்தனையும் தான் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது. சரியான போதனையற்ற ஆயுதப்போராட்டமே உயிர்களையும் உடமைகளையும் மதிக்காது கொடிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது என்பது தான்  சிலரால் சீரணிக்க முடியாத உண்மை.

(“வாழ்வின் பின்னோக்கிய பயணமிது! தொடர்ச்சி….. (Part 1) ” தொடர்ந்து வாசிக்க…)

வரலாறு மிகச்சிறந்த ஆசான்

யூதவிழாக்களுக்குத் தடைவிதிப்பதன் மூலமாகவே தன் கணக்கை ஆரம்பித்தான் ஹிட்லர். ஆங்காங்கே எழுந்த மெல்லிய எதிர்ப்புக்குரல்கள் தேசவெறிக்கும்பலின் வெறிக்கூச்சலில் அமுங்கிப்போனது. நொந்துகொண்ட யூதர்கள், மறைந்து ஒளிந்து தங்கள் வீடுகளுக்குள் மதச்சடங்குகளை அஞ்சியஞ்சிக் கொண்டாடினார்கள்.

(“வரலாறு மிகச்சிறந்த ஆசான்” தொடர்ந்து வாசிக்க…)

மாயாவதியும் – முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?

மோடிக்கு நிகரானவர் யோகி

ஜாதிக்கலவரம் உத்தரப்பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் பரவி விட்டது, செவ்வாய்கிழமை ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது மீண்டும் கலவரம் வெடித்ததில் இரண்டு தலித் இளைஞர்கள் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், இணைய தள சேவை, தொலைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டு வந்த தலித் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

(“மாயாவதியும் – முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

கொட்டியாரத்து பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்

”இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம். இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளாக நாம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
(“கொட்டியாரத்து பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

‘கொடுமை’க்கானலாக மாறிய கொடைக்கானல்: மனம் நொந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகள்

(பி.டி.ரவிச்சந்திரன்)

‘மலைகளின் இளவரசி’ என அழைக் கப்படும் கொடைக்கானலின் இயற்கை எழிலை ரசிக்க ஆவலோடு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் பயணத்தை முடித்து திரும்பும் போது, இத்தனை சிரமங்களுக்கு இடையில் இயற்கை எழிலை ரசிப்பது சாத்தியமில்லை என்ற மனநிலை யில் கொடைக்கானலை ஒரு கொடுமைக்கானலாகவே பார்த்து விட்டு மனம் நொந்து செல்கின்றனர்.

(“‘கொடுமை’க்கானலாக மாறிய கொடைக்கானல்: மனம் நொந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகள்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 8)

(அருண் நடேசன்)

இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர்.

(“மே 18 (பகுதி 8)” தொடர்ந்து வாசிக்க…)