உறவுகள் பகிரங்கமாக நினைவுகூர முடிந்ததா….?

கடந்த 30 வருடங்களில் துரோகிகளாக கொல்லப்பட்ட பல்லாயிரம் பேரை அவர்களின் உறவுகள் தான் பகிரங்கமாக நினைவுகூர முடிந்ததா. எங்காவது அவர்களுக்கு நினவுச் சின்னம் தான் அமைக்க முடிந்ததா. சொரணையற்றவர்கள் வெட்கமற்றாவர்கள் நாடக பாணியில் மனித உரிமை பேசுகிறார்களாம் மனித உரிமை. முள்ளி வாய்க்காலில் இருந்து ஜெனிவா வரை. உச்சுக்கொட்டி மாய்மாலக்கண்ணீர் வேறு. விடுதலையின் பேரில் துரோகிகள் நாமத்துடனும் விடுதலை வீரர்கள் நாமத்துடனும் கொல்லப்பட்டவர்களையும் அநியாயமாக அப்பாவிகளாக உயிரிழந்த கொல்லப்பட்ட அனைத்து தரப்புமக்களையும் எம்மால் தீங்கிளைக்கப்பட்ட சக சமூகங்களின் பேரிழப்புக்களையும் படுகொலை செய்யப்பட்ட எமது- மற்றும் அண்டை நாட்டு தலைவர்களையும் அனைத்து கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் ஒன்றாக நினைவுகூர முடியுமா. பாரதூரமான அழிச்சாட்டியங்கள் அட்டூழியங்கள் எமது சமூகத்தில் நிகழ்ந்திருக்கின்றன என்று எம்மால் ஒப்புக்கொள்ளத்தான் முடியுமா? ஒரு சுயவிசாரணையை நடத்த முடியுமா? நாம் மனந்திறக்காதவரை விமோசனம் இல்லை. இல்லவே இல்லை.

(Comrade Sugu)

மே 18 (பகுதி 2) 

(அருண் நடேசன்)

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.

சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.
புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.

(தொடரும்….)

முள்ளிவாய்காலில் அரசியல் பேசுவதை தடைபோடும் அக்கா

நேற்று ஆர்ப்பாட்டம் போட்ட அக்கா ஆற்ற ஆள் என்று பாருங்கள்…. அங்க அனந்திய அரசியல் பேசவிட்டுட்டு இங்குவந்து சொல்லுறா யாரும் அரசியல் பேசக்கூடாதாம். இவர்கள்தான் மக்களாம்…முள்ளிவாய்க்காலில் மக்கள் சம்மந்தன் ஐயாவை திட்டித் தீர்தார்களாம்…இது ஊடகங்களின் செய்தி…நீங்களே தீர்மாணியுங்கள் மக்களா அல்லது இந்த மாணம்கெட்ட பிழைப்புகளா என்று….ஜனநாயகம் பற்றி அறிந்திராத அனந்தி போன்றவர்கள் ஜனநாயகத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஜனநாயக துஸ்பிரயோகம் செய்வது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுக்கும்…இதை மக்கள் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல…

முள்ளிவாய்காலில் பல நிகழ்வுகள்

“போர்க்காலத்திலும் தாங்கள் கைவிடப்பட்டிருந்தோம். இப்போதும் அப்படியான ஒரு நிலைதான் உருவாகியிருக்கு. ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தப்பார்க்கினம். கொல்லப்பட்டவைக்கு உண்மையில அஞ்சலி செலுத்திறதெண்டால், எல்லாருமாகக் கூடி, ஒண்டா நிண்டு அதைச் செய்யலாமே! அப்பிடிச் செய்யாமல், ஏனிப்பிடி ஆளுக்கு ஒரு இடமாக நிண்டு கொண்டாடுகினம்? இது எனக்குச் சரியாகப் படேல்ல. எல்லாரும் எங்களுடைய கண்ணீரையும் கவலைகளையும் இழப்புகளையும் தங்கடை அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கினம். இதுதான் நடக்குது”. என்று சொல்லிக் கவலைப்பட்டார் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே 17 இல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுத்த தந்தையொருவர்.

(“முள்ளிவாய்காலில் பல நிகழ்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்காலின் நினைவலைகள்

என் இனம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாள் மே பதினெட்டு …! இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன. 2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர். 2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர். 2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் வரை இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது. இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்..இதைய அஞ்சலி ,.முள்ளி வாய்க்கால் ஒரு முடிவல்ல ….!!!!

(Kulam Peter)

புகழ்பெற்ற இரு “சிங்கள” தலைவர்களின் பூர்வீகம்

1.
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் பெற்றார். நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ” [ 1770 இல் பிறந்தார் ] .இவர் கோரலை முதலியாராக இருந்தார்.இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல் .
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”.இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா.
இவர்கள் கிறிஸ்தவ தமிழர்கள்.
2.
சிறு வயதில் தந்தையை இழந்த தம்பி முதலியார் என்ற தமிழன் கொழும்பில் குடியேறினான்.ஒல்லாந்துக்கு உளவு பார்த்தல் அவன் செய்த தொழில். தன்னை” ஏட்ரியன் ஜெயவர்த்தன ” என்று பெயர் மாற்றி கொண்டான் தம்பி முதலியார். இவரது மகன் தொன் ஏப்ரஹாம் ஜெயவர்த்தன. இவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன. இவரது மகன் யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன.இவரது மகனே J.R.ஜெயவர்த்தன.
ஜெயவர்த்தனாவின் மகன் ரவி திருமணம் முடித்ததும் ஒரு தமிழ் பெண்ணையே !
இவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களே.

(TSounthar Sounthar)

மே 18 (பகுதி 1)

(அருண் நடேசன்)

எங்கள் தேசத்தில் எம் இனத்தை கொலைகளத்தில் பலி கொடுக்கப்பட்ட நாள் , இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள். ஆனால் இது யாரால் ஏற்பட்டது ? போரின் இறுதி நாட்கள் எவ்வாறு இருந்தன?வன்னியில் என்ன நடந்தது? பிரபாகரன் இறுதியாக The Three Hundred என்ற ஆங்கில படத்தை
பார்த்த பின்னர் எடுத்த முடிவு என்ன?
கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு, ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி இதனை முழுவதும் படிக்கவும்.
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு.

(“மே 18 (பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப்போரின் இறுதி நாட்கள்

காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது.

(“ஈழப்போரின் இறுதி நாட்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ‘மே 18’ நினைவேந்தல்

யுத்தம் நிறைவுக்கு வந்த மே 18 ஆம் திகதியான இன்று (18) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தரப்பினரால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் 2006 ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய கோரத் தாண்டவம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

(“இன்று ‘மே 18’ நினைவேந்தல்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்கால்

1984 காலப்பகுதியில் புலிகள் அடிக்கடி கண்ணி வெடி தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மட்டுமே செய்திகளாக வரும்.இந்த தாக்குதல்களின் பின் விளைவுகள் ஒரு பொழுதும் செய்திகளாக வந்ததில்லை. இதே காலப்பகுதியில் யாழ்பாணத்தில் பொதுவாக தமிழர்கள் புலிகள் அடிக்கிறார்கள்.மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கேள்வி. போதாக்குறைக்கு வெளிநாட்டில் புகலிடம் கோரிய தமிழர்களும் இதே கேள்விதான்.

(“முள்ளி வாய்க்கால்” தொடர்ந்து வாசிக்க…)