ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ரஷ்ய வெளிநாட்டமைச்சர், ரஷ்யத் தூதுவர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இரகசியத் தகவல்கள் எவையும் பரிமாறப்பட்டிருக்கவில்லை என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
Month: May 2017
என் மனவலையிலிருந்து……!
(சாகரன்)
கம்யூட்டர் வைரஸ்: மனிதனை தோற்கடிக்குமா…? மனிதனால் உருவான மெ(வ)ன் மூளை…!
வழமையாக வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுவது வழக்கம். இதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. இந்த தடவை ரஷ்ய நிறுவனங்களின் கணனிகள் பெருமளவில் இந்த வைரஸ் என்ற மென்பொருள் ஆயுதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனாலும் இதற்கான கிரிமினல்கள் அமெரிக்காவில் இருந்தே இயங்கலாம் என்று நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அனைத்தும் இணையவலைப் பின்னலுக்குள் அடங்குகின்றன. இது கிரிமினல்களுக்கும் வாய்ப்பாகிவிடுகிறது.
மென்பொருள் ஆயுதம்: அமெரிக்க இலத்திரனியல் ஓட்டையூடு குழப்பம் விளைவிக்கும்
இன்று உலகம் முழுவதும் பரவி வரும் கணனிகளை செயலிழக்க வைக்கும் வைரஸ் அமெரிக்காவில் இருந்து பரவி இருக்கலாம் என நம்பப் படுகின்றது. அதற்குக் காரணம் அமெரிக்க உளவு நிறுவனம் NSA ஹேக்கர்ஸ் பயன்படுத்திய பாதையின் ஊடாகத் தான் இந்த வைரஸ் பரவுகின்றது. அதாவது வின்டோஸ் மென்பொருளில் ஒரு பாதுகாப்பு ஓட்டை உள்ளது. அதன் மூலமாகத் தான் கிரிமினல்கள் வைரஸ் அனுப்புகிறார்கள். இந்த பாதுகாப்பு ஓட்டை NSA உளவறிவதற்காக உண்டாக்கப் பட்டது.
(“மென்பொருள் ஆயுதம்: அமெரிக்க இலத்திரனியல் ஓட்டையூடு குழப்பம் விளைவிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)
திறந்த வெளிப்படையான கடிதம்!!
(பூரணமாகவும், கச்சிதமாகவும், மற்றும் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன்)
பெறுனர்:
திரு. நீரஜ் டேவிட் மற்றும் திரு. ரவி அருணாச்சலம்,
IBC Tamil,
London, UK
திரு நீரஜ் டேவிட் மற்றும் திரு ரவி அருணாச்சலம் அவர்களுக்கு,
எனது பெயர் யோகீசன். 1980 களின் தொடக்கத்திலிருந்து எழுத்தாளரகவும், சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பங்களிப்பாளனாகவும் இன்று வரை நான் எழுத்துப் பணியில் இருக்கிறேன். மற்றும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூக ஊடகத்தில் பல கட்டுரைகள் கொடுத்துள்ள “புலோலியூரான்” என்ற ஒரு நன்கு அறியப்பட்ட நபர். IBC, TRT போன்ற தமிழ் ஊடகத்திலும் நன்கு பிரசித்தமானவன். எழுத்து மற்றும் கருத்துப் பதிவுகள் இதுவே என் பேரார்வம், மற்றும் அறியப்பட்ட மட்டத்தில் பொது ஊடகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுடனும் என்னை நான் இணைத்துள்ளேன்.
மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு
(கருணாகரன்)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே – யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை.
(“மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)
வடமத்தியை மஹிந்த கைப்பற்றுவார்?
வடமத்திய மாகாண சபையில் பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இது தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்க அவர்கள் தயாராக உள்ளனர். மேலும், வட மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஆவர். மிகுதி 11 பேர் ஐக்கிய தேசிய கட்சியையும் மேலும் ஒருவர் ஜே.வி.பியையும் பிரதிநிதித்தவப்படுத்துபவர்கள் ஆவர். இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களில் 17 பேர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்கி தனித்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் அழுத்தத்தை நம்பியிருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
ஜெனீவா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை, சர்வதேச அரசாங்கங்கள் வழங்க வேண்டுமென, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான பில் ஜோன்சனிடம் வலியுறுத்தியுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
(“அமெரிக்காவின் அழுத்தத்தை நம்பியிருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)
குமுதினி படகு படுகொலை 32 ஆண்டுகள்
இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த சம்பவங்கள் அனைத்தும், இன்று வரையிலும் தமிழ் மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.
தோழர் சோமு: கரைத் தொடாமல் காற்றுடன் கலந்துவிட்ட கரைப் பொறுப்பாளனே!
(தோழர் ஜேம்ஸ்)
வெலிக்கடைப் படுகொலையில் எதிரி உன் உயிரை பறிக்க முடியவில்லை. பிணக் குவியலுக்குள் பிணம் போல் படுத்துறங்கி விழித்தெழுந்தவனே. 1983 வெலிக்கடைப் படுகொலையை சர்வதேசம் எங்கும் உன் பதிவு மூலம் பதிய வைத்தவன் நீ. ஈழவிடுதலைக்கான புரட்சிகர இலக்கியம் அருளரின் இலங்காராணிக்கு அடுத்ததாக உன்னுடைய வெலிக்கடைப் படுகொலை விபரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
(“தோழர் சோமு: கரைத் தொடாமல் காற்றுடன் கலந்துவிட்ட கரைப் பொறுப்பாளனே!” தொடர்ந்து வாசிக்க…)
அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனங்களுக்குச் செவி மடுக்காது, சீனாவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காது, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பலைகளைக் கவனத்திற் கொள்ளாது வட கொரியா நேற்று ஞாயிற்றுக் கிழமையும் ஓர் ஏவுகணையை வானில் செலுத்தியுள்ளது.
(“அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!” தொடர்ந்து வாசிக்க…)