தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது.
Month: June 2017
மூதூரில் நடந்த கொடூரமும் நாமும்
(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பயணி செய்த வேலை; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று இலங்கைப் பயணி ஒருவரின் நடத்தை காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(“இலங்கைப் பயணி செய்த வேலை; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர்களினதும் அவர்களின் தலைவர்களினதும் அவலநிலை
நான் ஒரு அவுஸ்ரேலிய குடிமகன், ஆனால் தற்போது இலங்கையின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களுடனும் யாழ் பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர்களுடனும் கலந்துரையாடியள்ளேன். முப்பது வருட ஆயுத போராட்ட தோல்வியின் பின்னரும் இவர்களின் சிந்தனைகள் செயல்களில் மாற்றம் இல்லை. சிங்கள மக்களின் சனத்தொகையில் ஒப்பிடும் போது உலக தமிழர் ஐந்து மடங்கு, ஆனாலும் இன்று அவலநிலை. தமிழ்த் தலைவர்கள் உண்மையை உணராதவர்கள் அல்லது தங்களின் சுயநலத்திற்காக உண்மையை மறைப்பவர்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதியின் வார்த்தைகள் “இன்று தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரனம் புலிகள், இறந்த புலிகள்தங்களது ஆவியினால் மக்களை பாதுகாக்கின்றார்கள்.” தமழ் தேசிய கூட்டமைபின் தலைவரின் வார்த்தைகள் “ஆயுத போராட்டம் முறைமையானதும், காலத்தின் தேவையுமாய் இருந்தது.”
(“தமிழர்களினதும் அவர்களின் தலைவர்களினதும் அவலநிலை” தொடர்ந்து வாசிக்க…)
மே 18 (பகுதி 13)
(அருண் நடேசன்)
இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது.