யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் இன்று (28) பிற்பகல் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைத்தீவு கடற்பரப்பில் இளைஞர்கள் 7 பேர் படகில் இருந்தவேளை அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கியோரில் ஒருவர் மாத்திரம் நீந்தி, கரையை வந்தடைந்துள்ளார். ஏனையோரில் ஐவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டதுடன் மேலும் ஒருவரைத் தேடும் பணிகளில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர தேடுதலின் பின்னர் மற்றையவரின் சடலமும் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் உரும்பிராய், நல்லூர், கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மீட்கப்பட்டோரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
Month: August 2017
ஹக்கீமிடம் பணம் வாங்கியவர்களுக்கே குமாரிக்கு நேர்ந்த அநியாயம் குப்பை, பழைய கதை
(தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியரின் தான்தோன்றித்தனமான அசிங்க தலையங்கத்துக்கு பதில்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும், தூய முஸ்லிம் காங்கிரஸ்செயற்பாட்டளருமான பஷீர் சேகுதாவூத் அவரின் பேஸ்புக்கில்”இறைவன் நாடிவிட்டான்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒருபதிவைஆதராமாக கொண்டு தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியரான நீங்கள் உங்களது பத்திரிகையில் அவரை தாக்க வேண்டும் என்ற ஒரேநோக்கத்தில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கிறீர்கள்.
பிலிப்பைன்ஸ் – சீன பொருளாதார உறவு
(ஜனகன் முத்துக்குமார்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் – சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 உடல்கள். ஈராக்கில் பயங்கரம்!!
ஈராக்கில் 2 புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈராக்கில் 2014ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள்.
(“தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 உடல்கள். ஈராக்கில் பயங்கரம்!!” தொடர்ந்து வாசிக்க…)
சைட்டத்துக்கு எதிராக போராட்டம்
சைட்டம் தனியார் மருத்துவ கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் இன்றைய தினம் (25) பேரணி இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக, இன்று மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள், வைத்தியசாலை வீதி வழியாக, காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் உள்ள மைதானத்தை சென்றடைந்தனர். குறித்த பேரணியில், தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வீடுகள் கையளிப்பு
பரபரப்பான சூழலில் சென்னை வந்தார்: ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் திமுக எம்எல்ஏக்கள் இன்று சந்திப்பு – சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்த திட்டம்
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தார். அவரை திமுக எம்எல்ஏக்கள் இன்று காலை 10.30 மணிக்கு சந்திக்கின்றனர். அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துவிட்டது. முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22-ம் தேதி ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். கடிதத்தை பெற்ற அவர் அன்றே மும்பை சென்றுவிட்டார். அதன்பின், தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து விட்டது.
‘கடவுள்’ பெயரில் பலாத்காரம் செய்த குர்மீத்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலப்படுத்திய 2 பெண் சாட்சிகள்
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தன்னை கடவுளாக கூறி பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. பலாத்கார வழக்கில் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு 2 பெண்களின் சாட்சியம்தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் குர்மீத் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். குர்மீத் ராம் எப்படி எல்லாம் பெண்களை தனது வலையில் சிக்க வைத்தார் என்பதை நீதிபதியிடம் விவரித்துள்ளனர்.
வீடு திரும்பினார் பேரறிவாளன்! வரவேற்ற மக்கள் கூட்டம்! பொலிஸார் குவிப்பு! நிபந்தனைகள் விதிப்பு,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார். ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
‘அதிகப்படியான பலம் உதவாது’
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் காணப்படும் றோகிஞ்சா முஸ்லிம்களின் பிரச்சினைக்கு, ஏனைய விடயங்களையும் ஆராய்ந்து, அதற்குப் பதிலளிக்க வேண்டுமெனவும், அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் தலைமையிலான குழு, நேற்றுத் தெரிவித்தது.