ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் இனப்பாகுபாடுகளைக் கண்டித்து, போட்டிகளுக்கு முன்பாக ஒலிபரப்பப்படும் தேசிய கீதத்தின் போது, முழங்காலில் நிற்கும் வீரர்களுக்கு எதிராக, ஜனாதிபதி ட்ரம்ப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, போராட்டங்கள் அதிகரித்துள்ளன. முழங்காலில் நிற்பவர்களை, தரக்குறைவாக உரையாற்றியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அவர்களை, விளையாட்டில் சேர்க்கக்கூடாது என்ற ரீதியில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தேசிய கால்பந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், முழங்காலில் நின்றும், ஏனைய வழிகளிலும், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 14 போட்டிகளில், 150க்கும் மேற்பட்ட வீரர்கள், இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.