கேரளத்தில் வாழுகின்ற “ஈழவர்” சமூகம் குறித்த ஆய்வு, இலங்கையில் பண்டைக்காலம் முதல் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குறித்து அதாவது ஈழத்தமிழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயனுடையதாகலாம் போல் தெரிகிறது. எனவே, இக்கட்டுரையில் கேரளத்தில் வாழுகின்ற ஈழவர் குறித்து கிடைக்கிற தகவல்களைத் தொகுத்து முன்வைக்க முனைகிறேன்.
Month: September 2017
கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் பொருளாளரான நற்பிட்டிமுனையை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் – வயது 67 மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்முனை பொலிஸார் நீதியான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோருவதாகவும் இச்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா
இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (08) பிற்பகல், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. சிங்களம், தமிழ், ஆங்கில இலக்கியத்தின் மேம்பாட்டுக்காகச் செய்த சேவையை கௌரவித்து வழங்கப்படும் சாகித்திய ரத்ன விருது, பேராசிரியர் ஆரிய ராஜகருணா, நீர்வை பொன்னையன், ஜீன் அரசநாயகம் ஆகிய எழுத்தாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.
(“ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் போர்க்குணத்தின் ஒரு பாரம்பரியம்: ஜனநாயகத்துக்கான வெகுஜன அரசியல்
தோழர் சிறிதரனுடன் ஒரு நேர்காணல்
அகிலன் கதிர்காமர்
புரட்சி சாத்தியமானது என நாங்கள் நம்பினோம்:
இடதுசாரிகள் ஐக்கியப்பட வேண்டும்:
இங்குள்ள அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ பிரபுக்களைப் போல செயற்படுகிறார்கள்:sritharan-11
கேள்வி: உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பின்னணி பற்றிக் கூற முடியுமா? உங்கள் அரசியல்மயமாக்கலில் அது செல்வாக்குச் செலுத்தியதா?
(“தமிழ் போர்க்குணத்தின் ஒரு பாரம்பரியம்: ஜனநாயகத்துக்கான வெகுஜன அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)
இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்
(Ahilan Kadirgamar)
வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை, சி.க.செந்தில்வேல்,
(புதிய நீதி வெளியீட்டகம், ஜீலை 2017). யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும் பரிசோதனை செய்வதும், எங்களுடைய முக்கியமான கடமையாகும்.
ஆனால் யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான், நேர்மையுடனும் விமர்சன ரீதியாகவும் அந்த வரலாற்றைப் பதிந்திருக்கின்றன. இந்த வகையில், “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” என்ற சி.க செந்தில்வேலின் புத்தகம், போருக்கு பின்னான தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு புத்தகமாக அமைகின்றது.
(“இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்” தொடர்ந்து வாசிக்க…)
2009ஆம் ஆண்டு பிரபாகரனை கொன்றோம்! – மீண்டும் கமால் குணரத்ன
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்த பிறகு, தீவரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தலைமையில், “எலிய – ஒளிமயமான அபிலாசைகள்” என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
(“2009ஆம் ஆண்டு பிரபாகரனை கொன்றோம்! – மீண்டும் கமால் குணரத்ன” தொடர்ந்து வாசிக்க…)
மு. காவின் பேரம் பேசும் சக்தியை பலி கொடுத்தேனும் காரியப்பரை காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ஹக்கீம்!
சுட்டிக்காட்டுகிறார் பஷீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொற்ப அளவிலான பேரம் பேசும் சக்தியை பெருந்தேசிய கட்சிகளுக்கு பலி கொடுத்தேனும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ரவூப் ஹக்கீம் உள்ளார் என்று இக்கட்சியின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக மு. கா தலைவரால் நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார். (“மு. காவின் பேரம் பேசும் சக்தியை பலி கொடுத்தேனும் காரியப்பரை காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)
கிழக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் பல்வேறு பகுதிகளில் இன்றும்(08) ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷீறா மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
ஆழ்ந்த அஞ்சலியும் – கண்டனங்களும்..
‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். அச்சமின்றி இடைவிடாது பத்திரிகைப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த கௌரி லங்கேஷை பெங்களூரில் அவரது வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை , நான்கு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
Occasional Stories: A Rebel At The Door!
(By Laksiri Fernando) (Colombo Telegraph)
I suddenly woke up with a gentle knock on our front door. On other days, we all would have been awake by this time but this was school holidays and university vacation. We all were having an easy time; I, my wife and our son.
Who could be at our door this early, I wondered.
I heard most certainly Wimala, our domestic help, walking to the door and opening it and then she came to our door and said, “Someone to see you Sir.”
(“Occasional Stories: A Rebel At The Door!” தொடர்ந்து வாசிக்க…)