பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறை சாத்தியமா?

மீண்டும் மீண்டும் நாவுக்கரசருக்கு சிவன் முதல் அடி எடுத்து கொடுத்து பித்தா பிறைசூடி என பாடவைத்தது போலவே பத்தி எழுத்தாளார் எனக்கும் வழி சமைத்து தருகிறார். எமக்குள் எந்தவித அறிமுகமும் இதுவரை இல்லை. அவரின் எழுத்துக்களை மட்டும் ரசிப்பவன் நான். ஆனால் ஒரு ஒற்றுமை. அவர் இருப்பது நான் பிறந்த கிளிநொச்சி மண்ணில். அதனால் தானோ ஒருவகை ஈர்ப்பு.

(“பழையன கழிதலும் புதியன புகுதலும் நடைமுறை சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

(“இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

(“தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும்” தொடர்ந்து வாசிக்க…)

கிரான் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை (31) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

(“கிரான் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

(காரை துர்க்கா)

அடுத்த வருடத் தீபாவளியை (2018) நல்லதொரு தீர்வுடன், மன நிம்மதியாகத் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த, தீபாவளிப் பண்டிகை, அலரிமாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியல் அமைப்பு உயிர்வாழுமா…?

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி இதனை சட்டமூலமாக்கி இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த தேர்தலின் பின்பு கூட்டரசாங்கத்தை ஏற்படுத்தி இதற்கு எற்ப தமிழ் தரப்பு எதிர்கட்சியையும் பாராளுமன்றத்தில் அமர்த்தி விட்டு நல்லாட்சியை நடத்துகின்றோம் என்று புறப்பட்ட ஐக்கியத் தேசியக் கட்சி சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு எனப் புறப்பட்ட அரசு கடந்த வாரம் தனது புதிய அரசியல் அமைப்பின் உத்தேச இடைக்கால அறிக்கையும் வெளியிட்டு இருக்கின்றது.

(“புதிய அரசியல் அமைப்பு உயிர்வாழுமா…?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியலுக்கான மாற்றுத் தலைமை – மடிக்குள்ளேயே மருந்து

(கருணாகரன்)

அவருக்கு வயது, 68. பெயர், சிவராஜா. கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தச்சுத் தொழில் செய்கிறார். அவருடைய நான்கு பிள்ளைகளில் ஒருவர் 2007 இல் விடுதலைப் புலிகளால் இயக்கத்தில் இணைக்கப்பட்டு 2009 இல் காணாமல் போய்விட்டார். இது இப்போது இந்தக் குடும்பத்தின் முக்கியமான பிரச்சினையாகி விட்டது. பாதி நேரம் காணாமல் போனவரைத் தேடுவதற்கே செலவாகிறது. இதனால், முன்னரைப்போல அவரால் ஒழுங்காகத் தொழில் செய்ய முடிவதில்லை. மனச்சோர்வும் இடைக்கிடை ஏற்படுவதுண்டு. காணாமல் போன மகன் அவருக்கு உதவியாக வேலை செய்தவர். ஆகவே அவன் இல்லாத நிலையை உணரும்போது மனம் சோர்ந்து விடும்.

(“தமிழ் அரசியலுக்கான மாற்றுத் தலைமை – மடிக்குள்ளேயே மருந்து” தொடர்ந்து வாசிக்க…)

கிரான் பதற்றம் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது

(சாகரன்)

கிழக்கில் வாழும் இரு சிறுபான்மை இன மக்களிடையே வளரக்;கப்படவேண்டிய சகோரத்துவ உறவு 1970 களின் பிற்பகுதிகளில் இருந்து குறைந்து வருவது கவலையை அளிக்கும் செயற்பாடாக இருக்கின்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்ணியுடன் ஐக்கியமாக இணைந்து செயற்பட்ட நிலமையை சரிசமமாக பாவிக்க தெரியாத சூழலில் முஸ்லீம் மக்கள் தனியான கட்சியமைத்து செயற்பட்டதும் இதனைத் தொடர்ந்து உருவான ஈழவிடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம் மக்களும் இணைந்து போராடியதும் புலிகள் ஏகபோகமாக உருவெடுத்து வடக்கில் இருந்து முழுமையாக முஸ்லீம்களை சுத்திகரித்ததும் கிழக்கில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற கொலைகளும் இதன் மறு வளங்களாக இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஊர்காவல் படைகளில் முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து தமிழ் மக்களின் கிராமங்களில் நடைபெற்ற கொலைகளும் பல கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும் இருதரப்பிலும் சமான்ய மக்கள் இவ் அநியாயங்களை எப்போதும் ஆதரித்து இருக்கவில்லை. (“கிரான் பதற்றம் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் விவாதம்

நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள, புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் இன்று (30) அரசமைப்புப் பேரவை, கூடவுள்ளது. இன்று ஆரம்பமாகும் விவாதம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறும். இன்று காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகவுள்ளதென, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் விவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

கென்ய தேர்தல் – 2017

(ஜனகன் முத்துக்குமார்)

கென்யாவில் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் இருந்து, தேர்தல் தொடர்பான வன்முறைகளில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர் என்பதுடன், அதில் பெரும்பாலானோர், எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த, கென்யாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குடியேற்றங்களைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகின்றது.

(“கென்ய தேர்தல் – 2017” தொடர்ந்து வாசிக்க…)