இளஞ்செழியன் யார்? அவர் எங்கு கற்றவர்? அவரது தனிப்பட்ட விழுமியங்கள் அரசியல் பொருளாதார கலாச்சார நம்பிக்கைகள் என்ன என்பவற்றுக்கு அப்பால் இலங்கையில் கால்நுற்றாண்டுக்குமேல் நடந்த போரில் நீதித்துறை வளராமல் முடங்கியிருந்தது என்பது முக்கியமானது. நேர்மையான துணிகரமான கடுமையான தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கும் இளஞ்செழியனை நாம் வரலாற்று சந்தர்ப்பத்தில் வைத்துப்பார்க்கவேண்டிய தேவையிருக்கிற அதேநேரம் எந்த மாவட்ட தலமை நீதிபதியும் தீர்ப்புவழங்கும் நிலத்தின் வரலாறு கலாச்சாரம் மதநம்பிக்கைகளை தருக்கம் தரவுகளுக்கப்பால் கவனத்திலெடுக்கவேண்டும் என்கிற குடிமக்களின் எதிர்பார்ப்பும் நியாயமானதே.
Month: October 2017
பிரதி அமைச்சர் ஹரிஸின் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான கருத்து திருட்டு அரசியல் விளையாட்டு!
– நாபீர் பவுண்டேசனின் தலைவர் சுட்டிக்காட்டு -!
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு போதும் இடம் அளிக்க மாட்டார்கள் என்று விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் கூறி வருகின்ற விதம் அவருடைய அரசியல் திருதாளத்தையே காட்டுகின்றது என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்தார்.
வெனிசுவேலா எதிரணியில் பிளவு
வெனிசுவேலாவில் அண்மையில் நடத்தப்பட்ட, ஆளுநர்களுக்கான தேர்தல்களின் வெற்றிபெற்ற, எதிரணியைச் சேர்ந்தவர்களின் 4 பேர், அந்நாட்டின் சர்ச்சைக்குரிய அரசமைப்புச் சபைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வளவு நாட்களும், அச்சபை, சட்டத்துக்குப் புறம்பானது என, அவர்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையிலேயே, தற்போது அவர்கள், சபைக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மல்வத்தை தமிழ் மக்களுக்கு தனியான பிரதேச சபை வேண்டும், உள்ளூராட்சி மன்றங்களை தாபிக்கும் குழுவுக்கு வேண்டுகோள்!
மல்வத்தையை மையமாக கொண்டு தனியான பிரதேச சபை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான செல்லையா இராசையா அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழுவுக்கு எழுத்துமூலம் கோரி உள்ளார்.
வாய்ச் சொல்லில் வீரர்கள்
(Nirshan Ramanujam)
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் காலங்களில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாகவும் முதலாவது வாக்குறுதியாகவும் அமைந்திருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், அதற்குப் பின்னரான காலத்தில் தமிழ்ப் பாடசாலை குறித்து, வாக்குறுதியளித்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.
‘சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்’
சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் உருவாகியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்களை அரசியலைமைப்பில் சட்டத்தில் சேர்ப்பதற்கான ஆதரவைப் பெறுவதற்கான வாக்கெடுப்பை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம் மாவோவுக்கு அடுத்து சீனாவின் அரசியலைப்பு சட்டத்தில் ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்கள் சேர்க்கப்படவுள்ளன. இதனையடுத்து ஜி ஜின்பிங்கை மாவோக்கு நிகரான சக்தி படைத்தவராக ஜி ஜின்பிங் பார்க்கப்படுகிறார்.
(“‘சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்’” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கையின் வறுமையில் மாகணத்தில் வடக்கும் மாவட்டத்தில் முல்லைத்தீவும் முதலிடம்
இலங்கையில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகபட்சமாக வறுமை நிலை காணப்படுகின்றது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2012/13, காலப்பகுதியில், 6.7 வீதமாக இருந்த சிறிலங்காவின் வறுமை நிலை, கடந்த ஆண்டில், 4.1 வீதமாக குறைந்துள்ளது. (“இலங்கையின் வறுமையில் மாகணத்தில் வடக்கும் மாவட்டத்தில் முல்லைத்தீவும் முதலிடம்” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லிம் மாகாணத்துக்கான அல்லது முஸ்லிம் சுயாட்சிக்கான வாக்குறுதிகள்
பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்பட்ட பொழுது இலங்கை அரசு முஸ்லிம் காங்கிரசை புறக்கணித்தாலும் , ( 1988 ஆம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், 1989 ஆம் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ) வடக்கு கிழக்கு மாகாண சபையில் பதவி ஏற்ற காலகட்டங்களில் பிரேமதாசாவே ஆட்சியில் இருந்தார். முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக அரச பங்காளிகளாக இல்லாவிடினும் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து ஜனாதிபதியாக்கியமை (!) , பிரேமதாசா மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான , தங்களுக்கு சவாலாக அமையும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை போட்டியிடாமல் தடுத்தமை என்பன மூலம் பரஸ்பரம் நன்மையடைந்திருன்தனர்.
(“முஸ்லிம் மாகாணத்துக்கான அல்லது முஸ்லிம் சுயாட்சிக்கான வாக்குறுதிகள்” தொடர்ந்து வாசிக்க…)
அருமையான திட்டம்!
“அட்சய பாத்திரம்” என்ற பெயரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சமுதாய குளிர்சாதன பெட்டியை மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் நேற்று (17.10.2017) மாநகராட்சி ஆணையர் டாக்டர். அல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த குளிர்சாதன பெட்டியில் நம் வீட்டில் சமைத்து மீதமான உணவு பொருட்கள், (கெட்டுப்போனது அல்ல) பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் போன்றவைகளை இங்கு கொண்டு வந்து வைக்கலாம்.
தமிழ் தேசிய அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவே இல்லை!
(ரி. தர்மேந்திரன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவனவாக உள்ளன, 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்து அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் நடக்கும் என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றினார்கள். கடைசியில் தமிழீழமும் கிடைக்கவில்லை, தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிட்டவில்லை, தமிழ் தேசிய அரசியல் மூலமாக இது வரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்க பெறவில்லை என்பதோடு எந்தவொரு அபிவிருத்தியும் கிட்டவில்லை என்பதும் பெருங்கவலைக்கு உரிய விடயங்கள் ஆகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-
(“தமிழ் தேசிய அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவே இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)