தீபாவளிப் பண்டிகை.

பண்டிகைகள் எல்லாம் வியாபாரத்தை பெருக்க உருவாக்கப்பட்ட நாட்கள் என்று உருமாற்றப்பட்ட உலகில் பண்டிகைகளை கொண்டாடும் மகிழ்சியான மனநிலை ஏற்படாது என்பது மனித நேயம் மிக்க யாரும் பொதுவாக ஏற்படக்கூடியதே. இவ் மனநிலையில் இருந்து இந்த தீபாவளி பண்டிகையை பார்த்தாலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் நிகழ்காலப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தமது உறவுகளை, வாழ்நிலங்களைத் தொலைத்தவர்களின் மிக நீண்ட இடையறாத போராட்டங்களின் மத்தியல் பண்டிகைகளை கொண்டாடும் மனநிலையை ஏற்படுத்துவது கடினமானதே. ஆனாலும் பண்டிகை கொண்டாடும் உங்கள் மகிழ்சியான தருணங்களில் நானும் இணைந்து கொள்கின்றேன். அடுத்த தீபாவளி ‘தமிழ் ஈழத்தில்” என்று ‘நம்பிக்கையூட்டிய” காலம் போய் அடுத்த தீபாவளி ‘புதிய அரசியல் தீர்வுத் திட்டம்” உடன் என்று மாறிப் போன காலத்தில் நாம் தற்போது இருக்கின்றோம் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

(காரை துர்க்கா)
“வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு” என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார்.

(“எங்கே செல்லும் இந்தப் பாதை?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு

(Ahilan Kadirgamar)

சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு, யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது. ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது.

(“யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு” தொடர்ந்து வாசிக்க…)

‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’

“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. “இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘புதிய அரசமைப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டும்’

“புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகின்றோம். “கடந்த காலங்களில் இடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றால் துயரங்களை அனுபவித்து வந்த எமது மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழும் வகையில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் எனவும் அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இத் தீபாவளித் திருநாள் வகைசெய்திட வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வாக்குறுதி முக்கியம்’

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிப்பதாக, தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வர்த்தமானியை வெளியிடுமாறு, அரசாங்கத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, கொழும்பில் அமைந்துள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், இதனை வலியுறுத்தினார்.

(“‘வாக்குறுதி முக்கியம்’” தொடர்ந்து வாசிக்க…)

கட்டலோனியப் பிரிவினைக்கு ஆதரவான கட்டலோனிய தலைவர்கள் கைது

ஸ்பெய்னிலிருந்து கட்டலோனிய பிரிய வேண்டுமென்ற கோரிக்கைகளைக் கொண்ட முக்கியமான தலைவர்கள் இருவர், ஸ்பானிய நீதிமன்றமொன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால், ஸ்பெய்னுக்கும் கட்டலோனியப் பிராந்தியத்துக்கும் இடையிலான முறுகல், மீண்டும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

(“கட்டலோனியப் பிரிவினைக்கு ஆதரவான கட்டலோனிய தலைவர்கள் கைது” தொடர்ந்து வாசிக்க…)

நேர்காணல்:

“துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன.”

(வி. ரி. இளங்கோவன்)

அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி. ரி. இளங்கோவன் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இடதுசாரிய சிந்தனையாளர், ஊடகவியலாளர், சித்த ஆயுர்வேத மருத்துவர் என்று பல்துறைசார் ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பாரிஸின் மூத்த இலக்கிய ஆளுமையாக எம்மிடையே இருக்கின்றார். கே.டானியலின் பாசறையில் வளர்ந்த முதன்மைப் போராளி. இவர் தனது புனைபெயரை ‘அசலகேசரி‘ என்று வைத்துக்கொண்டாலும் தனது சொந்தப் பெயரிலேயே பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கின்றார்.

(“நேர்காணல்:” தொடர்ந்து வாசிக்க…)

சரியான மாற்றுத் தலமை தேவை….!

(சாகரன்)

தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலமை தோற்றுப் போகும், தோற்றுப் போன உசுப்பேத்தும் அரசியலை நடாத்துகின்றதா? அல்லது இராஜதந்திர அரசியலை நடாத்துகின்றதா?. இதில் விக்னேஸ்வரன், சம்மந்தன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்க முடியும். இதில் ஒருவர் தமிழரசுக் கட்சியினர், மற்றவர் தமிழ் மக்கள் பேரவையினர் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மாற்றீடாக ஒரு சரியான மாற்றுத் தலமையை ஏற்படுத்த ஏன் முடியவில்லை. அவ்வாறு ஏற்படுத்தும் இடத்து தலமைப் பொறுப்புக்களை ஏற்று நடத்த யார் யார் எம்மிடையே இருக்கின்றனர். இதற்கு எவ்வாறு செயற்படலாம் என்ற விவாதக் களத்தை திறந்துவைக்கின்றேன் ஆரோக்கியமான கருத்துக்களைப் பரிமாறுவோம்.

(“சரியான மாற்றுத் தலமை தேவை….!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போரில் இறந்த மக்களின் சரியான புள்ளிவிபரம், காணாமல் போனவர்களுடைய, சிறையில் இருப்பவர்களுடைய சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை ஒரு அமைப்பிடமும் இல்லை. அதை ஏன் இன்றுவரை ஒரு அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ செய்யவில்லை(?)

(“இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.” தொடர்ந்து வாசிக்க…)