புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

(எஸ்.கருணாகரன்)
புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது.

(“புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

சிறீதரனின் ஆதரவுடன் காணிகளை கையடக்கும் சுவிஷ்நாட்டு பணக்காரர்

அக்கராயனில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் போராளிகளுக்கு (இது ஒரு போலி ஏற்பாடு) பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்பது பகிரங்கமான தகவல். (“சிறீதரனின் ஆதரவுடன் காணிகளை கையடக்கும் சுவிஷ்நாட்டு பணக்காரர்” தொடர்ந்து வாசிக்க…)

’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’

தற்போது இந்த முழு உலகமும், பசுமைப் புரட்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வது தொடர்பில், அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறான வாகனங்களின் உருவாக்கத்துடன், அவ்வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறாக சார்ஜ் நிலையங்களை, ஒழுங்கமைப்பது தொடர்பில், தற்போது இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

(“’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

‘கட்டலோனியாவின் சுயாட்சியை இல்லாது செய்வேன்’

கட்டலோனியா பிராந்தியம், தனிநாட்டுச் சுதந்திரம் பற்றிய அச்சுறுத்தல்களை நிறுத்தாவிட்டால், அப்பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சியை இல்லாது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் எச்சரித்துள்ளார். கட்டலோனியாவில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ளவுள்ளதாக, கட்டலோனியா அச்சுறுத்திவரும் நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை, பிரதமர் வெளியிட்டுள்ளார்.

(“‘கட்டலோனியாவின் சுயாட்சியை இல்லாது செய்வேன்’” தொடர்ந்து வாசிக்க…)

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை போலவே மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் நீதியானது!

(விருட்சமுனி)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் கிராமங்களில் ஒன்று மல்வத்தை. மல்வத்தை கிராமத்தை மையமாக கொண்டு பிரதேச சபை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று இக்கிராமத்தையும், அண்டிய கிராமங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கோரி வந்திருக்கின்றனர். ஆயினும் அரசாங்கங்களும் சரி, தமிழ் பேசும் தலைமைகளும் சரி இவர்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தி நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் அண்மைய வருடங்களில் இக்கோரிக்கைக்கான கோஷங்கள் நீறு பூத்த நெருப்பாக அடங்கி கிடந்தன. சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கை ஆட்சியாளர்களால் நிறைவேற்றி கொடுக்கப்படுகின்ற தறுவாயிலை அடைந்தபோது மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளது.

(“சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை போலவே மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் நீதியானது!” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.. இராணுவம் நினைத்திருந்தால் சூசையின் மனைவியை வெட்டி வீசியிருக்க முடியும்.. -ஜெனரல் கமல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே கிடைத்தாக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் முன்னாள் கட்டளையதிகாரியும், 53 ஆவது படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார்.

(“பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.. இராணுவம் நினைத்திருந்தால் சூசையின் மனைவியை வெட்டி வீசியிருக்க முடியும்.. -ஜெனரல் கமல்!” தொடர்ந்து வாசிக்க…)

‘மண்ணையா நாங்கள் உண்பது’

பொருள் விலையும் வரிச்சுமையும் கடன்களும் பிரல்லுகளும் தாங்க முடியவில்லை. அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? என்ற வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள்,மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. முன்னிலை சோஷ‪லிஸக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டிகளில் ‘சம்பளத்தைக் கூட்டு’ என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அமைதிப்படை புலிகளைத் தவறாக கணித்துவிட்டது

இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987இல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பைத் தவறாக கணித்துவிட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் மூவர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்றைய 3 பேர், நாட்டை விட்டு வெளியேறினர்.

(“இந்திய அமைதிப்படை புலிகளைத் தவறாக கணித்துவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

யார் இந்த ரோஹிங்யாக்கள்?

எல்லோராலும் விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள்

“உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most persecuted minority) எனவும், மியான்மரில் நடப்பது “மனித குலத்திற்கு எதிரான குற்றம்” (crime against humanity) எனவும் ஐ.நா அவை மியான்மர் நாட்டு ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை இன்று வரையறுக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 பேர் உட்பட சுமார் ஐந்து இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவையும் கூட அளிக்க இன்று எந்த நாடும், அவர்களின் முந்தைய தாயகமாகக் கருதப்படும் வங்கதேசம் உட்படடத் தயாராக இல்லை.

(“யார் இந்த ரோஹிங்யாக்கள்?” தொடர்ந்து வாசிக்க…)