அண்மைக்காலமாக TNA யின் சரணாகதி அரசியல், வட, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் பல உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிரணியினர். பல புதியவர்கள். புதிய கட்சிகள் உருவாகி/உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பலமான சக்திகளாக வளரும் வாய்ப்பு இருக்குமோ தெரியவில்லை. ஏற்கனவே வடக்கில் டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் எனச் சிலர் உள்ளனர். அவர்களின் அண்மைக்காலப் பலவீனங்கள்/பிரச்சினைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை. கிழக்கில் இப்போது புதிய குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இதனிடையில் சுரேஷ் பிரமேச்சந்திரன். அவதானிப்போம். மக்கள் எண்ணப்போக்கை அறிய முயல்வோம். – விஜய்
Month: November 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!!
இன்றுகாலை வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மகாநாட்டில்..
எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?
இங்கு நாங்கள் வேலை செய்யும் இடங்களில் வரும்
வாடிக்கையாளர்களுடன் பேசிப்பழகி நட்பு
கொள்வதுண்டு அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள்,
இலங்கைத்தமிழர்கள் புலிகள் , புலிகளின் தலைவன்
பிரபாகரன் என்று, தமிழ் மொழி என்று ஒன்றிருப்பதை
அறியாதவர்களுக் கூட பிரபாகரன் யார் என்பது தெரியும்,
அப்படியிருக்க தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும்
பிரபாகரனின் பெயரை சேர்த்தவர் என்று ஒருவரை
பாராட்டி கொண்டாடுகிறார்கள், , வெட்கமே இல்லாமல்
இப்படிஎப்படிச் சொல்ல முடிகின்றது,
வெளிச்சம்அடித்து இதுதான் சூரியன்
என்று காட்டுவது போல் உள்ளது! (“எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?” தொடர்ந்து வாசிக்க…)
வடக்கு, கிழக்குக்கு சம்பந்தனை ‘வெறுங்கையுடன் அனுப்பிவிடாதீர்’
“இந்த நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் இடம்பெறுவதற்கு நாம் விரும்பவில்லை. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவிடாதீர்கள். அப்படி அனுப்பினால் வரலாறு உங்களை மன்னிக்காது” என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
(“வடக்கு, கிழக்குக்கு சம்பந்தனை ‘வெறுங்கையுடன் அனுப்பிவிடாதீர்’” தொடர்ந்து வாசிக்க…)
‘கானல் நீராகிவிடுமா புதிய அரசமைப்பு?’
“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதியும் பிரதமரும், முரணான கருத்துகளை தெரிவித்துவரும் அதேவேளை, இதனை வலியுறுத்த வேண்டிய கடமையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வித்தியாசமான கருத்துகளைத் தெரிவிப்பதைப் பார்க்கும் பொழுது, புதிய அரசமைப்பு உருவாகுவது கானல் நீராகத் தெரிகின்றது” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். (“‘கானல் நீராகிவிடுமா புதிய அரசமைப்பு?’” தொடர்ந்து வாசிக்க…)
பெண் சாதிக்க பிறந்தவள் என்பது வன்னி தேர்தல் களத்தில் நிரூபித்து காட்டப்படும்!
– தேசிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சூளுரை
பெண் சமைக்க மாத்திரம் பிறந்தவள் அல்ல, சாதிக்கவும் பிறந்தவள் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் மூலமாக வட மாகாணத்தில் குறிப்பாக வன்னியில் நிரூபித்து காட்டுவார் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், இக்கட்சியின் மகளிர் பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.
(“பெண் சாதிக்க பிறந்தவள் என்பது வன்னி தேர்தல் களத்தில் நிரூபித்து காட்டப்படும்!” தொடர்ந்து வாசிக்க…)
மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே
90களில் ஒருசில முஸ்லீம்கள் காட்டிகொடுக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் துரத்தியடித்தவர்கள்
2004இல் கருணா எனும் தனிமனிமனிதனின் பிரிவை பெரும் பிரதேசவாதமாக்கி கிழக்கு மாணவர்களை யாழ் பல்கலைகழகத்தில் இருந்து துரத்தியவர்கள்
அதேபோல் கிழக்கு மண்ணை நேசித்து அந்த மண்ணோடு ஒன்றித்துப்போன வடபுல மக்களை மாணவர்களை கிழக்கில் இருந்து துரத்தியவர்கள்
சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்?
(எஸ்.கருணாகரன்)
தமிழ் அரசியல் கைதிகளை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த தூண்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மதியரசன் கிருஷாந்தி என்பவர், பகிரங்கமாக எழுதிய ஒரு கடிதமாகும். தன்னுடைய சகோதரர் ஒருவர், அரசியல் கைதியாக அநுராதபுரம் சிறைச்சாலையில், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் சந்தித்து வரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தி, அந்தக் கடிதத்தை, மதியரசன் கிருஷாந்தி எழுதியிருந்தார்.
(“சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்?” தொடர்ந்து வாசிக்க…)
மரண அறிவித்தல்
பிலேந்திரன் மரியநாயகம் மொரிஸ்
ராஜேந்திரா றோட், யாழ்ப்பாணம்
மலர்வு 06.03.1951
உதிர்வு 06.11.2017