“இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. மாறாக, அதற்குரிய கௌரவத்தையே அளித்தேன். இந்த விவகாரத்தைக் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் திசை திருப்பி, பூதாகாரப்படுத்தும் நோக்கிலேயே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று, வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Month: November 2017
முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாற்றின் ஒருபக்கம், சதிகளால் நிரம்பியது. பண்டைய வரலாறெங்கும் அரண்மனைச் சதிகள் நிறைந்திருந்தன. பின்னர், மன்னராட்சிக்கு எதிரான சதிகள் அரங்கேறின. மாறுகின்ற காலத்துக்கேற்ப இராணுவச் சதிகள் நடந்தன. ஜனநாயகம் பிரதான பேசுபொருளாகவும் அரசாட்சியின் இலக்கணமாகவும் மாறிய சூழலில், அரசமைப்புச் சதிகள், நாடாளுமன்றச் சதிகள் எனப் பலவும் நிகழ்ந்தன. இவ்வாறு நடந்த சதிகள், அந்நாடுகளின் விதியைத் தீர்மானித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம், ஆட்சிக் கவிழ்ப்புகளின் பிரதான கருவியாக, இராணுவச் சதிகள் மாறின. அவை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன.
(“முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா?” தொடர்ந்து வாசிக்க…)
இரு பேரினவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது! – ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆவேசம்
இரு பேரினாவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இராஜ. இராஜேந்திரா தெரிவித்து உள்ளார்.தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கல்முனை தலைமை காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரிப்பதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவத்தை சிதைக்க கூட்டு சதி! – செல்லையா இராசையா ஆவேசம்
காரைதீவு பிரதேச மக்களின் விருப்பம், இணக்கம் ஆகியன பெறப்படாமலும், இவர்களின் ஆலோசனை, அபிப்பிராயம், கருத்து ஆகியன செவிமடுக்கப்படாமலும் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் சம்மாந்துறை தொகுதிக்குள் காரைதீவு பிரதேசம் சேர்க்கப்படுகின்ற நடவடிக்கை முறைகேடானது என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான செல்லையா இராசையா தெரிவித்து உள்ளார்.
சர்வேஸ்வரனின் வாதம் பிழையானது
அறுபது வருட கால நடைமுறைகளையே தான் பின்பற்றி தேசிய கொடியை ஏற்ற மறுத்ததாக தனது தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்.அந்த அறுபது வருடகால நடைமுறைகளை இவர் மாற்றவேண்டும்.அந்த தவறுகளே எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.அதை இவரும் தொடரவேண்டுமா?
தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா?
(எஸ்.கருணாகரன்)
‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள்.
(“தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)
கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா?
(எம்.எஸ்.எம். ஐயூப் )
பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது.
(“கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)
தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும்
(புருஜோத்தமன் தங்கமயில்)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார்.
(“தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும்” தொடர்ந்து வாசிக்க…)
பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்?
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
(“பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்?” தொடர்ந்து வாசிக்க…)
தேர்தலை நோக்கிய சயிக்கிள் ஓட்டம்….!!!!
…..கனடாவில் காய்கறி வாங்கசென்றவரின் காதில் விழுந்ததை என்காதில் போட்டார்….???
…………….கனடாவில் சயிக்கள்கட்சிக்கு இதுவரை சேர்ந்த பணம் 2 லட்ஷம் டொலர்களை கிட்டிவிட்டதாம்….
……கொடுக்கப்படும் பணம் தங்கள் இருக்கும் நாட்டின் டொலரை விட US டொலர் இலும் கொடுக்கப்படுகிறதாம்…
……கூட்டமைப்பையும் மற்றைய காட்சிகளையும் மடக்க அவர்கள் போடும் திடடம்…
(“தேர்தலை நோக்கிய சயிக்கிள் ஓட்டம்….!!!!” தொடர்ந்து வாசிக்க…)