(கே. சஞ்சயன்)
புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
Month: November 2017
ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(“ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?” தொடர்ந்து வாசிக்க…)
வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்!
– ஜான்சிராணி சலீம் அறிக்கை –
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூன்றாம் கட்ட விசாரணை
– மக்கள் ஆசிரியர் சங்கம்
மக்கள் ஆசிரியர் சங்கம் ஆசிரிய உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3 வகுப்பு ஐஐற்கு தகுதியானவர்கள் எனவும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யுமாறு கோரி 2015.07.23ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து திருந்தது. இதன் மூன்றாவது விசாரணை இம்மாதம் 29ம் திகதி புதன் கிழமை நடைபெற உள்ளதாக மக்கள் ஆசிரியர் சங்க செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்
கட்சித்தலைமை காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தோழமைதின செய்தி
தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்
அன்புக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
எங்கள் நேசிப்பிற்குரிய செயலாளர் நாயகம் அமரர் தோழர் பத்மநாபாவின் பிறந்த நாளை தோழமை தினமாக 2015 ஆண்டு முதலில் நாம் அனுஷ்டித்தோம். இன்று நவம்பர் 19 அவரது 66 வது பிறந்த தினமாகும். தோழர் பத்மநாபாவின் இலட்சியக் குறிக்கோள்களை, அவர் தலைமை ஏற்றிருந்த கட்சியின் கொள்கைகளை உரத்துச் சொல்லுகின்ற இந்த தோழமை தினத்தை இவ்வருடம் சுவிஸ் தோழர்கள் அனுஷ்டிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
நவம்பர் 19: தோழமை தினம்.
தோழர்களே நண்பர்களே உறவுகளே நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமது உரிமைக்காக பல்வேறு களங்களில் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். எமது தனிப்பட்ட உரிமைகளுக்கு அப்பால் நாம் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுதல் முதலாவதை விட மேலானது. இதற்கு ஒரு படி மேலே போய் நாம் சார்ந்த மக்கள் என்பதைக் கடந்து உரிமை மறுக்கப்படும் அனைத்து மக்களின் உரிமைகளை நிலைநாட்ட போராடுதல் என்பது மிகவும் சிறந்தது. இந்த சர்வ தேசியப் பார்வை எமக்குள் ஏற்பட்டால் பிரிவினை வகுப்புவாதம் பிரதேசவாதம் மத மொழிப் பிரிவுகள் ஏற்பட வாய்புகள் இல்லை.
எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்
மூத்தவன் புளட்டில
நடுவிலான் டெலோவிலே
கடை குட்டி புலியில் என்று பெருமை பட்ட தாய்மார்
அயல்வீட்டு என்ஜினியர் மகன் ஈபிஆர்எவ்
முன்வீட்டு வாத்தியார் மகன் ஈரோஸ்
என்று இறுமாந்திருந்தோம்.
கோட்டையில் சைரன் ஊதி அனைவரையும் காத்த புளொட்
ஆண்களும் பெண்களுமாய் செங்கொடிகள் கட்டிய அழகிய ஈபிஆர்எல்எ வ்
அறிவாளிகள் என்று போற்றப்பட்ட ஈரோஸ்
வீரத்துடன் திகழ்ந்த ரெலோஸ்டுகள்
கட்டுக்கோப்பான ஒழுக்கமான வீரர்களாய் திகழ்ந்த புலிகள்
அழகான அந்த நாட்கள்
எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்
விஷம் எங்கிருந்து வந்தது? தான் பெரிது என்று எண்ணாமல் தமிழ் ஈழம் தமிழ் மக்கள் பெரிது என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணி இருந்தால் நிச்சாயமாக தமிழர்கள் நாம் இன்று நடு றோட்டில் நின்றிருக்கமாட்டோம்.
நண்பரின் பதிவில் இருந்து….
நாபா என்ற மானிடன்
அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன். (“நாபா என்ற மானிடன்” தொடர்ந்து வாசிக்க…)
19/11/2017 ஆகிய இன்று தோழமை தினம்
திருகோணமலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி காரியாலயத்தில் தோழர் பத்மநாபாவின் 66வது பிறந்த தின அனுஷ்டிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தோழர் நாபாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கட்சி செயலாளரான சத்தியன் மற்றும் கட்சி உறுப்பினர்களான சந்திரன், விபு ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதியவேளைக்கான உணவும் வழங்கப்பட்டது.
‘சர்வேஸ்வரனின் மனோநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’
“என்னைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும், முதலில் தேசியக் கொடியை நிராகரித்தவரின் மனோநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். வட மாகாண கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தமை பற்றி உங்கள் கருத்து என்ன? வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(“‘சர்வேஸ்வரனின் மனோநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)