தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. (“கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்.” தொடர்ந்து வாசிக்க…)
Month: November 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.
(சாகரன்)
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பிரம்மா நான்தான் என்று தாராக்கியின் ஆவியில் இருந்து ஆரம்பித்து விக்னேஸ்வரனின் உறவினர் நிர்மலன் வரை உரிமை கொண்டாட இதற்கான ஆவணங்களைச் சமர்பித்து பத்தி எழுத்தாளர்கள் பலரும் எழுத ஆரம்பித்திருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது. உண்மையில் இதன் உருவாக்கம் புலிகளினால் நடைபெற்றது என்பதே உண்மையாக இருக்க முடியும். புலிகளின் பினாமிகள் பலர் தம்மை புலிகளின் ‘நல்லவேன்டா’ என்று விசுவாசிகளாகவும் அவர்களின் மீட்போராகவும் காட்டிக் கொள்ள எடுக்கும் பிரயத்தனங்களே இந்த உரிமை கோரல்கள் ஆகும் அன்றும் இன்று. அல்லது தாம் தான் புலிகளின் பாலசிங்கம் என்று காட்ட முயலும் செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் இவை. (“தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)
தோழர் வி.ஏ. கந்தசாமி -25 வது நினைவு தினம்
இலங்கை நாட்டில் வட பிரதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த, “வீ.ஏ.” என தோழர்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. தலைசிறந்த இடதுசாரி பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்ந்திருந்த தோழர் கந்தசாமி அவர்கள் வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமை பலரிற்குத் தெரிந்திராதது.
(“தோழர் வி.ஏ. கந்தசாமி -25 வது நினைவு தினம் ” தொடர்ந்து வாசிக்க…)
த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்
(Gopikrishna Kanagalingam)
தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. (“த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் கவிஞர் செல்வி.
(யசோதா)
1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
(“புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் கவிஞர் செல்வி.” தொடர்ந்து வாசிக்க…)
புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப – தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
(“புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)
தெற்காசியாவின் திட்டமிடப்பட்ட பின்னடைவும் அதன் தோல்வியும்
‘கூட்டிற்குள் பிறக்கும் பறவைகள் பறக்கும் பறவைகளை சுகவீனமானவை என்றே கருதுகின்றன.’ அதேபோல் தெற்காசியாவில் பிறப்பவர்கள் மேற்குலகை கேள்விகேட்பதோ அல்லது அவர்களை எதிர்த்து தன்னிறவை அடைவதோ சுகவீனமானவர்களின் செயற்பாடு என்றே கருதுகின்றனர். சிலர் இதற்கு விதிவிலக்கு, ஆனால் இந்தச்சிலரால் பிரமாண்டமான சனத்தொகையை திசைதிருப்ப முடியாது. தெற்காசியா மேற்குலக ஆட்சியையும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடி 2ம் உலகப் போரின் பின் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது, எனினும் மேற்குலகத்தின் விருப்பத்துக்கிணங்க இன்றும் அரசியல் முறைமைகளை கையாண்டு வருகின்றது. இந்தியாவின் முதல் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இலங்கையின் முதல் கட்சியான இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியும் மேற்குலக ஆலோசனைக்கும் விருப்பத்திற்கும் இணங்க உருவாக்கப்பட்டது.
(“தெற்காசியாவின் திட்டமிடப்பட்ட பின்னடைவும் அதன் தோல்வியும்” தொடர்ந்து வாசிக்க…)
மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !!(பாகம் 1)
(வி.சிவலிங்கம்)
உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர். கூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவர் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களாகும். அவர் இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவரது அரசியல் சுமார் 4 ஆண்டுகளே. அவரது இந்த மிகச் சொற்ப காலத்தின் அனுபவம் காரணமாக அரசியல் போதனைகளை மேற்கொள்ளும் அவதார புருஷராக தம்மை மாற்றி பல ஆண்டுகளாக தமது சுக போகங்களைத் துறந்து போராடிய பலரை அவமானப்படுத்தும் அரசியலை ஆரம்பித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலை விதைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவரது போதனைகள் ஒருவேளை மத போதனைக்கு உதவலாம். அரசியலுக்கு உதவாது.ஏனெனில் இங்கு கடவுள் அல்ல மக்களே தீர்மானிப்பவர்கள். (“மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !!(பாகம் 1)” தொடர்ந்து வாசிக்க…)
கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்
(க. அகரன்)
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
(“கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கையின் புதிய வரவு செலவுத் திட்டம்
நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டது.இதனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்பித்தார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுஅளவில் முக்கியத்துவம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
(“இலங்கையின் புதிய வரவு செலவுத் திட்டம்” தொடர்ந்து வாசிக்க…)