உள்ளுராட்சி தேர்தல் எமக்கான தீர்வை பெற்றுத் தந்துவிடுமா?

உள்ளுராட்சி தேர்தலில் வென்றால் எமது கோரிக்கைகள் நிறைவேறுமா?

ஏன் இந்த முறன்டுபிடிப்பு? எப்போதும் நாம் ஒரே கொள்கையில் இயங்குவதாக கூறி விட்டுக்கொடுப்புகள் இன்றி இனைந்து போகாமல் தனித்து நின்று சாதிக்கப்போவது என்ன? கொள்கை தவறிப்பயணிக்கும் தமிழரசுக் கட்சியை கடிவாளம் போட்டு நிறுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடும் கட்சியின் மேதாவித்தனமானது மிகவும் சிறுமையானது.

(“உள்ளுராட்சி தேர்தல் எமக்கான தீர்வை பெற்றுத் தந்துவிடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்ட இறுதிச்சமரை விபரிக்கிறார் Maj.Gen. கமால் குணரட்ண

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த …படையியினர் தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர். இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன்.

(“சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்ட இறுதிச்சமரை விபரிக்கிறார் Maj.Gen. கமால் குணரட்ண” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் ‘வேட்கை’ புத்தக வெளியீடு… விமர்சனம்…. கலந்துரையாடல்….

மார்கழி ஞாயிறு 2ம் நாள் கனடாவின் ரொரன்ரோ மாநகரின் மண்டபம் ஒன்றில் பிப. 2:30 இல் இருந்து பி.ப 6 மணிவரை நடைபெற்றது. கிழக்கு மாகாண மைந்தரகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சக்கரவர்த்தி கர்ணன் போன்றவர்கள் இந்நிகழ்விற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிகழ்வு தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்றது. புத்தக விமர்சகர்களாக வளவன் யோகராசா, ஜீவா, முரளிதரன் நடராசா. பரதன் ஆகியோர் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர.; கூட்டத்திற்கு பல்வேறு முன்னாள் விடுதலை அமைப்பு உறுப்பினர்கள் கட்சிப் பிரமுகர்கள், இடதுசாரி செயற்பாடாளர்கள் பொது மக்கள் என சற்று வித்தியாசமான பிரிவினர் கலந்து கொண்டனர். தோழர் ஜேம்ஸ் இன் தலைமையுரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு பல்வேறு கருத்து பரிமாற்ற மோதல்களை கொண்டதாக அமைந்திருந்தது. இதில் போராட்ட காலத்தில் இருந்து சம கால அரசியல் என்று சகல விடயங்களையும் புத்தக விமர்சனத்துடன் இணைத்து பேசப்பட்டது நிகழ்வின் சிறப்பு அம்சம். பேச்சாளர்களும் பல்வேறு அரசியல் நிலைபாடுகளைக் கொண்டவர்கள் என்பதுவும் இங்கு கவனத்தில் பார்வையாளர்களால் அறியப்பட்டது. நிகழ்வை குழப்ப முற்பட்டவர்கள் கருத்துகளை சந்திக்க முடியாமல் வெளியேறி சம்பவம் இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் ஆகும். நிகழ்வின் முழுமையான ஒலிப்பதிவை கீழுள்ள இணைப்பில் காண முடியும்.

கனடா ஸ்கார்புரோவில் பிள்ளையானின் “வேட்கை” நூல் வெளியீடும் கருத்தாடலும்.

Posted by Rahu Rahu Kathiravelu on Sunday, December 3, 2017

சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

(அபிமன்யு)
“தமிழரசுக் கட்சியுடன் இனியும் சேர்ந்து இயங்க முடியாது; அவர்கள் சின்னத்தில் போட்டியிட முடியாது” என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது முடிவிற்குக் காரணமாக “புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு தவறானது; அதனால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய முன்னணியில், புதிய தலைமை தேவை” என்று கூறியிருக்கின்றார்.

(“சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

கல்யாணம் ஹில்டன் ஹோட்டலில் ,அழித்து முடித்தபின் ஒரு ஆறுதல் வேண்டி

இந்தக் காதலை கவர் பண்ண விஜிதரன் கொலை பின்பு விமலேஸ்வரன் கொலை தொடர்ந்து விஜதரனை விடுவிக்க மக்கள் நடாத்திய போராட்டங்களில் மக்கள் மிரட்டல் இறுதியல் கை குண்டால் கால் உடைபட கந்தன் கருணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்து மாற்று இயக்கப் போராளிகள் இருவர் தவிர ஏனை 53 பேர் அருணா கோஸ்டியால் கிட்டு விசுவாசத்தால் கொலை. இதனை கோபாலரத்தினம் சமூக விரோதிகளை கொலை செய்ததாக ஈழநாடுபத்திரிகையில் எழுதி பத்திரிகை தர்மத்தை குழி தோண்டிப் புதைப்பு. தொடர்ந்து சூரியத் தேவனிடம் கேடயம் வாங்கி கௌரவிப்பு. இத்தனை மனித விரோதங்கள் இந்த கல்யாண மாலைக்கு பின்னால்…..! இன்று என்னடாவென்றால் மனித உரிமை பற்றி பேசுகின்றார்கள் பேச்சு

அரசியல் நாகரீகம் வெட்கித் தலைகவிழ்ந்த இழிதருணம்.

இதுஎந்தத் துரோகத்திற்குள்ளும் அடங்காது இலங்கை அரசுடன் இணைந்து பிணைந்து செயற்பட்ட விடுதலை அமைப்பு புலிகளே. இதனை இராஜதந்திரம் என்று மட்டும் சொல்லாதீங்கோ இதன் பின்பே தமிழ் அமைச்சர்கள் ‘அவர்’ உடன் இணைந்தனர். இது மகிந்த காலம் வரை தொடர்ந்தது. இன்று அது தமிழ்த் தேசியக் கூட்டடைப்பால் பிரதியீ செய்யப்பட்டுள்ளது இதன் விதிவிலக்காக நிற்பவர்கள் யார் என்பதை மக்கள் அதிகம் அறியார்.

(“அரசியல் நாகரீகம் வெட்கித் தலைகவிழ்ந்த இழிதருணம்.” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள்

(கே. சஞ்சயன்)

மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன.

(“மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்

(மொஹமட் பாதுஷா)
இந்த மழைக்காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பின்வாங்கிய நிலையில், மாகாண சபைத் தேர்தலோ அன்றேல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ இப்போதைக்கு நடைபெறாது என்று மக்கள் கருதியிருந்தனர்.

(“உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி காரைதீவு மக்களின்     ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது!

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி, காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்கவே முடியாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.

(“எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி காரைதீவு மக்களின்     ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது!” தொடர்ந்து வாசிக்க…)

யார் இவர்? இவர் இப்போது எங்கே இருக்கிறார்?

இவர் பெயர் கௌரிபால் சாத்திரி. புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் (சக்கை) முக்கியஸ்தர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நீங்கள் நேரடியாக எத்தனை கொலைகள் செய்துள்ளீர்கள்?

ஏனிந்த கொலை வெறிக் கேள்வி?, நான் எனக்காக எந்தக் கொலையையும் செய்திருக்கவில்லை. நான் செய்த கொலைகள் அனைத்துமே நான் சார்ந்து இயங்கிய அமைப்பிற்காகவே செய்யப்பட்டன. நான் நேரடியாக செய்த கொலைகள் இந்திய அமைதிப் படைக் காலத்தில்தான் நடந்தன. இந்தியப் படைகளிற்கு எங்களை அல்லது நாங்கள் பதுங்கியிருக்கும் இடங்களை. எங்களிற்கு உணவளித்து எம்மை பாதுகாத்தவர்களை காட்டிக் கொடுத்து இந்தியப் படைகளோடு சேர்ந்து இயங்கியவர்களை அழிக்கவேண்டிய தேவை இருந்தது. அப்படி எனது பொறுப்பில் இருந்த கிராமங்களில் பதினைந்து அல்லது பதினாறு பேர் என்னால் நேரடியாக அழிக்கப்பட்டிருக்கலாம். (“யார் இவர்? இவர் இப்போது எங்கே இருக்கிறார்?” தொடர்ந்து வாசிக்க…)