தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய இயக்கங்கள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை அடிப்படையிலான கோட்பாடுகளை கொண்ட திம்பு கோட்டுபாடு 2017 இல் தமிழ் மக்களின் இன்றையத் தலைமையினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (“1985 திம்புகோட்பாடு 2017 இல் இன்றைய தமிழ்த் தலைமைியனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. – சந்திரகுமார்” தொடர்ந்து வாசிக்க…)
Month: December 2017
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. (“நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!” தொடர்ந்து வாசிக்க…)
நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!
(ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன்)
ஜானகி பாலகிருஷ்ணன்- – ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் – அவர்கள் கனடியத்தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களிலொருவர். மின்பொறியியலாளராகப் பல வருடங்கள் பணியாற்றிய இவர் தற்போது கனடாவின் மாநிலங்களிலொன்றான ‘நோர்த்வெஸ்ட் டெரிடொரி’ஸிலுள்ள ‘யெல்லோ நைஃப்’ என்னுமிடத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் அதற்கான நிபுணத்துவ சேவையினை வழங்கும் நிறுவனமொன்றின் முதல்வராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் டொராண்டோவின் ‘டொன்வலிப்பகுதியில் ஒண்டாரியோ மாநிலச் சட்டசபைக்கான தேர்தலிலும் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மார்க்சிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரினதும் பெருமதிப்புக்குரியவராக விளங்கியவரும், யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர்களிலொருவராக விளங்கியவருமான அமரர் கார்த்திகேசு ‘மாஸ்ட்’டர் அவர்களின் புதல்விகளிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(“நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.
கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் நீங்கள் கிராமிய பொருளாதாரம் பற்றியும், அதை கிராமிய மட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் எழுதி வருகின்றீர்கள். நீங்கள் யார், இது சம்பந்தமான உங்கள் அனுபவங்கள் என்ன ?
நான் அலியார் மவ்சூக் ( ரியால் ), எனது சொந்த ஊர் அக்கரைப்பற்று, கடந்த பதினைந்து வருடத்துக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.
1979 முதல் 2001 வரை அடிக்கடி எனது சொந்த வியாபாரம் சம்பந்தமாக இந்தியா, பிலிப்பைன், பேங்காக், நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. (“இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.” தொடர்ந்து வாசிக்க…)
உயர்தர பரீட்சை முடிவுகள்
2017: இதுவும் கடந்து போகும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலம், கடந்த காலத்தின் தொகுப்பல்ல; நிகழ்காலம் என்றென்றைக்குமானதல்ல; எதிர்காலம் எதிர்பாராத புதிர்களைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. கடந்தகாலம் பற்றிய தெளிவு நிகழ்காலத்தை வடிவமைக்கப் பயனுள்ளது. அது எதிர்காலத்தைத் திட்டமிட உதவும். இதனாலேயே கடந்தகாலம் எப்போதும் முக்கியமான திசைவழிகளைக் காட்டுகிறது. கடந்து போகும் காலத்தைக் கணிப்பில் எடுப்பது எதிர்காலத்தைக் கணிக்க உதவும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018: தேவை ஒரு பூக்களம்
(முகம்மது தம்பி மரைக்கார்)
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் ஆதரித்தமைதான், தாக்கியவர்களின் கணக்கில் குற்றமாக இருந்தது.
(“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018: தேவை ஒரு பூக்களம்” தொடர்ந்து வாசிக்க…)
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?
(நீரை.மகேந்திரன்)
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதும், டெபாசிட் போகும் அளவுக்கு வாக்குகள் குறைந்ததும் பல அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் படுதோல்வி என்கிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ பணநாயகத்தின் பின்னால் செல்லாமல் ஜனநாயகத்தை மதித்ததால் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.
(“ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் மீது ரஷ்ய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தர். அண்மையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை பொதிகள் அடங்கிய கொள்கலனில் வண்டு ஒன்று காணப்பட்டதாக தெரிவித்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு, ரஷ்யா தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.
(“இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)
ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்
(ஜனகன் முத்துக்குமார்)
கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர்.
(“ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்” தொடர்ந்து வாசிக்க…)