Month: December 2017
கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!
(விருட்சமுனி)
விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றை அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார வளம் அடிப்படையாக கொண்டு உள்ளது. இதே போல இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுடைய பொருளாதார வளத்தின் பலம் விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றிலேயே தங்கி உள்ளது. உண்மையில் வட்டமடு காணி பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினையாக படம் பிடித்து காட்டப்படுகின்றபோதிலும் இது விவசாயிகளுக்கும், மாட்டு பண்ணையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினையே ஆகும். தீர்க்க கூடிய இப்பிரச்சினை இனத்துவ அரசியல் சாயம் கொடுக்கப்பட்டு சுயநல அரசியல்வாதிகளால் தீராத பிரச்சினையாக நீட்டிக்கப்பட்டு வருகின்றது. (“கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!” தொடர்ந்து வாசிக்க…)
நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி
உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன.
ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்
தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவிற்கும் இடையிலான ஆசனப்பங்கீடு குறித்த விடயங்க தொடர்பிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ரெலோ தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 06-12-2017நடைபெறுவதாக இருந்தபோதும் ஏற்கனவே நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் பிரகாரம் சம்பந்தன் திருகோணமலைக்கு செல்ல வேண்டியேற்பட்டதன் காரணமாக குறித்த சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(“ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)
யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?
யாழ்ப்பாண மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்? இந்த கேள்விதான் அரசியலரங்கில் சூடான பேசுபொருளாக இருக்கிறது. முதல்வர் கனவுடன் பல கட்சிகள், பல வேட்பாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பழம் தின்று கொட்டைபோட்டவர்கள் முதல் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் வரை முதல்வர் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வாயிருக்கிறவன் எல்லாம் பகோடா சாப்பிட முடியுமா?
(“யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகிறது. வட-கிழக்கு முழுவதும்.
கட்சியாகவா அல்லது கூட்டமைப்பா எனத்தெரியவில்லை. சாவகச்சேரியில் கட்டுப்பணம் செலுத்திவிட்டார்கள் என்கிறது இன்றய செய்தி. கட்சியில்தான் பணம் கட்டியிருக்கிறார்கள் போலும்… சம்பந்தர் தம் கட்சி அதிகூடிய விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அதனால கோஞ்சம் குழம்பியிருக்கிறேன். ரெலொ – புளட் நிலைமை தெரியவில்லை. வரதர் நிலைமை என்ன என்று தெரியவில்லை.
(“தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகிறது. வட-கிழக்கு முழுவதும்.” தொடர்ந்து வாசிக்க…)
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி: வசந்தம் தொலைக் காட்சியில்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி வசந்தம் தொலைக் காட்சியில்
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது.
(“மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)
அமெரிக்காவின் தூதுவராலயம் ஜெருசலேமில்
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக வளைகுடா நாடுகள் புதிய நெருக்கடியினைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த முடிவினால் மத்திய வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கு தடை ஏற்படும் என்றும்,இதனால் வளைகுடா நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றும் நடவடிக்கை இன்னும் 6 மாதங்களில் முன்னெடுக்கப்படும் என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.
அதற்கான காரணம் அவருக்கு அரசியல் நெகிழ்வுத் தன்மை அறவே இல்லாதவர் எப்போதும் தேசியம் தேசியம் தேசியம் என்று கூக்குரல் இடும் அவர் அதை எவ்வாறு பெறமுடியும் என்று கேட்டால்? அவருக்கு பதிலளிக்கமுடியாது. ஏனேனில் அவர் பேசும் தேசியம் அவர் சுயமாக கேட்கும் விடயமில்லை. அவரை வெளியில் இருந்து இயக்கும் பினாமிகளுடைய கோரிக்கை அதிலிருந்து அவர் விடுபடவும் முடியாது. (“திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.” தொடர்ந்து வாசிக்க…)