இன்று என் பின்னேரச் சாப்பாடு இங்கு சினெக் என்று அழைப்பர் ஆனால் ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாடாக மரவள்ளிக் கிழங்கு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.
(“மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும் இன்றய பின்னேரச் சாப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)
The Formula
இன்று என் பின்னேரச் சாப்பாடு இங்கு சினெக் என்று அழைப்பர் ஆனால் ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாடாக மரவள்ளிக் கிழங்கு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.
(“மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும் இன்றய பின்னேரச் சாப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)
தமிழின் முற்போக்கு தமிழ் ஆராய்ச்சி அறிஞர் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தமிழில் நாட்டாரியல் துறையில் மாக்சிய சிந்தனை மரபை உருவாக்கி அதன் வழி பயணித்து புதிய வரலாறு படைத்தவர். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் நாட்டாரியல் பற்றிய பாடப் பரப்புக்குகாக யாழ் பல்கலைக் கழகத்தில் இவர் தொகுத்த முத்துபட்டன் கதை மூலம் அறிமுகப் படுத்தினார் .அதே வேளை யாழ் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் வழக்கி கெளரவித்து தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது.
(“பேராசிரியர் நா.வானமாமலை ஒரு நூற்றாண்டு நினைவு” தொடர்ந்து வாசிக்க…)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் அவ்வியக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சேர்ந்தே, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர்.
(“‘ராஜீவ்காந்தியை பிரபாவும் பொட்டுமே கொலை செய்தனர்’” தொடர்ந்து வாசிக்க…)
(கே. சஞ்சயன்)
“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை.
(“அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்” தொடர்ந்து வாசிக்க…)
(எம். காசிநாதன்)
வன்முறைகள், கலவர மேகங்கள் சூழ ‘பத்மாவதி’ திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. 190 கோடி ரூபாய், பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் போன்றவர்கள், படம் வெளிவருமா வெளிவராதா என்று கவலையடைந்திருந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் புண்ணியத்தால் ‘பத்மாவதி’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் திகதி நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
(“‘பத்மாவதி’யும் வாக்கு வங்கி அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)
சிங்கள சினிமா உலகில் புரட்சியிணை ஏற்படுத்திய இவர் “சதுரோ கெட்டி” என்ற திரைப்படம் ஊடாக சினிமாத்துறைக்குள் கால்பதித்தார். 1975ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் உருவான “லொக்கு லமயக்” திரைப்படமானது மொஸ்கோவில் நடைபெற்ற 9வது சர்வதேச திரைப்பட விழாவில் விருதினையும் பெற்றுக்கொண்டது. கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரான தர்மசேன பதிராஜ அவுஸ்திரேலியாவின் மொனேஸ் பல்கலைக்கழகத்தில் பெங்காலி சினிமானத் துறையின் கலாநிதி பட்டத்தைப் பெற்றுள்ளார்.
ஈழத் தமிழர் அரசியல்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உள்ளூராட்சி சபை தேர்தல்கள்
ஈழத்தில் தமிழர் பகுதிகளில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசாரங்க்ச்ள் தீவிரமடைந்துள்ள சூழ் நிலையில் .இத் தேர்தலில் நம் மக்கள் மாற்றத்துக்கும் புதிய சிந்தனைகளுக்கும் முற்போக்கு கொள்கைகளுக்கும் உள்ளூர் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாக்களிக்க வேண்டும்.
(“ஈழத் தமிழர் அரசியல் அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல்கள்” தொடர்ந்து வாசிக்க…)
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகர சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் வடகிழக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் சரஸ்வதி திரையரங்கம் அருகாமையில் நடத்தப்பட்டபோது. கடந்த பல தசாப்தங்களாக திருகோணமலை சிவன் கோவிலடியில். தமிழரசுக்கட்சியினர் தவிர வேறு எவருக்கும் இடமளிக்கப்பட்டதில்லை. முதற் தடவையாக அந்த தடைகளை உடைத்தெறிந்து அந்த இடத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறியது.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை
எழுதத் தூண்டின.
மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்தில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சினர். முன்னாள் வடக்கு கிழக்கு முதல் அமைச்சர் இதில் பிரதான பங்கேற்று செயற்படுகின்றார். பத்மநாபாவின் வழியில் மட்டக்களப்பு பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்றது. மகாணசபைகாலத்தில் இந்த மக்களுக்கு சேவை செய்ததை அங்கு கூடியிருந்த மக்கள் இங்கு நினைவு கூர்ந்தனர்.