நிகழ்வு…

கிழக்குப் பல்கலைக் கழக கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, இன்று (16) நடைபெற்றது. நுண்கலை இளங்கலை பட்டப்படிப்பிற்காக பதிவு செய்யப்பட்ட 221 பேர் இதன்போது வரவேற்கப்பட்டனர்

மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

யாழ்ப்பாணம் வை. எம். சி. ஏ மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் தோழர் தி.ஸ்ரீதரன் (சுகு) மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப் பெருமாள் மற்றும் கட்சியின் செயலாளர் தோழர் சிவராசா மோகன் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்தனர். ஆறு இடங்களில் மட்டும் வடக்கு கிழக்கில் போட்டியிடும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றயவர்களைப் போலல்லாது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டு தமது முழுமையான செயற்பாட்டுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளர். ஊழலற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி செயற்பாடு என்பது இவர்களின் தேர்தல் கோஷமாக இருக்கின்றது.

ஞாநி இழக்க கூடாத இழப்பு

(சாகரன்)
1980 களின் முற் கூற்றில் தமிழ் நாட்டில் நக்சல்பாரி அமைப்புக்களுடன் இரகசிய உறவுகளை பேணி ஈழமக்களின் விடுதலைக்கான வேலைகளை செய்த கால கட்டங்களில் அருணமுறுவல், ராஜன், வள்ளிநாயகம், ஓவியா, வீரசந்தானம், சுஜாதா, சேஷாஸ்திரி, ஞாநி போன்ற பல்வேறு இடதுசாரிச் செயற்பாடாளர்களுடன் தோழர் பத்மநாபா உறவுகளை வைத்திருந்தார். ஈழத்தில் இருந்து மக்கள் விடுதலை போராட்ட செயற்பாட்டிற்காக இடையிடையே தமிழகம் சென்ற போதெல்லாம் தோழர் நாபா தன்னுடன் என்னையும் அழைத்துச் சென்று இவர்களை அறிமுகப்படுத்திய வகையில் மட்டும் இவர்களுடன் உறவுகள் நிறையவே உண்டு. இந்த வகையில் தோழர் ஞாநியுடனும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது என்னை ஞாநி அறிந்திருந்தார் என்பதை விட ஞாநி தோழர் நாபாவையும் நான் தோழர் ஞானியையும் அறிந்திருந்தோம் என்பதே உண்மை.

(“ஞாநி இழக்க கூடாத இழப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மாணவர்களே தமிழ் மாணவர்களை தாக்கி கல்வியைத் தொடர இடைஞ்சலாக உள்ளனர்

மேலுள்ள உள்ள காட்சியும் உண்மையும் புறம்பானது. யூலை 15 2016இல் சிங்கள மாணவர்கள் மீது முதலில் தாக்கியது தமிழ் மாணவர்களே. அப்படங்களை ஊடகங்கள் வெளியிடவில்லை. அதன் பின்னரே சிங்கள மாணவர்கள் தடிகளை எடுத்தனர். இப்படங்களையே ஊடகங்கள் வெளியிட்டன. இன்று தமிழ் மாணவர்களே தமிழ் மாணவர்களை தாக்கி கல்வியைத் தொடர இடைஞ்சலாக உள்ளனர்.

(“தமிழ் மாணவர்களே தமிழ் மாணவர்களை தாக்கி கல்வியைத் தொடர இடைஞ்சலாக உள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகள் தினம் அது தைப் பொங்கல் திருநாள்

இனிய விவசாயிகள் தின வாழ்த்துகள். மற்ற எந்தப் பண்டிகைகளையும் விட தை பொங்கல் திருநாள் எனக்கு எப்போதும் அதிகம் இனித்தே இருந்து வருகின்றது மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான உணவை உற்பத்தி செய்யும் தொழிலை தொழிலாளர்களை மனதில் கொண்டு கொண்டாடப்படும் தினம் என்பதே இதற்கு முக்கிய காரணம். நூன் பிறந்த மண்ணில் மக்கள் தமது வாழ்விற்காக பல தொழில்களை முதன்மையாக செய்தாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் எமது உணவுத் தேவையைக் கருதி பகுதி நேர செயற்பாடாக விவசாயத்தில் ஈடுபட்டோம் என்பது என் மகிழ்விற்கான இன்னொரு காரணம் ஆகும். சொந்தமாக நிலமற்றவர்கள், வீடற்றவர்கள் கூட தாம் வாழும் சூழலில் பயன்தரும் உணவு பயிர்களை நாட்டியதும் இந்த விவசாயத் தொழிலின் ஒரு அங்கம்தான் இதற்கு நாம் பிறந்த நாட்டின் தட்ப வெப்ப நிலையும் காரணம்தான். விவசாயத்திற்கு தேவையான சக்தி வளத்தை வழங்கும் சூரியனை வணங்குதலும் அதற்கு மரியாதை செலுத்துவதும் சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் ஒரு நியாயத் தன்மையை கொண்டிருப்பதாகவே உணரப்படுகின்றது.

(“விவசாயிகள் தினம் அது தைப் பொங்கல் திருநாள்” தொடர்ந்து வாசிக்க…)

வீண் விரயமாகும் நீர் வடக்கு மற்றும் வடமத்திக்கு

களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உபயோகப்படுத்தப்படாமல் கடலுக்கு அனுப்பப்படும் நீரை, வடக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் நேற்று (11) இடம்​பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரங்கேறுவதற்காகவே ஆட்டங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால், ஆட்டங்கள் எல்லாம் அரங்கேறுவதில்லை. ஆட்டங்கள் பலவகை; அதில் அரங்காடிகள் பலவகை. ஆட்டங்கள் அரங்கேறுவது அவ்வளவு இலகல்ல. அதற்கு அரங்காடிகளின் பங்களிப்பு முக்கியம். அரங்காடிகள் இருந்தாலும் ஆட்டம் அரங்கேறும் என்பதற்கான உத்தரவாதம் எதையும் தரவியலாது. அரங்குகள் சரியில்லாவிடின் ஆட்டம் அரங்கேறாது. ஆட்டம் அரங்கேறுவதற்கு விருப்பு மட்டும் போதாது. அதற்குப் பல அம்சங்கள் ஒருங்கே அமைய வேண்டும். அடி சறுக்கினால் ஆட்டமே ஆட்டங்காணும்.

(“ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்

(Gopikrishna Kanagalingam)

இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம்.  இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது.

(“‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்

(க. அகரன்)

‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை.

(“தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பெண்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. இதில்  கட்சியின் தலைவர் சுகு சிறீதரன் உரையாற்றினார் ஊழல் அற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த தாம் செயற்படப் போவதாக இதில் மக்கள் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மக்களுடன் இணைந்து மக்களுக்கான ஆட்சியை அமைகப் போவதாக முன்னாள் வடக்கு கிழக்குமாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் தனது உரையில் தெரிவித்தார் மேலும் திருகோணமலை நகர சபையின் முதன்மை வேட்பாளர் சத்தியன் சிவகுமார் தான் தொடர்ந்தும் திருகோணமலை மக்களுடன் இணைந்து பல்வேறு மக்களுக்கான பணிகளை செய்துவருவதாகவும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான உபகரணங்கள் சீருடைகள் பெண்தலைமத்துவக் குடும்பங்களுக்கான செயற்திட்டங்கள் இளைஞர்களை சமூகத்தில் முன்னிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். கூடவே தன்னுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றிவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்