இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்

சரி,தெரிந்து கொள்வதற்கு முன்பு இவருக்கு உங்கள் நண்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான். DR. JONAS SALK, இவர்தான் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு. இவர் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பிறகு Patented Right வாங்க மறுத்துவிட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம் சினிமாப்படம் Copy rights வாங்குவது போல). அவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலே மிகப்பெரிய பணக்காரர் ஆகியிருப்பார்.

(“இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை போரின்போது நடந்தது என்ன? – 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்

இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து.

(“இலங்கை போரின்போது நடந்தது என்ன? – 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத் தமிழர் அரசியல்

ஈழத்தில் தமிழர் வரலாறு பல்லாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது லெமூரியாவிலிருந்து பிரிந்த துண்டம் எனும் கதையாடல்களும் ஏழாயிரம் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் கோளினால் தமிழகத்திலிருந்து பிய்ந்த தொங்கு தசை எனும் நம்பிக்கைகளும் பழங்குடிகள் பற்றிய வரலாற்று செய்திகளும் பின்னர் எல்லாளன் , சேனகன் , குட்டன் தொடர்ந்து வந்த சேர சோழ பாண்டிய தொடர்புகளும் , குளக்கோட்டன், ஆடகசெளந்தரி, வன்னிபங்கள், மாகோன் சங்கிலியன், பண்டார வன்னியன் என நீண்ட அரசுரிமை வரலாறும்.ஈழம் முழுவதும் கண்டெடுக்கப் பட்ட தொல்லியல் சான்றுகளும் கல்வெட்டுக்களாயும் வாழ்விட அழிபாடுகளாயும்,தாழி மற்றும் மட்பாண்ட சுடு மண் சிற்பங்களும் குளங்களை அண்டி கட்டமைக்கப் பட்ட ஊர் குடியிருப்புகளும் ஆற்றோர படுக்கைகளின் வழி நீண்ட தொன்மைக் கால வாழ்விடங்களும் உதாரணமாக மாவலிக் கரையில் செழித்திருந்த திருக்கரசை நாகரிக மரபு என நம் வரலாற்று சுவடுகள் .

(“ஈழத் தமிழர் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

போரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை

இலங்கை உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது இலங்கையின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று எதிர்வு கூறுவது சாதாரணமாக எல்லோருக்குமே மிகக்கடினமாக இருந்தது. புலிகளிலிருந்து இலங்கை இராணுவம் வரை, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களென பல ஆயிரக்கணக்கனோர் யுத்தத்தால் மடிந்திருந்தனர். இவ்வாறு மடிந்தவர்களின் எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாகவே, காயமுற்று அங்கங்களை இழந்தவர்களும் பாரிய தழும்புகளை சுமந்தவர்களும் இருந்தார்கள். நான்கு இலட்சம் பேரளவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைவிட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13000 பேருக்கு மேற்பட்டவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

(“போரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் 2018 தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

தேர்தலின் பின்னணியும் நாமும்

2018 பெப்ரவரி 10ஆம் திகதி இலங்கையின் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சி அமைப்பு (EROS), ஜனநாயக தமிழரசுக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

(“உள்ளுராட்சி சபைகள் தேர்தல் 2018 தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சி

நீலவானனும் பச்சைமாலனும்
பொற்காசுக்கு அடிமையாகி
பெற்றதாயைத்துகிலுரிந்து
பிறத்தியார்க்கு அம்மணங்காட்டி
துச்சாதனம் பண்ணுகிறார்;
வாளுடைய சிங்கமாய்
கொம்புடைய யானையாய்
செங்கொடிச் சிறுத்தைகளுடன்
பேருக்குக் கூட்டுச்சேர்ந்து
நல்லாட்சி நாமம்வைத்து
நடக்கிறது தர்பார்கூத்து.

(“நல்லாட்சி” தொடர்ந்து வாசிக்க…)

வாழ்ந்தது யாா் ? அழிந்தது யாா் ?

கொடிபிடித்து, விசில் அடித்த வரலாற்றை படியுங்கள்.
MP க்கு குறைந்தபட்சமாக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம்(3,50000/=) ரூபாய்க்கு மேல் கிடைக்கின்றது.
*மாதாந்த அடிப்படை சம்பளம் 54,285 ரூபாவாகும்.
* மாதாந்தம் எரிபொருளுக்கான கொடுப்பனவு 65,000 ரூபா
* பிரத்தியேக செயற்குழுவினருக்கான சம்பளமாக ஒரு இலட்சம் ரூபாவும் ,

(“வாழ்ந்தது யாா் ? அழிந்தது யாா் ?” தொடர்ந்து வாசிக்க…)

ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்காவால் சிக்கல்

ஈரானில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் போராட்டங்கள், தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், அப்போராட்டங்களுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் இடம்பெறும் போராட்டங்கள் அதிகரித்திருப்பதோடு, போராட்டங்களுக்கான எதிர்ப்பும் அதிகரிப்பது போன்ற பார்வை ஏற்பட்டுள்ளது.

(“ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்காவால் சிக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

பெரிய கோடு சிறிய கோடு! சிறு மதியர் செயல்?

பீர்பாலிடம் அரசியல் குறித்து உரையாடிக் கொண்டிருந்த அக்பர் திடீரென்று எழுந்து வந்து மண் தரையில் ஒரு நீண்ட கோடு போட்டார். அமைச்சர்கள் அனைவரையும் கூப்பிட்டார்.

 

அமைச்சர் பெருமக்களேஇதோ தரையில் ஒருகோடு போட்டிருக்கிறேன். இந்தக் கோட்டை சிறியதாக்க வேண்டும். ஆனால் இந்தக் கோட்டை அழிக்க கூடாது. இதுதான் நிபந்தனைஎன்றார் அரசர். அமைச்சர்கள் கோட்டை உற்றுப் பார்த்தார்கள்.

(“பெரிய கோடு சிறிய கோடு! சிறு மதியர் செயல்?” தொடர்ந்து வாசிக்க…)