உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

முடிவுகள் இரவு 8 மணிக்கு தான் வெளிவரும் மாவட்ட மக்களின் வாக்களிப்பு வீதம் அறிய ஆவலாயிருக்கிறம் யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78% மன்னார்: 80% வவுனியா : 70% திருகோணமலை : 85% மட்டக்களப்பு :62 % அம்பாறை : 70%

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

எதிர்பார்த்தபடியே  வல்வெட்டித்துறை நகரசபை அறிவிக்கப்பட்ட 7 வட்டாரங்களும் TNA க்கு. ஊர்காவற்துறை ஈபிடிபி வசமாகும் வாய்புகள் அதிகமாகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

வாகரை பிரதேசசபையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. வாகரை 6ஆம் வட்டாரம் ஊரியன்கட்டு,ஏழாம் வடடாரம் பனிச்சங்கேணி,8ஆம் வட்டாரம் மாங்கேணி என்பவற்றில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் முன்னணியில் இருப்பதாக அறிய முடிகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

வவுனியா நகரசபையில் கூட்டமைப்பிற்கு பினால் கூட்டணி. ஆனந்தனின் 2 கோடி பிரச்சாரம் நன்கு வேலை செய்துள்ளது. செட்டிகுளத்தில் சூரியன் உதித்துள்ளான்வ. வுனியா நகரசபைத் தேர்தலில் கோவிற்குளம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற  PLOTE சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இருந்த அல்லது புலிகளின் முக்கியஸ்தர்கள் பிறந்த இடங்களில் சைகிள் முன்னிலை வகிக்கின்றது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

தீவுப் பகுதிகளில் அனேக இடங்களை தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளது. இக்கட்சியன் தேசிய அமைப்பாளர்கள் சீவரத்தினம் ஜெகன் போன்றவர்களின் கணிசமான பிரச்சாரம் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

இன்று தேர்தல் …….

எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல் 1965 தான்.வட்டுக்கோட்டையில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் எனது தந்தையும் தமிழ் காங்கிரஸ் கட்சியில் திரு சுப்பிரமணியமும், குடைச்சின்னத்தில் திரு தம்மிப்பிள்ளையும் தேர்தலில் நின்றனர். “ எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம், போடு புள்ளடி வீட்டுக்கு நேரே, எங்கள் அரசு தமிழரசு, தூக்கு மேடை பஞ்சு மெத்தை, சிறைச்சாலை பூஞ்சோலை போன்ற கோஷங்களை முதல் தடவையாக கேட்ட நினைவுகள். இந்த தேர்தலில் எனது தந்தை 11,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

(“இன்று தேர்தல் …….” தொடர்ந்து வாசிக்க…)

62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

(“62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சி தேர்தல்

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பில், 70 சதவீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வேட்பாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது. வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர்.

(“The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள்” தொடர்ந்து வாசிக்க…)