அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Month: February 2018
அரசியல் நெருக்கடி: 3 மணிநேரம் விவாதிக்க இணக்கம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 4 மணிமுதல் 7 மணிவரையில் விவாதிப்பதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, இந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியிருந்தார். அந்தக் கோரிக்கையை அடுத்து, சபையில் அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டது. அதன்பின்னர், சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்தே, அரசியல் நெருக்கடி தொடர்பில், மூன்று மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக, நடத்தப்படவுள்ளது.
‘கூட்டமைப்பு அரசாங்கம் நாளை மலரும்’
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆதரவுடன், கூட்டமைப்பு அரசாங்கம் நாளை (20) செவ்வாய்க்கிழமை அமைக்கப்படும்” என தென் மாகாண ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தோழர் ஜோ! ஞாபக வெளியில் இருந்து……
பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட கட்சியினூடாக தனது சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட தோழர் ஜோ செனிவிரட்ண 60களின் பிற்பகுதியில் அதிலிருந்து வெளியேறி 1970 களின் முற்பகுதியில் ஏற்பட்ட இளைஞர் எழுச்சி காலத்தில் புதிய தேடல்களில் ஈடுபட்டார்.
1970 களின் முற்பகுதியில் இன சமூக ஒற்றுமைக்கு சவாலான நிலைமைகள் உருவான போது இன சமூக நல்லுறவிற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?
எம்மை நாம் இலங்கையர் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்ய எத்தனையோ இனக்கலவரங்கள் ஏற்ப்படுத்தப்பட்டு ஈழம் தான் முடிந்த முடிவு என நாம் முடிவெடுத்த வேளையில் அது தவறு ஒட்டுமொத்த அடக்குமுறமைக்கு எதிராகா நாம் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனையில் சிங்கள முற்ப்போக்கு சிந்தனையாளரை தன் வசம் ஈர்த்தவர் நாபா.
(“நாபாவை நேசித்த சிங்களத்தின் ஜோ செனிவரத்ன தோழர் நினைவாக!?” தொடர்ந்து வாசிக்க…)
மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு
உங்களது வெல்லும் தமிழீழம் மாநாடு பற்றிய விளம்பரம் பார்த்தேன். பிரமிக்க வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் இயக்கமும் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் இடைவிடாது போராடி வருகிறீர்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்காக உங்களது கரிசனை எம்மைப் புல்லரிக்கச் செய்கிறது.
போய் வாருங்கள் ஜோ!….
இலங்கையில் தோழர் வரதராஜபெருமாள் தலைமையில் அமைந்த வடகிழக்கு மாகாண அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் தோழர் ஜோ செனவிரத்ன. இவர் பிறப்பால் சிங்களவர். எண்ணத்தால் ஒரு சர்வதேசியவாதி. இடதுசாரிக் கொள்கைகளில்
நாட்டம் பெற்று தொழிற்சங்க இயக்கத்தில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னாளில் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எப் இயக்கத்துடன் இணைந்து
தீவிர அரசியல் செயல்பாடுகளில் களம் கண்டவர். இவர் ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. ஓஷோ குறித்த இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள்.
(“போய் வாருங்கள் ஜோ!….” தொடர்ந்து வாசிக்க…)
ஜோ!
(தோழர் சேகர் – பாஸ்கரன்)
சுடரும் தீப்பந்தமாய் எழுந்து, தன் புரட்சிப் பணியை முடிந்தவரை முன்னெடுத்துப், பல உள்ளங்களில் சிந்தனைச் சுடரேற்றிவிட்டு, காலச் சக்கரத்தின் சுழற்சின் தவிர்க்கமுடியாத இயற்கை விதியோடு இணைந்து நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்ட அன்புத் தோழன் ஜோவுக்கு இதயம் கனிந்த நன்றியறிதலோடு பிரியாவிடையளிப்போம் தோழர்களே!
மனித உரிமை: திரைப்படக் காட்சி
தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்
தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவரான மந்துவிலைச் சேர்ந்த இரத்தினம் அவர்கள் சக நண்பனான பனியன் ராசன் என்பவனால் நயவஞ்சகமாக எதிரிகளின் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று. 18/02/ 1968 இல் கொல்லப்பட்டார்.1935 ஆம் ஆண்டு பிறந்த அவர் முப்பத்து மூன்றாவது வயதில் கொல்லப்பட்டார். இன்று அவரது ஐம்பதாவது நினைவு தினம். (“தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னணிப் போராளி இரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)