காசி ஆனந்தனை நான் 1977 காலப்பகுதியில் இந்தியாவில் சந்தித்தேன். தமிழரின் பிரச்சனையின் அடிப்படை அவர்கள் சிறுபான்மையாயிருப்பதால் தான். எனவே அதற்கான வழி சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தை குறைக்கவேண்டும் என்று அதற்கான திட்டத்தை கூறினார். ஒன்று குளங்களில் சயனைட்டை கலப்பது. இரண்டு ஐஸ் பழத்தில் கருத்தடை மாத்திரையை கலந்து விற்பது. இதனைக்கேட்டு நான் மிக அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் 83 கலவரத்தின் பின்னர் எனது ஊரில் ஒருவர் என்னை சந்திக்கவேண்டும் என அடாப்பிடியாக நின்றார். அவரை நான் சந்தித்தபோது தனது பிளானை கூறினார். காசி ஆனந்தனின் அதே சிந்தனை முறை. அவரது ஐடியா பெரகெராவில் பல்லாயிரக்கணக்காக சிங்கள மக்கள் கூடுவார்கள் எனவே விடுதலைப்புலிகள் அங்கு சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து முழுக்கூட்டத்தையும் அழித்தால் இரு இனங்களும் எண்ணிக்கையில் சமமானால் பிரச்சனையை தீர்க்கலாம் என்றார். இதனை ஏன் சொல்லவருகிறேன் என்றால் இனத்துவ மன நிலை இன்னொரு இனத்தை அழிப்பதை பற்றிய எவ்வித தார்மீகத்தையும் கொண்டிருப்பதில்லை.