1985 இல் புலிகளின் 3வது பயிற்சி முகாமில் புலிகளின் ஜனநாயக விரோத போக்குகளிற்கு எதிராகவும் சுத்த ராணுவாத கட்டமைப்புக்கு எதிராகவும் கேள்வி கேட்ட போராளி கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் தன் சுய நலத்திற்க்காக கல்யாணம் செய்யக் கூடாது என்ற அமைப்பு விதியினை மாற்றி பிரபாகரன் திருமணம் செய்து கொண்டமைக்கு எதிராகவும் பலர் அதிருப்தி அடைந்து வெளியேறினார்கள். அதில் தயாநிதி (இயக்கப் பெயர் ரு+பன்) – கப்புதூ – நெல்லியடி தன்னுடன் வெளியேறிய பலருடன் சேர்ந்து மீண்டும் செயற்படும் நோக்கில் செயற்பாடுகளை மேற்க் கொண்டார். இவர் வேதாரணியம் சென்ற வேளை பொட்டனால் ரகசியமாக கடத்தப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
Month: April 2018
ஆடைகளும் நிர்வாணங்களும்
(முகம்மது தம்பி மரைக்கார்)
ஒரு கதை சொல்லவா?
‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார்.
இலங்கைப் பாடசாலைகளின் தரம்….?
பாடசாலைகள் உண்மையில் என்ன செய்கின்றன. அதன் கல்வித்திணைக்களங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வடக்கு – கிழக்கில் தூங்கப் போகின்றன
தேவராசா (தோழர் சீலன்) கண்ணீர் அஞ்சலி
தேவராசா (தோழர் சீலன்),51 வயது.
22.03.2018 அன்று அதிகாலை 12.15 மணியளவில் வயிற்றில் ஏற்பட்ட கட்டியை அகற்ற சத்திரசிகிச்சை செய்தபோது அது பலனளிக்காமல் இயற்கை எய்திவிட்டார். அன்னார் மட்டக்களப்பு மகிழுரைச்சேர்ந்தவர். நாம் இடம் பெயரும் நிலை ஏற்பட்டபோது ஒரிசா, திருச்சி கொட்டப்பட்டு, புழல் போன்ற இடங்களில் இருந்தவர். பின்னர் மலேசியா சென்றார். கடந்த மூன்று மாதமாக அவரது சொந்த ஊரில் இருந்தபோதே இந்நிலை ஏற்பட்டது. சிறந்த பொது நோக்காளன். தோழர் களுடன் தோழைமையுடன் பழகும் குணமுடையவர்.
அவரது இறுதிக்கிரியை மகிழூரில் நடைபெற்றது.
தோழருக்கு SDPT யினரின் கண்ணீர் அஞ்சலி.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை
தமிழ் நாடு ராமநாதபுரம் மாவட்ட மேல் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 10 ஆண்டு தண்டனை விதித்து தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி பகுதியில் தமிழக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தக்காரில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற காந்தன் (40), உச்சிப்புளியை சேர்ந்த ராஜேந்திரன்(40), கார் டிரைவர் சசிக்குமார்(41) இருந்துள்ளனர். இவர்கள் வந்தக் காரை சோதனையிட்டபோது அவர்களிடம் இருந்த 4 ஜி.பி.எஸ்.கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், ரொக்கம் ரூ.65 ஆயிரம் ஆகியனவற்றை பறிமுதல் செய்தனர்.
(“தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை” தொடர்ந்து வாசிக்க…)
Funeral arrangements of Late Renuka Amarasinghe
It is with deep sadness that we announce the funeral arrangements of Late Renuka Amarasinghe whose death together with that of many others threw entire city of Toronto into deep sorrow about a week ago. Late Renuka was loved and respected by all who knew her especially the Toronto Mahavihara members.
The funeral arrangements are as follows:
Viewing: Sunday 6th of May, 5.00-9.00PM
Monday, 7th of May, 8.00-11.00AM
Religious Service (Pansakula): Sunday, 6th of May, 7.00PM
Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre (Markham)
8911 Woodbine Avenue
Markham, ON L3R 5G1
Single mother Renuka Amarasingha killed in Toronto van attack
தோழர் முகுந்தன்- முருகநேசன்
வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாக கொண்ட தோழர் முருகநேசன் இலங்கை விவசாய பீடத்தின் அனுராதபுரம் மகா இலுப்பள்ளமையிலும் பின்னர் பேராத…னை பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக கடமையாற்றியவர். மகா இலுப்பள்ளமையில் கற்பிக்கும் போதே அவர் எமது இயக்கத்திற்கு வந்தவர். அவருடைய மாணவரும் தோழருமான மானிப்பாய் பாஸ்கரன் ஊடாகவே அவருக்கு இயக்கத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. பல்கலைக்கழக வகுப்புக்களுக்கப்பால் மாணவர்களுடன் சினேகிதமான இளம் மாணவ ஆசிரியர். ஓய்வு நேரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு கராத்தே உட்பட உடல் உளப்பயிற்சிகளில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டவர்
ஈழப்போராட்டத்தில் ஈபிஆர்எல்எப் இன் வித்தியாசமான அணுகுமுறை பற்றிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர் மானிப்பாயிலும் வட்டுக்கோட்டையிலுமாக எம்முடன் பல கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டவர். தேசியம் சோசலிசம் ஜனநாயகம் நவீன முறையில் விவசாயம் உள்ளிட்ட வளங்களை கையாள்வது உட்பட பல விடயங்களை அவருடன் கலந்துரையாடியிருப்போம்.
மரண அறிவித்தல்
தோழர் சாந்தனின் (க. தம்பையா — லண்டன்) அன்புத் தாயார் கதிரவேலு நாகலட்சுமி, நாவலர் வீதி, கடைச்சாமி ஒழுங்கை, யாழ்ப்பாணம். இன்று (27. 04 . 2018) காலை 9 மணியளவில் காலமாகிவிட்டார். அவருடைய இறுதிக்கிரியைகள் 30.04.2018 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் .
தோழர்கள்
திருகோணமலை: பெண்கள் உடை அமைப்பு பற்றிய எதிர் வினையாக்கம்
(“திருகோணமலை: பெண்கள் உடை அமைப்பு பற்றிய எதிர் வினையாக்கம்” தொடர்ந்து வாசிக்க…)
ஓர் இனப்பிரச்சனையும் ஒர் ஒப்பந்ததும் நிகழ்வில்…
கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் வரதராஜப்பெருமாளின் உரை (காணொளி….)