நேற்று (05.05.2018) மீண்டும் ஒரு 24வயது இளம் பெண் நுண்கடனுக்குப் பலி. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நுண்கடன் அரக்கனுக்கு இது 7வது உயிர்ப்பலி. வந்தாறுமூலையைச் சேர்ந்த டிசாந்தினி என்ற 24வயது இளம்பெண் நுண்கடனால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை “மட்டக்களப்பு இளைஞர் வலையமைப்பு” செய்தி வெளியிட்டுள்ளது.
Month: May 2018
மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது
நீட் தேர்வு எழுதுவதற்காக
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி
மாணவர் கஸ்தூரி மகாலிங்கம்
தனது தந்தை கிருஷ்ணசாமியுடன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளார்.
(“மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)
உணவகம் ஒன்றின் தயாரிப்புகள் கனடா உணவுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் திருப்பி அழைக்கப்பட்டிருக்கின்றது
புத்தக வெளியீடு
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை
(கே. சஞ்சயன்)
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.
(“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை” தொடர்ந்து வாசிக்க…)
மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி?
(எம். காசிநாதன்)
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும்.
(“மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி?” தொடர்ந்து வாசிக்க…)
கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும், கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்
கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன.
போருக்கு பிந்திய யாழ். மாவட்டத்தில் இராணுவத்தால் இந்து ஆலயம் எதுவும் சீரழிக்கப்படவே இல்லை
2009 ஆம் ஆண்டுக்கு பிந்திய வருடங்களில் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டு கால பகுதியில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் காரணமாக இந்து ஆலயங்களுக்கு ஏதேனும் சேதாரங்கள், பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்குமானால் அவற்றை இராணுவத்தின் செலவிலேயே நிவர்த்தி செய்து தருவார்கள் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் அய்யூப் அஸ்மின்: பின்னணி இதுதான்!
(எஸ். ஹமீத்)
கடந்த சில தினங்களாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார். இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை அவர் வெகுவாகக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதனால் ஊடகங்களில் அவர் பலவாறாக விமர்சிக்கப்படுகின்றார். உண்மையில் இதன் பின்னணியில் அய்யூப் அஸ்மினின் மிகக் கேடுகெட்ட ஓர் அரசியல் இருக்கிறது. இதுபற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
(“முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் அய்யூப் அஸ்மின்: பின்னணி இதுதான்!” தொடர்ந்து வாசிக்க…)
பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே
(யோகா வளவன் தியா)
நான் அறிந்தவகையில் கே பி , பிரபாகரனின் நல்ல நண்பர். அவரது நல்லது கெட்டதுகள் அனைத்திலும் பங்கு பெற்றவர். பிரபாகரனின் திருமணத்தின் போது மாப்பிள்ளை தோழனாக இருந்தது கேபி யே. இயக்கம் அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரனின் குடும்ப நண்பராகவும் இருந்தார். விடுதலைபுலிகளின் வளர்ச்சியில் பிரபாகரனுக்கு அடுத்தபடி கேபி க்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது ஆயுத கொள்வனவு. கள்ள சந்தையில் ஆயுதம் வாங்குவது என்பது சாதாரண விடயமல்ல. இங்கு பாங்கில் பணத்தை போட அங்கு ஆயுதம் டிலிவறி செய்யும் விடயமல்ல. நூறு பெயில் டீல்களினுடாகவே நல்ல ஒரு தொடர்பு கிடைக்கும். அவற்றை கேபி செவ்வனே செய்து வந்தார்.
(“பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே” தொடர்ந்து வாசிக்க…)