அண்மைக் நாட்களில் திருகோணமலை இந்துக்கல்லூரி ‘ஆடை மரபு’ சார்ந்து முஸ்லிம் ஆசிரியர்கள் அபயா அணிய தடை விடுக்கப்பட்டு பின் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து முகப்புத்தகத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நானும் முன்னெப்பொழுதுமில்லாதவாறு பங்கு பற்றியுள்ளேன். எனது கப்பியூட்டரும் ‘அழகி’யும் மக்கர் பண்ணியதால் ஆங்கிலத்தில் எனது விவாதங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதனால், “நீ என்ன தமிழில் பேச முடியாதா,” எனக்கூறி நான் சொன்ன முக்கியவரலாற்று குறிப்புக்களை ஒருவர் தனது போஸ்ட்டிலிருந்து வெட்டியுமுள்ளார். இவ்விவாதங்களில் இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு சில தமிழரும் தீவிரமாக பங்களிக்கின்றனர்.
(“இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….” தொடர்ந்து வாசிக்க…)